தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆண்டுதோறும் அனுஸ்டித்துவரும் வீரமக்கள் தினத்தின் 33ஆம் வருட நினைவுதின நிகழ்வு புளொட்டின் பிரான்ஸ் கிளையினரால் பிரான்சில் நேற்று 16.07.2022 சனிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.

கழகத்தின் பிரான்ஸ் கிளை இணைப்பாளர் தோழர் ரங்கா அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது தோழர்கள் உதயகுமார், நந்தன் ஆகியோர் நினைவுச்சுடர் ஏற்றினர்.

தொடர்ந்து மௌன அஞ்சலி இடம்பெற்று மலர்மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி
செலுத்தப்பட்டது.

நிகழ்வில் கழகத்தின் பிரான்ஸ் கிளை தோழர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.