முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் சின்னச்சாளம்பன் பகுதியைச் சேர்ந்த நட்சத்திரா வானம் ஆகிய இரு மகளிர் அமைப்புக்களுக்கு சுழற்சிமுறை கடனுதவியாக ரூபாய் 50,000/= நேற்றையதினம் வழங்கி வைக்கப்பட்டது. ஜேர்மனியில் வசிக்கும் சிவகுமாரன் கோபிகா அவர்களின் (19.12.2022) பிறந்தநாளை முன்னிட்டு அவரது இசை ஆசிரியை திருமதி Schroder தனது வாழ்த்துக்களைத் தெரிவித்து கழகத்தின் ஜேர்மன் கிளையின் ஊடாக வழங்கி வைத்த நிதியில் இந்த கடனுதவி வழங்கப்பட்டது.
மிருசுவில் பகுதியில், 2000ஆம் ஆண்டு காலப்பகுதியில் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட எண்மரின் 22 ஆவது ஆண்டு நினைவேந்தல், மிருசுவில் தேவாலயத்துக்கு முன்னால் நேற்று (20) நடைபெற்றது. நினைவேந்தல் நிகழ்வில் பிரதான ஈகைச்சுடரை, மூன்று பிள்ளைகளையும் இராணுவத்தின் படுகொலைக்கு பறிகொடுத்த தாயார் ஏற்றி வைத்தார்.
அனுராதபுரம் – வவுனியா ரயில் வீதி 5 மாதங்களுக்கு மூடப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த வீதியின் திருத்தப் பணிகள் காரணமாக எதிர்வரும் ஜனவரி மாதம் 5ஆம் திகதி முதல் வீதி மூடப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி அனுராதபுரம் – வவுனியா வீதியில் ரயில் கால அட்டவணையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2021 (2022) ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு முதற்தடவையாக தோற்றி பரீட்சையில் சித்தியடைந்து 2024 ஆம் ஆண்டு க.பொ.த உயர் தரப் பரீட்சைக்கு தோற்றுவதற்கு தகுதியுடைய, பெருளாதாரப் பிரச்சினையுடைய மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தினால் புலமைப்பரிசில் வழங்கும் வேலைதிட்டத்திற்காக கோரப்பட்டிருந்த விண்ணப்பங்களுக்கான இறுதி திகதி டிசெம்பர் 23 ஆம் திகதியுடன் முடிவுக்கு வருகிறது.
இந்திய ரூபாயில் இருதரப்பு வர்த்தகத்தை மேற்கொள்வதற்காக, இலங்கையைச் சேர்ந்த வங்கி ஒன்று, இந்தியாவின் ஸ்டேட் வங்கியில் வெட்ஸ்ரோ கணக்கைத் திறந்துள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. ஸ்டேட் வங்கியின் தெற்காசிய பிராந்தியத் தலைவர் விகாஸ் கோயலுடன் உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இதுகுறித்த விடயங்களைப் பற்றி செவ்வாய்க்கிழமை (20) கலந்துரையாடியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமரர் தோழர் முருகேசு நெல்சன்
கிளிநொச்சி கோணாவில் ஆரம்ப பாடசாலை மாணவனுக்கு (20.12.2022) இன்று சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக 4100/= பெறுமதியான சப்பாத்து வழங்கிவைக்கப்பட்டது.