ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைய, சர்வதேச வர்த்தகம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, சர்வதேச வர்த்தக அலுவலகம் ஒன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சர்வதேச வர்த்தகம் தொடர்பான நிறுவனங்களால் தனித்தனியாக மேற்கொள்ளப்படும் அணுகுமுறைகளில் காணப்படும் குறைபாடுகளைத் தவிர்ப்பதன் மூலமும், அதன் செயற்பாடுகளை மிகுந்த செயற்திறனுடன் முன்னெடுக்கும் வகையிலும் இந்த புதிய அலுவலகம் நிறுவப்படவுள்ளது. Read more
திருகோணமலை ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஒரு தொகை வெடிபொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கைத்துறை முகத்துவாரம் பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து இன்று மாலை குறித்த வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. 47 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரச மற்றும் அரச அனுசரணையுடனான தனியார் பாடசாலைகளுக்கு நாளை முதல் எதிர்வரும் முதலாம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. குறித்த பாடசாலைகளின், மூன்றாம் தவணையின், முதலாம் கட்டம் இன்றுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, மூன்றாம் தவணையின், இரண்டாம் கட்டம், ஜனவரி 2 ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. R
புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும் திருநெல்வேலி மாரியம்மன் வீதியை வதிவிடமாகவும் கொண்ட திரு குழந்தைவேல் சோதிராசா அவர்கள் நேற்று (21.12.2022) புதன்கிழமை காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம். இவர் கட்சியினுடைய ஜெர்மன் கிளைத் தோழர் சி.தர்மினி அவர்களின் அன்புத் தந்தையும், அமரர் தோழர் கா.சிவகுமாரன் (சுப்பர் – ஜெர்மனி) அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.