 கிளிநொச்சி முரசுமோட்டை 8ம் கட்டையைப் சேர்ந்த திரு. காத்தமுத்து இலட்சுமணன் அவர்கள் நேற்று (28.12.2022) புதன்கிழமை காலமானதையிட்டு மிகுந்த துயரடைகின்றோம். இவர் தோழர் குணா (குணசீலன்) அவர்களின் அன்புத் தந்தையும், தோழர் தெய்வம் (தெய்வேந்திரம்) அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.
கிளிநொச்சி முரசுமோட்டை 8ம் கட்டையைப் சேர்ந்த திரு. காத்தமுத்து இலட்சுமணன் அவர்கள் நேற்று (28.12.2022) புதன்கிழமை காலமானதையிட்டு மிகுந்த துயரடைகின்றோம். இவர் தோழர் குணா (குணசீலன்) அவர்களின் அன்புத் தந்தையும், தோழர் தெய்வம் (தெய்வேந்திரம்) அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார். 
		     கழகத்தின் பிரித்தானிய கிளைத் தோழர் நடாமோகன் அவர்களின் அன்புத்தாயார் திருமதி. நடராஜா மலர்மணி அவர்கள் நேற்றையதினம் கனடாவில் காலமானார். அன்னையின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்து கொள்வதோடு அன்னைக்கு எமது இதயபூர்வ அஞ்சலியை சமர்ப்பிக்கிறோம்.
கழகத்தின் பிரித்தானிய கிளைத் தோழர் நடாமோகன் அவர்களின் அன்புத்தாயார் திருமதி. நடராஜா மலர்மணி அவர்கள் நேற்றையதினம் கனடாவில் காலமானார். அன்னையின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்து கொள்வதோடு அன்னைக்கு எமது இதயபூர்வ அஞ்சலியை சமர்ப்பிக்கிறோம். இலங்கைக்கு மேலும் ஒரு தொகுதி மருந்து மற்றும் மருத்துவ பொருட்கள் நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா மற்றும் மெக்சிகோவுக்கான இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்க இதனைக் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ‘ஹார்ட் டூ ஹார்ட் இன்டர்நேஷனல்’ என்ற அமைப்பு இந்த மருத்துவ உதவிகளை வழங்கியுள்ளது.
இலங்கைக்கு மேலும் ஒரு தொகுதி மருந்து மற்றும் மருத்துவ பொருட்கள் நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா மற்றும் மெக்சிகோவுக்கான இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்க இதனைக் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ‘ஹார்ட் டூ ஹார்ட் இன்டர்நேஷனல்’ என்ற அமைப்பு இந்த மருத்துவ உதவிகளை வழங்கியுள்ளது.  இலங்கையில் 5 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சர்வதேச செஞ்சிலுவை குழு சுட்டிக்காட்டியுள்ளன. இலங்கை தற்போது எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி சமூகத்திலுள்ள அனைவரையும் பாதித்துள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் சர்வதேச செஞ்சிலுவை குழு குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளன.
இலங்கையில் 5 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சர்வதேச செஞ்சிலுவை குழு சுட்டிக்காட்டியுள்ளன. இலங்கை தற்போது எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி சமூகத்திலுள்ள அனைவரையும் பாதித்துள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் சர்வதேச செஞ்சிலுவை குழு குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளன.  யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அளவுக்கு அதிகமாக போதைப்பொருளை ஊசி மூலம் உட்செலுத்திக்கொண்ட இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞனுடன் போதைப்பொருளை உட்செலுத்திக்கொண்ட மூன்று பேரை பொலிஸார் தேடி வரும் நிலையில் அவர்கள் தலைமறைவாகியுள்ளனர்.
யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அளவுக்கு அதிகமாக போதைப்பொருளை ஊசி மூலம் உட்செலுத்திக்கொண்ட இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞனுடன் போதைப்பொருளை உட்செலுத்திக்கொண்ட மூன்று பேரை பொலிஸார் தேடி வரும் நிலையில் அவர்கள் தலைமறைவாகியுள்ளனர்.  உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுபவர்கள் தமது வேட்புமனுத் தாக்கல் செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனவரி மாதம் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி முதல் வாரத்தில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுபவர்கள் தமது வேட்புமனுத் தாக்கல் செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனவரி மாதம் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி முதல் வாரத்தில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ரஷ்யாவின் “ரெட் விங்ஸ்” விமான நிறுவனம் இன்று (29) முதல்  இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பித்துள்ளது. அதன்படி, 398 சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு ரெட் விங்ஸ் விமானம் இன்று மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
ரஷ்யாவின் “ரெட் விங்ஸ்” விமான நிறுவனம் இன்று (29) முதல்  இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பித்துள்ளது. அதன்படி, 398 சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு ரெட் விங்ஸ் விமானம் இன்று மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.