காங்கேசன்துறை துறைமுகத்தை உள்வருகை மற்றும் வெளியேறலுக்கு அனுமதியுடைய துறைமுகமாக அறிவித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. டிசம்பர் 23ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டு, இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியாக்கப்பட்டுள்ளது. Read more
கன்சியூலர் அலுவலகத்தில் ஆவணங்களை சான்றுப்படுத்துவதற்கான கட்டணம் ஜனவரி முதலாம் திகதி முதல் திருத்தப்படவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் 16 ஆம் திகதி குறிப்பிட்டு வௌியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானிக்கு அமைய, கட்டண திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 1 ஆம் திகதி முதல் வாகனங்களை புதிதாக பதிவு செய்தல் மற்றும் வாகன உரிம மாற்றத்தின் போது வாகன இலக்கத் தகட்டில் உள்ள மாகாண குறியீடுகள் அகற்றப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிசாந்த வீரசிங்க கொழும்பில் இன்று (30) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
யாழ். மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். நாளை சனிக்கிழமை (31) முதல் தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக கடிதம் முலம் யாழ். மாநகர ஆணையாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.