Header image alt text

துயர் பகிர்வோம்!

Posted by plotenewseditor on 29 December 2022
Posted in செய்திகள் 

கழகத்தின் பிரித்தானிய கிளைத் தோழர் நடாமோகன் அவர்களின் அன்புத்தாயார் திருமதி. நடராஜா மலர்மணி அவர்கள் நேற்றையதினம் கனடாவில் காலமானார். அன்னையின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்து கொள்வதோடு அன்னைக்கு எமது இதயபூர்வ அஞ்சலியை சமர்ப்பிக்கிறோம்.

Read more

இலங்கைக்கு மேலும் ஒரு தொகுதி மருந்து மற்றும் மருத்துவ பொருட்கள் நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா மற்றும் மெக்சிகோவுக்கான இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்க இதனைக் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ‘ஹார்ட் டூ ஹார்ட் இன்டர்நேஷனல்’ என்ற அமைப்பு இந்த மருத்துவ உதவிகளை வழங்கியுள்ளது. Read more

இலங்கையில் 5 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சர்வதேச செஞ்சிலுவை குழு சுட்டிக்காட்டியுள்ளன. இலங்கை தற்போது எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி சமூகத்திலுள்ள அனைவரையும் பாதித்துள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் சர்வதேச செஞ்சிலுவை குழு குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளன. Read more

யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அளவுக்கு அதிகமாக போதைப்பொருளை ஊசி மூலம் உட்செலுத்திக்கொண்ட இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞனுடன் போதைப்பொருளை உட்செலுத்திக்கொண்ட மூன்று பேரை பொலிஸார் தேடி வரும் நிலையில் அவர்கள் தலைமறைவாகியுள்ளனர். Read more

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுபவர்கள் தமது வேட்புமனுத் தாக்கல் செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனவரி மாதம் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி முதல் வாரத்தில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ரஷ்யாவின் “ரெட் விங்ஸ்” விமான நிறுவனம் இன்று (29) முதல்  இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பித்துள்ளது. அதன்படி, 398 சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு ரெட் விங்ஸ் விமானம் இன்று மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. Read more

2021 ஆம் ஆண்டில் இரட்டைக் குடியுரிமையைப் பெறுவதற்காக 5,401 பேர் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திடம் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அவர்களில் பெரும்பான்மையானவர்கள் அவுஸ்திரேலியாவில் வசிப்பவர்கள் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. அதன்படி, அவுஸ்திரேலியாவில் வசிக்கும் 1,621 பேர் விண்ணப்பித்துள்ளனர். Read more

28.12.1991இல் பெரியபோரதீவில் மரணித்த தோழர் செல்வம் (சவரியான் குரூஸ் – தாழ்வுபாடு) அவர்களின் 31ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

27.12.2006இல் மரணித்த கழகத்தின் மட்டக்களப்பு – அம்பாறை பிராந்திய முன்னாள் பொறுப்பாளர் தோழர் மாமா (கணபதிப்பிள்ளை பாக்கியராஜ்- களுதாவளை), தோழர் கரிகாலன் (இராஜரட்ணம் ராஜேந்திரன் – தம்பட்டை) ஆகியோரின் 16ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ் கட்சிகளுடன் இணைந்து போட்டியிட இணக்கம் தெரிவித்துள்ளதாக வௌியாகியுள்ள கருத்து தொடர்பாக இரா.சம்பந்தன் இதனைக் கூறினார். Read more