2021 (2022) ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு முதற்தடவையாக தோற்றி பரீட்சையில் சித்தியடைந்து 2024 ஆம் ஆண்டு க.பொ.த உயர் தரப் பரீட்சைக்கு தோற்றுவதற்கு தகுதியுடைய, பெருளாதாரப் பிரச்சினையுடைய மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தினால் புலமைப்பரிசில் வழங்கும் வேலைதிட்டத்திற்காக கோரப்பட்டிருந்த விண்ணப்பங்களுக்கான இறுதி திகதி டிசெம்பர் 23 ஆம் திகதியுடன் முடிவுக்கு வருகிறது. Read more
இந்திய ரூபாயில் இருதரப்பு வர்த்தகத்தை மேற்கொள்வதற்காக, இலங்கையைச் சேர்ந்த வங்கி ஒன்று, இந்தியாவின் ஸ்டேட் வங்கியில் வெட்ஸ்ரோ கணக்கைத் திறந்துள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. ஸ்டேட் வங்கியின் தெற்காசிய பிராந்தியத் தலைவர் விகாஸ் கோயலுடன் உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இதுகுறித்த விடயங்களைப் பற்றி செவ்வாய்க்கிழமை (20) கலந்துரையாடியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமரர் தோழர் முருகேசு நெல்சன்
கிளிநொச்சி கோணாவில் ஆரம்ப பாடசாலை மாணவனுக்கு (20.12.2022) இன்று சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக 4100/= பெறுமதியான சப்பாத்து வழங்கிவைக்கப்பட்டது.
19.12.1990இல் மரணித்த தோழர் சந்திரன் (க.விவேகராசா) அவர்களின் 32ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
தமது சேவை காலத்தை நிறைவு செய்து சொந்த நாட்டுக்கு புறப்பட உள்ள ஐக்கிய நாடுகளின் வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர் இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பின் போது நட்புரீதியான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நான்கு தூதுவர்கள், இரண்டு வதிவிடப் பிரதிநிதிகளின் நியமனங்களுக்கு நாடாளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார். அதற்கமைய, பிரான்ஸுக்கான இலங்கையின் புதிய தூதுவராக மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாசார அமைப்பின் (UNESCO) இலங்கை வதிவிடப் பிரதிநிதியாக நிரோஷனி மனீஷா டயஸ் அபேவிக்ரம குணசேகரவை நியமிப்பதற்கு நாடாளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது.
ஆட்கடத்தல் தொடர்பான விசாரணைகளுக்காக துபாய் மற்றும் ஓமான் நோக்கி பயணித்திருந்த விசாரணை குழு நாடு திரும்பியுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் 02 அதிகாரிகளும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தை சேர்ந்த 04 அதிகாரிகளும் கடந்த 10ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்பட்டிருந்தனர்.
எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு இலங்கையிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள சீருடைப் பொதிகளை நன்கொடையாக வழங்கத் திட்டமிட்டுள்ளதாக சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. சீனத் தூதரகம் தனது டுவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளது. இந்த நன்கொடையின் மூலம் நாட்டின் வருடாந்த சீருடை துணி தேவையில் 70 சதவீதத்தை பூர்த்தி செய்ய முடியும் என சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட உள்நாட்டு இறைவரி (திருத்தம்) சட்டமூலத்தின் சான்றிதழை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, இன்று (19) அங்கீகரித்தார். அதற்கமைய இன்றையதினம் முதல் உள்நாட்டு இறைவரி (திருத்தம்) சட்டம் அமுலாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய வரி விதிப்பு முறையானது மாத வருமானத்தின் மீது அசாதாரணமான அதிகபட்சமாக 36% வரி வரம்புகளை விதிக்கும்.