கடத்தப்பட்டதாக கூறப்படும் ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டர் உயிரிழந்துள்ளார். இவரை சில நபர்கள் கடத்திச் சென்று தாக்கி நாடாவால் கட்டி பொரளை மயானத்தில் விட்டுச் சென்றுதாக தெரிவிக்கப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தின் பணிப்பாளர் சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more
பிரபாகரனுக்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவராகச் செயற்பட்ட குமரன் பத்மநாதன், கருணா அம்மான் போன்றவர்கள் வெளியில் இருக்கிறார்கள். எனவே, தற்போது சிறைச்சாலையில் உள்ள முன்னாள் போராளிகள் 31 பேரை விடுதலை செய்ய வேண்டுமென தெரிவிக்கும் 43ஆவது படையணியின் தலைவர் சம்பிக்க ரணவக்க, சிறைச்சாலையில் உள்ள இராணுவ வீரர்களையும் விடுதலை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்டிருக்கும் அதிகுளிருடன் கூடிய காலநிலையால், வடக்கு, கிழக்கில் பெரும் தொகையிலான கால்நடைகள் மரணமடைந்தன. இந்நிலையில், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இறந்த கால்நடைகளுக்காக நஷ்டஈட்டை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு பேரவைக்கு நியமிக்கப்பட வேண்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதித்துவத்தை உடனடியாக வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வேண்டுகோள் விடுத்தார். பன்முகத்தன்மையின் அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்துவதற்கு தான் ஒருபோதும் உடன்பாடில்லை எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், வடக்கு – கிழக்கு சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்குத் தேவையான சந்தர்ப்பங்களை வழங்குமாறும் கோரிக்கை விடுத்தார்.
“கோட்டா கோகம” மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பிலான வழக்கின் சந்தேகநபரான நாமல் ராஜபக்ஸவிற்கு விதிக்கப்பட்டுள்ள வௌிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக இடைநிறுத்தி கோட்டை நீதவான் திலின கமகே இன்று உத்தரவிட்டுள்ளார். குறித்த வழக்கின் மற்றொரு சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவிற்கு விதிக்கப்பட்டுள்ள வௌிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக இடைநிறுத்துவதா, இல்லையா என்பது தொடர்பான உத்தரவு எதிர்வரும் 16ஆம் திகதி பிறப்பிக்கப்படவுள்ளது.
ஜனாதிபதியுடன் நேற்று (13) நடைபெற்ற நல்லிணக்கம் தொடர்பான கூட்டத்தில் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு தொடர்பில் கலந்துரையாடியதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். வடக்கு, கிழக்கில் உள்ளக சுயநிர்ணயத்துடன் கூடிய ஆட்சி முறை அரசியல், பொருளாதார, கலாசார ரீதியான தீர்வு வேண்டும் என்ற விடயத்தை ஜனாதிபதியிடம் வலியுறுத்தியதாக இரா.சம்பந்தன் குறிப்பிட்டார்.
அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயதை 60 வருடங்களாகக் குறைத்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் இருந்து வைத்தியர்கள் மற்றும் விசேட வைத்திய ஆலோசகர்களை உள்ளடக்குவதை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம், இன்று (14) இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகிய இரு நீதியரசர்கள் அடங்கிய அமர்வு, ஜனவரி 25ஆம் திகதிவரை இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டது.
14.12.1988இல் மருதங்குளத்தில் மரணித்த தோழர்கள் ஆச்சி (சிவபாலன்- சேமமடு), நாதன் (அருணாசலம் நாகராசா), சின்னவன் ஆகியோரின் 34ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
அச்சுவேலி-இடைக்காட்டை பிறப்பிடமாககொண்ட தோழர் அசோகன் 1983இன் பிற்பகுதிகளில் சென்னையில் மேற்படிப்பை தொடர்துகொண்டிருந்தபோது கழகத்துடன் தன்னை இணைத்துக்கொண்டு கழகத்தின் மாணவர் அமைப்பான தமிழீழ மாணவர் பேரவையை(TESO) வளர்த்தெடுப்பதில் தோழர் கேசவன் (சயந்தன்), தோழர் காசி, தோழர் மைக்கேல் உடன் இணந்து முக்கிய பங்கினை வகித்திருந்தார்.
அம்பாறை மற்றும் மன்னார் நகர சபைகளை மாநகர சபையாக தரமுயர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. தற்போதுள்ள உள்கட்டமைப்பு மற்றும் மனித வளத்தைப் பயன்படுத்தி, கூடுதல் வளங்களைச் செலவிடாமல், நகர்ப்புற வளர்ச்சித் தேவைகளை நிறைவேற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.