Header image alt text

உயிர்வாழ்வுச் சான்றிதழ் தரவுக் கட்டமைப்பை, அடுத்த வருடம் மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் புதுப்பிக்காத ஓய்வூதியக்காரர்களின் ஓய்வூதியக் கொடுப்பனவு நிறுத்தப்படும். உயிர்வாழ்வுச் சான்றிதழ் தரவுக் கட்டமைப்பை, அடுத்த வருடம் மார்ச் 31ஆம் திகதிக்கு முன்னர் புதுப்பிக்காத ஓய்வூதியக்காரர்களின் ஓய்வூதியக் கொடுப்பனவு நிறுத்தப்படும் என்று ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் ஜெகத் டி டயஸ் தெரிவித்துள்ளார். Read more

புதிய வரி திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்மேளனம் இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது. Online கற்பித்தல் செயற்பாடு உள்ளிட்ட கடமைகளிலிருந்தும் விலகுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர், பேராசிரியர் ஷ்யாம் பன்னேஹெக்க தெரிவித்துள்ளார்.


13.12.2006இல் மரணித்த தோழர் சேகர் (சீனித்தம்பி பேரின்பநாயகம்) அவர்களின் 16ம் ஆண்டு நினைவு நாள் இன்று..

திருகோணமலை கடற்றொழில் துறைமுகத்தில் இருந்து கடந்த நவம்பர் மாதம் 26ஆம் திகதி சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் அதில் பயணித்த மீனவரொவருவரை 16 நாட்களின் பின்னர் நேற்று (11) இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர். 5 மீனவர்களுடன் பயணித்த ´ஹிம்சரா´ பல நாள் மீன்பிடி இழுவை படகு பாதகமான காலநிலையை தொடர்ந்து சங்கமன் கந்த முனையிலிருந்து 46 கடல் மைல் தொலைவில் படகு கவிழ்ந்தது. Read more

சமுர்த்தி பயனாளர்கள் உள்ளிட்ட அரச உதவிகளை பெறுவோர் தொடர்பில் ஆய்வொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம், சமூக நலன்புரி சபை ஆகியவற்றுடன் இணைந்து இந்த ஆய்வு முன்னெடுக்கப்படுவதாக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி குறிப்பிட்டார். Read more

முதலாம் தரத்திற்கு சிறுவர்களை அனுமதிப்பது, குறித்த பாடசாலைகளின் ஊடாக மாத்திரமே இடம்பெறுவதாகவும் கல்வி அமைச்சின் ஊடாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதில்லை எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் இடைநிலை வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இந்த ஆண்டின் மூன்றாம் தவணை ஆரம்பமாகும் 05.12.2022 ஆம் திகதி முதல் நிறுத்தப்பட்டுள்ளது. Read more

கடும் குளிரான காலநிலை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உயிரிழந்த விலங்குகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இன்று நண்பகல் 12 மணியளவில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உயிரிழந்த விலங்குகளின் எண்ணிக்கை 1,660 ஆக அதிகரித்துள்ளதாக விவசாய அமைச்சின் கால்நடைப் பிரிவு விடுத்துள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. Read more

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் தமிழ் கட்சிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று நாளை இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் நாளை மாலை 5.30 மணியளவில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி உள்ளிட்ட தமிழ் தேசிய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

10.12.2022 அன்று மரணித்த தோழர் ஆண்டவர் ( வவுனியா) அவர்களின் மரணச் சடங்கு செலவிற்காக 11.12.2022 இல் கட்சியின் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக ரூபாய் 20,000/= வழங்கிவைக்கப்பட்டது.

37ஆம் ஆண்டு நினைவஞ்சலி…

Posted by plotenewseditor on 11 December 2022
Posted in செய்திகள் 

அமரர் தோழர் ரவிமூர்த்தி – கொக்குவில்)

இவர் 11.12.1985ல் அரியாலையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இவருடன் தோழர் பண்டாவும் கொல்லப்பட்டார்.