உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக வேட்புமனுக்களை தாக்கல் செய்த அரச ஊழியர்கள், நாளை(09) முதல் மீண்டும் பணிக்கு திரும்ப முடியும் என இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார். இது தொடர்பான சுற்றறிக்கை இன்று(08) வெளியிடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணக்கப்பாட்டுடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. Read more
சிறிதளவு_பணம்_அதிகமாக_கிடைக்கிறது_என்பதற்காக_உங்கள்_காணிகளை_மாற்று_சமூகத்தினருக்கு_விற்க_வேண்டாம்,……
பிரித்தானிய விஜயத்தை நிறைவு செய்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று(08) நாடு திரும்பியுள்ளார். மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவிற்காக ஜனாதிபதி பிரித்தானியா சென்றிருந்தார். இலண்டன் வெஸ்ட்மினிஸ்டர் அபேயில் நேற்று முன்தினம்(06) பிரித்தானிய மன்னராக மூன்றாம் சார்லஸ் மன்னருக்கு முடிசூடப்பட்டது.
வவுனியா நொச்சிமோட்டையைப் பிறப்பிடமாகவும், பாடசாலை வீதி , பண்டாரிகுளத்தை வசிப்பிடமாகவும் கொண்டவரும், அமரர் தோழர் நியாஸ் (செல்வநாயகம் அம்பிகைபாலன்) அவர்களின் அன்புச் சகோதரியுமான தேவராஜா புவனநாயகி அவர்கள் 05-05-2023 வெள்ளிக்கிழமை அன்று இயற்கையெய்தினார்.
நாட்டில் விரைவில் மிகப்பெரிய கூட்டணி ஒன்றை அமைக்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மொனராகலையில் இன்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துக்கொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். நாட்டு மக்கள் மாற்றம் ஒன்றை எதிர்பார்க்கும் போது, அதனை ஆட்சியை பொறுப்பேற்க எதிர்பார்த்துள்ள அரசியல் கட்சிகள் தமது பலத்தை நிரூபிக்க வேண்டும்.
தமது இடைக்கால அறிக்கை தொடர்பில் பல்வேறு தரப்பினரிடமும் இருந்து தற்போதுவரையில் 400 இற்கும் மேற்பட்ட யோசனைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயக்குழு தெரிவித்துள்ளது. குறித்த யோசனைகள் தொடர்பான தமது பதில்களை விரைவில் பெற்றுக்கொடுக்க எதிர்பார்த்துள்ளதாக உள்ளுராட்சி மன்ற எல்லை நிர்ணயக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் பாதுகாப்புப் படை இலங்கை மற்றும் இந்தியப் பெருங்கடலின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள பிற நாடுகளுடன் நெருக்கமான இராணுவ உறவுகளை உருவாக்க தயாராகி வருவதாக தெ சட்டர்டே பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் கூட்டாட்சி அரசாங்கம் அவசர பிராந்திய பாதுகாப்பு அச்சங்களின் மத்தியில் இந்த முனைப்பை மேற்கொண்டு வருகிறது.
06.05.2008 அன்று வவுனியாவில் மரணித்த கழகத்தின் சிரேஸ்ட உறுப்பினரும், சிறந்த சமூக சேவையாளருமான தோழர் பவான் (கந்தையா செல்வராசா) அவர்களின் 15ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று. இவர் வவுனியா எல்லைப்புறக் கிராமங்களைச் சேர்ந்த மக்களைப் பாதுகாப்பதில் அரும்பணியாற்றினார். விடிவினை நோக்கி மக்களை அரசியல்மயப்படுத்துவதிலும் தீவிர ஈடுபாடு காட்டினார்.
சப்ரகமுவ, ஊவா, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஆளுநர்களை பதவி விலகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதியொருவர் பதவி விலகிய பின்னர் ஆளுநர்கள் பதவி விலகுவது சம்பிரதாயபூர்வமானது என ஜனாதிபதி செயலக உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது பிரதமர் பதவி விலகிய பின்னர் அமைச்சரவை கலைவதற்கு இணையானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி என்பது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிப்புடன் உருவான தமிழ் அரசியல் கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்த கட்சிகளிடையே நீண்டகாலமாக நிலவி வந்த முரண்பாடுகளினால் உருவான புதிய அணி, நியாயப்படுத்தலுக்கு அப்பாற்பட்ட இணக்க அரசியல் காரணமாக கூட்டமைப்பின் மீது தமிழ் மக்களின் அதிருப்தி அதிகரித்திருந்த நிலையில் புதிய தலைமைத்துவத்தை வழங்கவென புதிய திசையில் அரசியல் பயணத்தை முன்னெடுக்க ஆயத்தமான அணி எனப் பல பரிமாணங்களைக் கொண்டிருந்தும், பெருமளவு தொழிலாளர் படையை கொண்டுள்ள தமிழர் தாயகத்தில் தொழிலாளர் தினத்தை குறிக்கும் செயற்பாடுகள் எதனையும் முன்னெடுத்திருக்கவில்லை.