ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான புதிய பணிப்பாளராக டக்காஃபோமி கடோனோ (Takafumi Kadono) நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 30ஆம் திகதி முன்னாள் இயக்குனராக சென் சென்னுக்குப் பின்னர் டக்காஃபோமி கடோனோ பதவியேற்றுள்ளார். ஜப்பானிய நாட்டவரான, டக்காஃபோமி கடோனோ, கிழக்கு ஆசிய பிராந்தியத் துறையில் இளம் நிபுணராக 2006ஆம் ஆண்டு ஆசிய அபிவிருத்தி வங்கியில் இணைந்தார். பின்னர் அவர் மத்திய, மேற்கு ஆசிய திணைக்களம் மற்றும் தென்கிழக்கு ஆசிய திணைக்களத்தில் எரிசக்தி நிபுணராக பதவிகளை வகித்துள்ளார்.