Header image alt text

இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவாத்ரா (Vinay Mohan Kwatra) அடுத்த வாரம் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ இந்திய விஜயம் தொடர்பில் கலந்துரையாடுவதே இதன் பிரதான நோக்கம் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்திய வௌிவிவகார செயலாளர் தனது விஜயத்தின் போது ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் பலரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இந்திய வெளியுறவு செயலாளர் இரண்டு நாட்கள் நாட்டில் தங்கியிருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி குமரபுரம், பரந்தனை வாழ்விடமாகவும் கொண்டவரும், அமரர் தோழர் தேவன் (தேவராஜா – குமரபுரம்) அவர்களின் அன்புத் தாயாருமான கோவிந்தசாமி புவனேஸ்வரி அவர்கள் (05.07.2023) புதன்கிழமை காலமானார். அன்னையின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்களோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்துகொண்டு அன்னைக்கு எமது இதயபூர்வ அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)

2023 உயர் தர பரீட்சைக்கு இணையத்தளம் ஊடாக விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான நடவடிக்​கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 28 ஆம் திகதி வரை இணையத்தளம் ஊடாக விண்ணப்பிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அரச மற்றும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள், அதிபர்கள் ஊடாக விண்ணப்பிக்க முடியும் எனவும், தனியார் பரீட்சார்த்திகள் சுயமாக விண்ணப்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more