நீதிமன்றத்திற்கு வழங்கிய உறுதிமொழியை மீறியதாகத் தெரிவித்து முன்வைக்கப்பட்டுள்ள மனு தொடர்பில் செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி நீதிமன்றத்தில் விளக்கமளிக்குமாறு அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர், முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்ன உள்ளிட்ட ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(10) அறிவித்தல் பிறப்பித்தது. Read more
கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் 4 குழந்தைகள் உயிரிழந்தமை தொடர்பில் சுகாதார அமைச்சு அறிக்கை கோரியுள்ளது. இந்த விடயம் தொடர்பான விசாரணை அறிக்கை கிளிநொச்சி வைத்தியசாலையின் பணிப்பாளரினால் தமக்கு கையளிக்கப்படும் என அமைச்சின் செயலாளர் ஜனக சந்ரகுப்த குறிப்பிட்டுள்ளார். இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகளுக்கமைய, குறித்த குழந்தைகள் உயிரிழந்தமைக்கு அந்த குழந்தைகளின் சுகாதார நிலைமையில் காணப்பட்ட பலவீனமே காரணம் என தெரியவந்துள்ளதாக அவர் கூறினார்.