சனத்தொகை மதிப்பீட்டை 28,400 இலட்சம் ரூபா செலவு செய்து மேற்கொள்ள அரசாங்கம் தயாராகின்றது. அது தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள உத்தரவு விசேட வர்த்தமானியில் நேற்று (10) பிரசுரிக்கப்பட்டது. வீடு, இணைந்த குடியிருப்புகள், குடியிருப்பு அல்லாத இடங்கள் என மூன்று பிரிவுகளின் கீழ் தொகை மதிப்பீடு நடத்தப்படவுள்ளதாக தொகை மதிப்பு, புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனுரகுமார தெரிவித்தார். Read more
மலர்வு 23.05.1946 – உதிர்வு 11.07.2023
பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர கடந்த வெள்ளிக்கிழமை (07) முல்லைத்தீவு நீதவான் தொடர்பில் சபையில் ஆற்றிய உரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வட மாகாண சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்புடன் கவனயீர்ப்பு போராட்டங்களை இன்று முன்னெடுத்தனர். முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் நீதிமன்ற உத்தரவிற்கு முரணாக கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக முன்வைக்கப்பட்டிருந்த முறைப்பாடு தொடர்பில் ஆராய்வதற்காக முல்லைத்தீவு நீதவான் T.சரவணராஜா கடந்த 4 ஆம் திகதி அங்கு சென்று பார்வையிட்டிருந்தார்.