மலர்வு 23.05.1946 – உதிர்வு 11.07.2023
இல:05, விவேகானந்தநகர் கிழக்கு கிளிநொச்சியைச் சேர்ந்தவரும், அமரர் தோழர் தீபன் (யோகராஜா) மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர் நாகராஜா (லண்டன்) ஆகியோரின்; அன்புத் தாயாருமான தருமலிங்கம் குஞ்சரம் அவர்கள் இன்று (11.07.2023) செவ்வாய்க்கிழமை காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம்.

ஆரம்ப காலங்களில் குடாநாட்டுக்கும் வன்னிக்குமிடையிலான பாதுகாப்பற்ற போக்குவரத்தில் மிகவும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பயணிக்கும் அதிகமான போராளிகளின்; பாதுகாப்பை முதன்மைப்படுத்தி, அவர்களை பாதுகாத்து, அனுசரித்து பொருத்தமான நேரத்தில் பாதுகாப்பாக அனுப்பியதை இந்நாளில் நினைவுகூர்கின்றோம்.
அன்னையின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்களோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்துகொண்டு அன்னைக்கு எமது இதயபூர்வ அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (PLOTE)
11.07.2023.