இந்தியப் பிரதமருக்கு அனுப்பும் கடிதத்தில் தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்டனர். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்று உச்சபட்ச அதிகாரப் பரவலாக்கலை வழங்க வேண்டும், அந்த இறுதித் தீர்வை எட்டுவதற்குள் உடனடியாக 13 வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டுமென வலியுறுத்தி இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்கு தமிழ்தேசியக் கூட்டமைப்பாக செயற்படும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும், தமிழ் மக்கள் கூட்டணியும் இணைந்து அனுப்பும் கடிதத்தில் தமிழ் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் கையெழுத்திட்டனர்.