அமரர் கந்தையா தர்மலிங்கம் அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவை முன்னிட்டு லண்டனில் வசிக்கும் எமது கட்சி செயற்பாட்டாளர் திரு. தர்மலிங்கம் நாகராஜா அவர்கள் தனது இன்று (11.07.2023) காலை வவுனியா பொன்னாவரசன்குளம் திருநாவற்குளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட வறுமைக் கோட்டின்கீழான 150 குடும்பங்களுக்கு உலருணவு நிவாரணப் பொதிகளை வழங்கியுள்ளார்.

மேலும் கிளிநொச்சி விவேகானந்தநகர், பாரதிபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட வறுமைக் கோட்டின்கீழான 80 குடும்பங்களுக்கும் உலருணவு நிவாரணப் பொதிகளை வழங்கியுள்ளார்.
மேற்படி நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் தேசிய அமைப்பாளர் பீற்றர், நிர்வாக செயலாளர் பற்றிக், மத்தியகுழு உறுப்பினர் சிவம், வவுனியா மாவட்ட செயலாளர் மூர்த்தி,
தோழர்கள் ராஜா, சூரி, சிவா, அன்ரன், காண்டீபன், சந்திரன், ரூமி மற்றும் சதா, நவநீதன், கிராம அபிவிருத்தி சங்கத்தினர் என பலரும் கலந்து கொண்டு நிவாரணப் பொதிகளை வழங்கிவைத்தனர்.