தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் 34வது வீரமக்கள் தினம் வவுனியா கோயில்குளத்தில் அமைந்துள்ள அமரர் தோழர் க.உமாமகேஸ்வரன் நினைவு இல்லத்தில் இன்று (13.07.2023) காலை 10.00 மணியளவில் நினைவில்லப் பொறுப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான ஜி.ரி லிங்கநாதன் (தோழர் விசுபாரதி) அவர்களின் தலைமையில் ஆரம்பமானது.
இதன்போது கழகத்தின் கொடி நிர்வாகப் பொறுப்பாளர் தோழர் பற்றிக் அவர்களால் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. தொடர்ந்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து நினைவுச்சுடர் ஏற்றி, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நினைவில்லப் பொறுப்பாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான தோழர் ஜி.ரி லிங்கநாதன் அவர்களின் அஞ்சலியுரை இடம்பெற்றது. அடுத்து இரா.சுப்பிரமணியம் ஐயா, தமிழரசுக் கட்சியின் செயற்பாட்டாளரும், மத்தியகுழு உறுப்பினரும், முன்னாள் நகரசபை உறுப்பினருமான நா. சேனாதிராஜா ஆகியோரின் உரைகளும் இடம்பெற்றன.
நிகழ்வில் சிவசோதி மாஸ்டர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிசோர், முன்னாள் நகரசபை உறுப்பினர் கருணாநிதி, எமது கட்சியின் வவுனியா மாவட்ட செயலாளர் தோழர் மூர்த்தி, தோழர்கள் பரமசிவம், கொன்சால், மணிமாறன், அன்புமணி, சுமன், சூரி, ரவி, ஓசை டொமினிக் அன்ரன், வாவா, அன்ரன் மற்றும் ஆதரவாளர்களும் ஊ;டக நண்பர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 