ஜெர்மனியின் Ludwigsburg நகரத்தில் வசிக்கும் பவானந்த் சுமனா தம்பதிகளின் செல்வப் புதல்வி செல்வி சுபாங்கி அவர்கள் தனது பிறந்தநாளை முன்னிட்டு அமரத்துவமடைந்த தோழர் ஒருவரின் புதல்வருக்கு அவரது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்திற்காக கழகத்தின் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக உதவி வழங்கியுள்ளார். வவுனியா ஆச்சிபுரத்தில் வசிப்பவரும், அமரர் தோழர் ஜெயக்குமார் (ரமேஸ்) அவர்களின் புதல்வருமாகிய அரவிந்தன் அவர்களுக்கு 50,000/- பெறுமதியான மேற்படி வாழ்வாதார உதவி இன்று (14.07.2023) வழங்கிவைக்கப்பட்டது.
34ஆவது வீரமக்கள் தினத்தை முன்னிட்டு
இன்றைய தினம் முல்லைத்தீவு குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் பொங்கல் வழிபாட்டுக்காக சென்ற பொதுமக்களை பொலிஸாரும் சிங்கள மக்களோடு வந்திருந்த பௌத்த பிக்குகளும் பொங்குவதற்கு தடை ஏற்படுத்தியதோடு பொலிஸார் மிக மோசமான தாக்குதல்களையும் மேற்கொண்டுள்ளனர்.