கழகத்தின் வன்னி மாவட்ட முன்னாள் பொறுப்பாளரும், வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தோழர் வசந்தன் (சரவணபவானந்தன் சண்முகநாதன்) அவர்களின் 25ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (15.07.2023) மாலை அவர் மற்றும் அவரது புதல்வன் செல்வன். சண்முகநாதன் வற்சலன் ஆகியோரின் நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

அவரது குடும்ப உறவுகளால் நடாத்தப்பட்ட அஞ்சலி நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் நினைவில்ல பொறுப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான ஜி.ரி லிங்கநாதன் அவர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தார்.
தொடர்ந்து அமரர் உமாமகேஸ்வரன் நினைவில்லத்திலும் அமரர் தோழர் வசந்தன் அவர்களுக்கு அவரது குடும்ப உறவுகள் மற்றும் நினைவில்ல பொறுப்பாளர் ஜி.ரி லிங்கநாதன், ரவி, ஓசை, வாவா உள்ளிட்ட தோழர்களும் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.