தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆண்டுதோறும் அனுஸ்டித்துவரும் வீரமக்கள் தினத்தின் இறுதிநாள் நிகழ்வுகள் இன்று (16.07.2023) ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00அளவில் வவுனியா கோயில்குளத்தில் அமைந்துள்ள அமரர் உமாமகேஸ்வரன் நினைவு இல்லத்தில் நினைவு இல்லப் பொறுப்பாளரும், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினருமான ஜி.ரி லிங்கநாதன் (விசுபாரதி) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் கொல்லப்பட்ட தினமான ஜூலை 13ம் திகதிமுதல் புளொட் செயலதிபர் கதிர்காமர் உமாமகேஸ்வரன் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட தினமான ஜூலை 16ம் திகதி வரையிலான காலப்பகுதியை வீரமக்கள் தினமாக புளொட் அமைப்பு பிரகடனப்படுத்தி ஆண்டுதோறும் அனுஸ்டித்து வருகின்றது.
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) 34வது வீர மக்கள் தினம் இன்றைய தினம்(16-07-2023) மட்டக்களப்பு நாவற்குடாவில் அனுஸ்டிக்கப்பட்டது.
அன்பிற்குரிய அனைத்து தமிழ் பேசும் மக்களுக்கும் வணக்கம்.
16.07.1989இல் மரணித்த மக்கள் யுத்தத்தின் மகத்தான தளபதி செயலதிபர் அமரர் தோழர் முகுந்தன் (கதிர்காமர் உமாமகேஸ்வரன்) அவர்களின் 34ஆம் நினைவு நாளும் 34ஆவது வீரமக்கள் தின நிறைவு நாளும் இன்று.
16.07.1999இல் வவுனியாவில் மரணித்த தோழர் சபேசன் (டுமால்) (சபாரட்ணம் பாஸ்கரன்) அவர்களின் 24ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…