வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் உள்ள காணியொன்றை கடற்படையினர் அளவீடு செய்வதற்கு முயற்சித்தபோது, அங்கிருந்த பொதுமக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர். குறித்த காணி தனியாருக்கு சொந்தமானது எனவும், அதனை கையகப்படுத்துவதற்கு, கடற்படையினர் முயற்சிப்பதாகவும் அங்கிருந்த மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். எவ்வாறாயினும், பொதுமக்கள் எதிர்ப்பில் ஈடுப்பட்டதையடுத்து, அங்கிருந்து கடற்படையினர் விலகிச் சென்றதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார். Read more
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழிக்கு நீதி கோரி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நிர்வாக முடக்கலை முன்னெடுக்கவுள்ளதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க செயலாளர் லீலாதேவி ஆனந்த நடராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். அத்துடன், தாம் முன்னெடுக்கும் நிர்வாக முடக்கல் நடவடிக்கைக்கு அனைவரும் முழுமையான ஆதரவினை வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.