Header image alt text

26.07.1990இல் சென்னையில் மரணித்த தோழர் இந்து (முத்துவேலு அழகேஸ்வரன்) அவர்களின் 33ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று

26.07.2003இல் மரணித்த தோழர் டெய்லர் (சுப்ராயன் கந்தசாமி – வவுனியா) அவர்களின் 20ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

உள்ளூராட்சி தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை நிராகரிக்குமாறு சட்டமா அதிபர், உயர் நீதிமன்றத்திடம் இன்று கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த மார்ச் 9 ஆம் திகதி உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படாமையால், அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக கூறி தேசிய மக்கள் சக்தி மற்றும் பெப்ஃப்ரல் அமைப்பு என்பன மனுக்களை தாக்கல் செய்திருந்தன. Read more

யாழ். அளவெட்டி தெற்கு கலைநகரைப் பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் கொண்டவரும், புளொட் சுவிஸ் தோழர் மனோ அவர்களின் மூத்த சகோதரருமான திரு. மார்க்கண்டு கந்தசாமி (மகேந்திரம்) அவர்கள் நேற்று (25.07.2023) செவ்வாய்க்கிழமை அளவெட்டியில் காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம்.
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்களோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்துகொண்டு அன்னாருக்கு எமது இதயபூர்வ அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.

Read more

அனுமதிப்பத்திரம் இன்றி சுற்றுலாப் பயணிகளுக்கு சேவையளிப்போருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர் அனுப ரணவீர தெரிவித்துள்ளார். அனுமதிப்பத்திரம் இன்றி சுற்றுலா வழிகாட்டிகளாக செயற்படுவோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் அனுமதிப்பத்திரங்களை புதுப்பிக்காத சுற்றுலா வழிகாட்டிகளும் அடங்குகின்றனர். அவர்கள் தொடர்பில் விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அவர்களுக்கு முதல்முறை எச்சரிக்கை வழங்கப்படுவதுடன் அடுத்த கட்டமாக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் தெரிவித்தார்.