நேற்று (27) கொழும்பில் கைது செய்யப்பட்ட மக்கள் போராட்டக்கள இயக்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வசந்த முதலிகே இன்று புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். கடந்த 29 ஆம் திகதி இடம்பெற்றிருந்த வழக்கொன்றில் ஆஜராகாமைக்காகவே அவர் கைது செய்யப்பட்டிருந்தார். Read more
பாரபட்சமாக செயற்படுவதாக பொலிஸாருக்கு எதிராக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கிடைத்த முறைப்பாடுகளில் பெரும்பாலானவை பாரபட்ச செயற்பாடுகளுடன் தொடர்புடையவை என ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் பொலிஸாருக்கு எதிராக 11,450 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இவற்றில் 9, 774 முறைப்பாடுகள் பொதுமக்களிடம் இருந்து முறைப்பாடுகளைப் பெறுவதற்காக உருவாக்கப்பட்ட 1960 என்ற துரித தொலைபேசி இலக்கத்தினூடாக முன்வைக்கப்பட்டுள்ளன.