ஜப்பானின் வௌிவிவகார அமைச்சர் Yoshimasa Hayashi எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஜப்பானின் கல்விக் கட்டமைப்பின் அனுகூலமான அணுகுமுறையைப் பாராட்டிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜப்பானிய மக்களின் ஒழுக்கம், அர்ப்பணிப்பு, விடாமுயற்சி மற்றும் நேர்மை ஆகியவற்றுக்கு தாம் மதிப்பளிப்பதாக தெரிவித்துள்ளார். Read more
மனித உரிமை மீறல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் அடுத்த மாதம் 31 ஆம் திகதி வரை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20 ஆம் திகதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டதுடன், அதன் உறுப்பினர்களாக உயர் நீதிமன்ற நீதியரசர் M.H.M.D. நவாஸ், ஓய்வுபெற்ற பொலிஸ் மா அதிபர் சந்த்ரா பெர்னாண்டோ மற்றும் ஓய்வுபெற்ற மாவட்ட செயலாளர் நிமல் அபேசிறி ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.