புதிய பட்டதாரிகளை ஆசிரியர்களாக இணைத்துக்கொள்வது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் மாகாண மட்டத்தில் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். களுத்துறையில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அவர், விஞ்ஞானம், தொழிநுட்பம், ஆங்கில மொழி மற்றும் வெளிநாட்டு மொழிகள் ஆகிய பாடங்களுக்கு புதிய பட்டதாரிகளை ஆசிரியர்களாக இணைத்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். இதேவேளை, நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால உத்தரவுகளினால் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை ஆட்சேர்ப்பு செய்வது தாமதமாகும் என சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.