மலர்வு 12/03/1963உதிர்வு 30/07/2023
பண்டத்தரிப்பு, வடலியடைப்பு, கலட்டு வீதியை பிறப்பிடமாகவும் அமெரிக்காவை வசிப்பிடமாகவும் கொண்ட தோழர் றொபின் (சின்னத்துரை குமாரதாசன்) அவர்கள் நேற்று (2023.07.30) ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவில் காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம்.
இனப்பற்றும், தமிழ் மக்களின் அரசியலில் மிகுந்த ஈடுபாடும் கொண்டிருந்த இவர், கழகத்தின் ஆரம்பகால உறுப்பினர்களுள் ஒருவராவார். எளிமையும் ஆழ்ந்த தமிழ் தேசியப்பற்றும் பழகுவதற்கு மிக இனிய சுபாவத்தையும் இயல்பாகவே கொண்டிருந்தார். கழகத்தின் அரசியல் பணிகளிலும் தொலைத்தொடர்பாடல்கள் செயற்பாடுகளிலும் சிறப்பான செயற்திறனை வெளிப்படுத்தி, கழகத் தோழர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் மிகுந்த அன்பையும் நன்மதிப்பையும் பெற்றிருந்தார்.
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்களோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்துகொண்டு அன்னாருக்கு எமது இதயபூர்வ அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
31.07.2023