அனுமதிப்பத்திரம் இன்றி சுற்றுலாப் பயணிகளுக்கு சேவையளிப்போருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர் அனுப ரணவீர தெரிவித்துள்ளார். அனுமதிப்பத்திரம் இன்றி சுற்றுலா வழிகாட்டிகளாக செயற்படுவோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் அனுமதிப்பத்திரங்களை புதுப்பிக்காத சுற்றுலா வழிகாட்டிகளும் அடங்குகின்றனர். அவர்கள் தொடர்பில் விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அவர்களுக்கு முதல்முறை எச்சரிக்கை வழங்கப்படுவதுடன் அடுத்த கட்டமாக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் தெரிவித்தார்.
		    
ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே பிராஞ்ச் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பானது நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கையின் மறுசீரமைப்புகளின் போதான நியாயமான படுகடன் பரிகாரத்தை உறுதி செய்வதில் ஐக்கிய நாடுகள் சபையின் உதவி குறித்து இதன்போது ஆராயப்பட்டுள்ளது. அத்துடன் நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி குறித்தும் நல்லிணக்கத்திற்கான திட்டங்கள் தொடர்பான யோசனைகளையும் ஜனாதிபதி இதன்போது முன்வைத்தார்.
1983 ம் ஆண்டு ஆடி மாதம் 25 மற்றும் 27ம் நாட்களில், வெலிக்கடைச் சிறைச்சாலைக்குள், அரச படைகள் மற்றும் சிறை அதிகாரிகளின் அனுசரணையுடன், பெரும்பான்மையின காடையர்களாலும் கைதிகளாலும், சிறைக்கூண்டுகளில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் படுகொலை செய்யப்பட்ட, 53 ஈழப் புதல்வர்களினதும் 40 வது நினைவு நாளில் அவர்கள் அனைவரையும் நினைவிற்கொண்டு, அவர்களின் விடுதலைக் கனவுகளையும் இனப் பற்றுதலையும் போற்றிடுவோம்,
வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் உள்ள காணியொன்றை கடற்படையினர் அளவீடு செய்வதற்கு முயற்சித்தபோது, அங்கிருந்த பொதுமக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர். குறித்த காணி தனியாருக்கு சொந்தமானது எனவும், அதனை கையகப்படுத்துவதற்கு, கடற்படையினர் முயற்சிப்பதாகவும் அங்கிருந்த மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். எவ்வாறாயினும், பொதுமக்கள் எதிர்ப்பில் ஈடுப்பட்டதையடுத்து, அங்கிருந்து கடற்படையினர் விலகிச் சென்றதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார். 
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழிக்கு நீதி கோரி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நிர்வாக முடக்கலை முன்னெடுக்கவுள்ளதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க செயலாளர் லீலாதேவி ஆனந்த நடராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். அத்துடன், தாம் முன்னெடுக்கும் நிர்வாக முடக்கல் நடவடிக்கைக்கு அனைவரும் முழுமையான ஆதரவினை வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு குடத்தனைப் பகுதியில் இன்றையதினம் பெருமளவில் வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இதன்போது துப்பாக்கிகள் மற்றும் மகசின்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன. சம்பவம் குறித்து பருத்தித்துறை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இன்று கோவில்குளம் 10ம் ஒழுங்கையில் அமைந்துள்ள மைதானத்தில் 13க்கும் மேட்பட்ட அணிகள் கலந்துகொண்ட இந்த சுற்று போட்டியில் போட்டிகளின் இறுதியில் Fire Zone எதிர் சூப்பர் ஸ்டார் அணிகள் மோதிக்கொண்டன. இறுதியில் Fire Zone அணி வெற்றி பேற்று கிண்ணத்தை தனதாக்கியது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக எமது கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும், முன்னாள் நகரசபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்),
கறுப்பு யூலையின் 40ம் ஆண்டு நினைவுதினம் ஜூலை 23ம் திகதியாகிய இன்று முதல் எதிர்வரும் 27ம் திகதி வரையிலான ஐந்து நாட்களாகும். வெலிக்கடைச் சிறையில் 53 தமிழ் அரசியல் கைதிகள் இனவெறியர்களால் படுகொலை செய்யப்பட்டமை, அதனைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் தமிழ்மக்கள் படுகொலை, தமிழர்களின் பொருட்கள், சொத்துகள் சூறை, தமிழ்மக்கள் இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றம் என்பன அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன ஆட்சியில் அரச இயந்திரத்தின் பூரண அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்டது.
ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் யோசிமசா அயாஸி அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2019 ம் ஆண்டுக்கு பின்னர் ஜப்பான் நாட்டு அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வது இதுவே முதற் தடவையாகும். தற்போது இடம்பெற்று வரும் கடன்மறுசீரமைப்பு திட்டம் தொடர்பில் இதன்போது ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் கவனம் செலுத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஜப்பான் மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பு குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 
கொழும்பு மற்றும் திருகோணமலை துறைமுகங்களையும், தென்னிந்திய துறைமுகத்தையும் இணைக்கும் பாலத்தை அமைப்பது தொடர்பில் இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் இந்திய விஜயம் தொடர்பில் தெளிவுபடுத்தும் நோக்கில் ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், வெளிவிவகார அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.