Header image alt text

நன்றி தலைவர் அவர்களே!
நண்பர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார் அவர்களால் கொண்டுவரப்பட்டிருக்கின்ற இந்த தீர்மானம் மிகவும் முக்கியத்துவம் மிக்க தீர்மானமாகும். நான் நினைக்கின்றேன், இலங்கைப் பாராளுமன்றத்தில், ஓத்திவைப்புப் பிரேரணையாக இருந்தாலும் கூட இவ்வளவு நேரம், ஏறக்குறைய ஐந்து மணித்தியாலங்களுக்கும் மேலாக விவாதிக்கப்படுகின்ற ஒரு பிரேரணை இதுதான். பாலஸ்தீன மண்ணில் மேற்கொள்ளப்படுகின்ற அழிப்பை உடனடியாக நிறுத்தவும், சுதந்திர பலஸ்தீன அரசொன்றை நிறுவவும் ஐக்கிய நாடுகள் சபை மேற்கொண்ட தீர்மானங்களை, அது தொடர்பான உலகளாவிய கருத்துக்களை நடைமுறைப்படுத்த வெற்று வார்த்தைகளுக்குப் பதிலாக நடைமுறைச் செயற்திட்டத்தின் அவசியம் பற்றி, சபை இந்த ஒத்திவைப்பு வேளையிலே பிரேரிக்கின்றது என்று அவர் கூறியிருந்தார்.

Read more

18.07.2023ல் பலஸ்தீனத்தின் விடுதலை சம்பந்தமாக த.சித்தார்த்தன் அவர்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை –
நன்றி தலைவர் அவர்களே!
நண்பர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார் அவர்களால் கொண்டுவரப்பட்டிருக்கின்ற இந்த தீர்மானம் மிகவும் முக்கியத்துவம் மிக்க தீர்மானமாகும்.
நான் நினைக்கின்றேன், இலங்கைப் பாராளுமன்றத்தில், ஓத்திவைப்புப் பிரேரணையாக இருந்தாலும் கூட இவ்வளவு நேரம், ஏறக்குறைய ஐந்து மணித்தியாலங்களுக்கும் மேலாக விவாதிக்கப்படுகின்ற ஒரு பிரேரணை இதுதான்.

Read more

பாகிஸ்தானுக்கான உயர்ஸ்தானிகராக அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ரவீந்திர விஜேகுணரத்ன இதற்கு முன்னர் கடற்படைத் தளபதியாகவும் பாதுகாப்பு படைகளின் பிரதானியாகவும் செயற்பட்டுள்ளார். இந்த பதவிகளில் இருந்து ஓய்வு பெற்றதன் பின்னர், அவர் பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளராகவும் கடமையாற்றினார்.

இன்றைய தினம் நவாலியூர் சோமசுந்தரப்புலவர் அவர்களின் நினைவுதினம் வவுனியா தர்மலிங்கம் வீதியில் அமைந்துள்ள அவரது நினைவு சிலைக்கு அருகே தனியார் முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தலைவர் திரு சி.ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது.
வவுனியா நகரசபை செயலாளர் திரு .செந்தில்நாதன், தமிழ்விருட்சம் திரு கண்ணன் சந்திரகுமார், முன்னாள் நகரசபைத் தலைவர்கள் ஜி.ரி.லிங்கநாதன், திரு.கௌதமன், முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் , ஆசிரியர்கள் , நலன்விரும்பிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Read more

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆண்டுதோறும் அனுஸ்டித்துவரும் வீரமக்கள் தினத்தின் இறுதிநாள் நிகழ்வுகள் இன்று (16.07.2023) ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00அளவில் வவுனியா கோயில்குளத்தில் அமைந்துள்ள அமரர் உமாமகேஸ்வரன் நினைவு இல்லத்தில் நினைவு இல்லப் பொறுப்பாளரும், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினருமான ஜி.ரி லிங்கநாதன் (விசுபாரதி) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் கொல்லப்பட்ட தினமான ஜூலை 13ம் திகதிமுதல் புளொட் செயலதிபர் கதிர்காமர் உமாமகேஸ்வரன் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட தினமான ஜூலை 16ம் திகதி வரையிலான காலப்பகுதியை வீரமக்கள் தினமாக புளொட் அமைப்பு பிரகடனப்படுத்தி ஆண்டுதோறும் அனுஸ்டித்து வருகின்றது.

Read more

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) 34வது வீர மக்கள் தினம் இன்றைய தினம்(16-07-2023) மட்டக்களப்பு நாவற்குடாவில் அனுஸ்டிக்கப்பட்டது.
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்)மாவட்ட அமைப்பாளர் ம.நிஸ்கானந்தராஜா(சூட்டி) தலைமையில் மாலை 4மணியளவில் இடம்பெற்ற நிகழ்வில் கழகத்தின் சமுக மேம்பாட்டுப் பிரிவு பொறுப்பாளர் ந.ராகவன்,மாவட்டகுழு செயலாளர் கா.கமலநாதன், கழக உறுப்பினர்கள் சுமன் கைலவாசம்,பிறேமன்,உதயன், ரமேஸ் நீலன், செல்வரூபன்,ஆகியோரும்,கட்சியின் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.
உயிர் நீத்த கழக தோழர்களுக்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் நினைவுச்சுடர் ஏற்றியும் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் உயிர்நீத்த தோழர்கள் நினைவாக தென்னை மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது.

Read more

அன்பிற்குரிய அனைத்து தமிழ் பேசும் மக்களுக்கும் வணக்கம்.
தமிழினத்தின் சாத்வீக விடுதலைப் போராட்டத்தின் தளபதியும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான அமரர் அப்பாப்பிள்ளை அமிரதலிங்கம் படுகொலைசெய்யப்பட்ட ஜுலை 13ம் திகதி முதல், ஆயுதப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்(PLOTE) ஸ்தாபகரும் அதன் செயலதிபருமான தோழர் க. உமாமகேஸ்வரன் அவர்கள் கைக்கூலிகளால் படுகொலை செய்யப்பட்ட ஜுலை 16ம் திகதி வரையிலான நான்கு நாட்களையும் “வீரமக்கள் தின”மாக 1989ல் இருந்து அனுஸ்டித்து வருகின்றோம்.

Read more

16.07.1989இல் மரணித்த மக்கள் யுத்தத்தின் மகத்தான தளபதி செயலதிபர் அமரர் தோழர் முகுந்தன் (கதிர்காமர் உமாமகேஸ்வரன்) அவர்களின் 34ஆம் நினைவு நாளும் 34ஆவது வீரமக்கள் தின நிறைவு நாளும் இன்று.

16.07.1999இல் வவுனியாவில் மரணித்த தோழர் சபேசன் (டுமால்) (சபாரட்ணம் பாஸ்கரன்) அவர்களின் 24ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

கழகத்தின் வன்னி மாவட்ட முன்னாள் பொறுப்பாளரும், வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தோழர் வசந்தன் (சரவணபவானந்தன் சண்முகநாதன்) அவர்களின் 25ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (15.07.2023) மாலை அவர் மற்றும் அவரது புதல்வன் செல்வன். சண்முகநாதன் வற்சலன் ஆகியோரின் நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

Read more