எதிர்வரும் செவ்வாய் கிழமை (02) காலை 6.30 மணி முதல் வேலை பணிப்புறக்கணிப்பினை முன்னெடுக்க சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் இன்று பிற்பகல் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். பொருளாதார நீதியை அடைவதற்கு சுகாதார தொழிற்சங்கங்களுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடைந்துள்ளதுடன் மேலும் தமது கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக தொடர்ச்சியாக போராடுவோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். Read more
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளதாக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகள் சமித்ரி ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். தனது தந்தைக்கு சட்ட ரீதியில் நியாயம் கிடைக்காததால், மனித உரிமை மீறல் குறித்து முறைப்பாடு அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் விசாரணையின் பின்னர் கிடைத்த சாட்சியங்களின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டாலும், தனது தந்தை கைது செய்யப்பட்டதன் பின்னர் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.
அரசாங்கம் இந்தியாவின் கைபொம்மையாகச் செயற்பட்டு வருவதாக மக்கள் போராட்ட இயக்கத்தின் உறுப்பினர் வசந்த முதலிகே குற்றம் சுமத்தியுள்ளார். இது குறித்து மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், நாடு இன்று பாரிய பொருளாதார பின்னடைவில் உள்ளது. அரசாங்கத்திடம் பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்வதற்கான எந்த திட்டங்களும் இல்லை. வெளிநாடுகளில் கடன்பெற்று அதனூடாகவே நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்கின்றனர். சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றுள்ளனர்.
தெற்காசிய பிராந்தியத்தில் மிகப் பெரிய மகப்பேறு வைத்தியசாலையான காலி – கராப்பிட்டிய வைத்தியசாலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஜேர்மன் ரூனெயளர் இலங்கை நட்புறவின் அடையாளமாக இந்த வைத்தியசாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த வைத்தியசாலை 6 மாடிகளைக் கொண்டுள்ளதுடன் 640 படுக்கைகள் 6 அறுவை சிகிச்சை அரங்குகள்இ அவசர சிகிச்சை பிரிவுகள்இ தீவிர சிகிச்சை பிரிவுகள் ஆய்வகங்கள் சிசு தீவிர சிகிச்சை பிரிவுகள் சிறப்பு குழந்தைகள் பிரிவுகள் உள்ளிட்ட அனைத்து நவீன வைத்திய வசதிகளையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.