எதிர்வரும் செவ்வாய் கிழமை (02) காலை 6.30 மணி முதல் வேலை பணிப்புறக்கணிப்பினை முன்னெடுக்க சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் இன்று பிற்பகல் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். பொருளாதார நீதியை அடைவதற்கு சுகாதார தொழிற்சங்கங்களுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடைந்துள்ளதுடன் மேலும் தமது கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக தொடர்ச்சியாக போராடுவோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வைத்தியர்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள 35 ஆயிரம் ரூபாய் னுயுவு கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரி 72 சுகாதார தொழிற்சங்கங்கள் கடந்த காலங்களில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.