மொட்டுக் கட்சியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நாளை (30) தங்காலையில் நடைபெற உள்ளது. பொதுஜன பெரமுன கட்சியின் புதிய தேசிய அமைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுன கட்சியை மீளக் கட்டியெழுப்பி பலப்படுத்துவதில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தீவிர முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இக்கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட மொட்டுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை எதிர்நோக்கும் கடன் மறுசீரமைப்பு சிக்கல்களை தீர்ப்பதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு கடன் வழங்கியவர்கள் ஒன்றிணைந்து செயல்படுவதால் இரண்டாம் காலாண்டு பகுதியில் கடன் மறுசீரமைப்பு சிக்கலை சாதகமாக தீர்க்க முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இதன் காரணமாக இலங்கை எதிர்நோக்கும் சவால்களை தீர்க்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
1982.03.28ல் மரணித்த கழகத்தின் இராணுவப் பிரிவு பொறுப்பாளர் தோழர் காத்தான் (கிருஷ்ணசாமி கிருஷ்ணகுமார்) அவர்களின் 42ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…..
சீனாவின் நான்கு ஆய்வுக் கப்பல்கள் மீண்டும் இலங்கை கடற்பரப்பை அண்மித்த இந்து சமுத்திரத்திற்குள் பிரவேசித்துள்ளன. எதிர்வரும் இரண்டு வாரங்களில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை இந்தியா பரிசோதிக்கவுள்ளதன் பின்புலத்திலேயே கப்பல்கள் இலங்கை கடற்பரப்பினை அண்மித்து இந்து சமுத்திரத்திற்குள் வந்துள்ளன.
கனடா நாட்டில் வசிக்கும் டிஷாணன் அவர்கள் தோழர் ஆர்ஆர் அவர்களின் ஞாபகார்த்தமாக திருகோணமலை பாலையூற்று முருகன் கோவிலடி சத்தி மாதர் சங்கத்தால் நடாத்தப்படும் இலவச தையல் பயிற்சி நிலையத்துக்கு 27,500/- ரூபா பெறுமதியில் தையல் மேசை ஒன்றினை கழகத்தின் தேசிய அமைப்பாளர் தோழர் பீற்றர் அவர்களின் ஊடாக வழங்கியுள்ளார்.
எதிர்வரும் செவ்வாய் கிழமை (02) காலை 6.30 மணி முதல் வேலை பணிப்புறக்கணிப்பினை முன்னெடுக்க சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் இன்று பிற்பகல் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். பொருளாதார நீதியை அடைவதற்கு சுகாதார தொழிற்சங்கங்களுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடைந்துள்ளதுடன் மேலும் தமது கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக தொடர்ச்சியாக போராடுவோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளதாக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகள் சமித்ரி ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். தனது தந்தைக்கு சட்ட ரீதியில் நியாயம் கிடைக்காததால், மனித உரிமை மீறல் குறித்து முறைப்பாடு அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் விசாரணையின் பின்னர் கிடைத்த சாட்சியங்களின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டாலும், தனது தந்தை கைது செய்யப்பட்டதன் பின்னர் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.
அரசாங்கம் இந்தியாவின் கைபொம்மையாகச் செயற்பட்டு வருவதாக மக்கள் போராட்ட இயக்கத்தின் உறுப்பினர் வசந்த முதலிகே குற்றம் சுமத்தியுள்ளார். இது குறித்து மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், நாடு இன்று பாரிய பொருளாதார பின்னடைவில் உள்ளது. அரசாங்கத்திடம் பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்வதற்கான எந்த திட்டங்களும் இல்லை. வெளிநாடுகளில் கடன்பெற்று அதனூடாகவே நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்கின்றனர். சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றுள்ளனர்.
தெற்காசிய பிராந்தியத்தில் மிகப் பெரிய மகப்பேறு வைத்தியசாலையான காலி – கராப்பிட்டிய வைத்தியசாலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஜேர்மன் ரூனெயளர் இலங்கை நட்புறவின் அடையாளமாக இந்த வைத்தியசாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த வைத்தியசாலை 6 மாடிகளைக் கொண்டுள்ளதுடன் 640 படுக்கைகள் 6 அறுவை சிகிச்சை அரங்குகள்இ அவசர சிகிச்சை பிரிவுகள்இ தீவிர சிகிச்சை பிரிவுகள் ஆய்வகங்கள் சிசு தீவிர சிகிச்சை பிரிவுகள் சிறப்பு குழந்தைகள் பிரிவுகள் உள்ளிட்ட அனைத்து நவீன வைத்திய வசதிகளையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் 17 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். காலியில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே, அவர் இதனை குறிப்பிட்டார். அரசியயலமைப்பிற்கு அமைவாக, ஒக்டோபர் 17 ஆம் திகதிக்கி முன்னர் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என அவர் சுட்டிக்காட்டினார். இதனிடையே, ஒக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என Daily Mirror பத்திரிகை இன்று செய்தி வெளியிட்டுள்ளது.