தலவாக்கலை கிளனமேரா தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு உதவி-
 நுவரெலியா தலவாக்கலை கிளனமேரா தமிழ் வித்தியாலயத்தில் 2015 ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக புலமைப்பரிசில் பரீட்சை வழிகாட்டி நூல்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. கடந்த 26.03.2015 வியாழக்கிழமை அன்று புளொட் அமைப்பின் ஜேர்மன் கிளைத் தோழர்களின் மலையக மக்களுக்கான நிதியுதவியிலிருந்து ஒரு தொகுதி நிதியின் ஊடாக மேற்படி பரீட்சை வழிகாட்டி நூல்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ஏற்பாட்டில்; புலமைப்பரிசில் பரீட்சை வழிகாட்டி நூல்களை தலவாக்கலை ஐங்கரன் ஸ்டோர்ஸ் உரிமையாளர் திரு. இரத்தினசிங்கம் கெங்காதரன் அவர்கள் தலவாக்கலை கிளனமேரோ தமிழ் வித்தியாலய நிர்வாகத்தினரிடம் கையளித்துள்ளார். இந்நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் பங்கேற்றிருந்தனர்.