ஜனவரி 1 ஆம் திகதி முதல் வாகனங்களை புதிதாக பதிவு செய்தல் மற்றும் வாகன உரிம மாற்றத்தின் போது வாகன இலக்கத் தகட்டில் உள்ள மாகாண குறியீடுகள் அகற்றப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிசாந்த வீரசிங்க கொழும்பில் இன்று (30) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

இதன்படி, 2023 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் விநியோகிக்கப்படும் வாகன இலக்கத் தகடுகளில் மாகாண குறியீடுகள் இருக்காது என அவர் கூறினார்.