2023 உயர் தர பரீட்சைக்கு இணையத்தளம் ஊடாக விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 28 ஆம் திகதி வரை இணையத்தளம் ஊடாக விண்ணப்பிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அரச மற்றும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள், அதிபர்கள் ஊடாக விண்ணப்பிக்க முடியும் எனவும், தனியார் பரீட்சார்த்திகள் சுயமாக விண்ணப்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணபித்த பின்னர் அதன் பிரதியை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறும் பரீட்சார்த்திகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலதிக தகவலுக்காக 1911 என்ற துரித இலக்கத்திற்கு அல்லது 0112 78 42 08, 011 2 78 45 37 அல்லது 011 2 78 66 16 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புகொண்டு அறிவுறுத்தல்களை பெற்றுக்கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.