சனத்தொகை மதிப்பீட்டை  28,400 இலட்சம் ரூபா செலவு செய்து மேற்கொள்ள அரசாங்கம் தயாராகின்றது. அது தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள உத்தரவு  விசேட வர்த்தமானியில் நேற்று (10) பிரசுரிக்கப்பட்டது. வீடு, இணைந்த குடியிருப்புகள், குடியிருப்பு அல்லாத இடங்கள் என மூன்று பிரிவுகளின் கீழ்  தொகை மதிப்பீடு நடத்தப்படவுள்ளதாக தொகை மதிப்பு, புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்  அனுரகுமார தெரிவித்தார்.
தொகை மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்கு மாவட்ட, பிரதேச செயலக, கிராம சேவகப் பிரிவு அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் பெற்றுக்கொள்ளப்படவுள்ளன.
இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்கள் அமைச்சரவை பேச்சாளரிடம் இது தொடர்பில் வினவினர்.
சனத்தொகை மதிப்பீட்டை மேற்கொள்ள பணம் இருக்கிறதா என இதன்போது வினவப்பட்டது.
இதற்கு பதிலளித்த அமைச்சரவை பேச்சாளர், கலாநிதி அமைச்சர் பந்துல குணவர்தன, அரச வரவு செலவுத் திட்டத்தில் குறித்த செயற்பாடுகளுக்கு பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அரசியலமைப்பு ரீதியிலான செயற்பாடுகளுக்கு குறைவின்றி பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.