இன்றைய தினம் முல்லைத்தீவு குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் பொங்கல் வழிபாட்டுக்காக சென்ற பொதுமக்களை பொலிஸாரும் சிங்கள மக்களோடு வந்திருந்த பௌத்த பிக்குகளும் பொங்குவதற்கு தடை ஏற்படுத்தியதோடு பொலிஸார் மிக மோசமான தாக்குதல்களையும் மேற்கொண்டுள்ளனர்.

பொதுமக்களோடு புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், எமது கட்சியின் பொருளாளரும் முன்னாள் வட மாகாண விவசாய அமைச்சருமான க.சிவநேசன், கட்சியின் இளைஞர் பிரிவு பொறுப்பாளர் யூட்சன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் தவராஜா மாஸ்டர் உட்பட்ட எமது கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.