அனுமதிப்பத்திரம் இன்றி சுற்றுலாப் பயணிகளுக்கு சேவையளிப்போருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர் அனுப ரணவீர தெரிவித்துள்ளார். அனுமதிப்பத்திரம் இன்றி சுற்றுலா வழிகாட்டிகளாக செயற்படுவோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் அனுமதிப்பத்திரங்களை புதுப்பிக்காத சுற்றுலா வழிகாட்டிகளும் அடங்குகின்றனர். அவர்கள் தொடர்பில் விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அவர்களுக்கு முதல்முறை எச்சரிக்கை வழங்கப்படுவதுடன் அடுத்த கட்டமாக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் தெரிவித்தார்.