வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் உள்ள காணியொன்றை கடற்படையினர் அளவீடு செய்வதற்கு முயற்சித்தபோது, அங்கிருந்த பொதுமக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர். குறித்த காணி தனியாருக்கு சொந்தமானது எனவும், அதனை கையகப்படுத்துவதற்கு, கடற்படையினர் முயற்சிப்பதாகவும் அங்கிருந்த மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். எவ்வாறாயினும், பொதுமக்கள் எதிர்ப்பில் ஈடுப்பட்டதையடுத்து, அங்கிருந்து கடற்படையினர் விலகிச் சென்றதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
இவ்வாறான காணி அபகரிப்பு விடயங்கள் இடம்பெறுகின்ற நிலையில், பேச்சுவார்த்தை, நல்லிணக்கம் எனக் கூறுவது சர்வதேசத்தை ஏமாற்றும் விடயமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.