இலங்கையில் மீண்டும் பயங்கரவாதத்திற்கு இடமில்லை – ருவன் வணிகசூரிய
 இலங்கையில் பயங்கரவாதம் மீண்டு நிலவுவதற்கான நிலைமை உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சில தவறான செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இலங்கையில் மட்டுமன்றி 13 நாடுகளில் இந்த பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளதாக அந்த செய்திகளில் கூறப்படுகின்றபோதும் இலங்கையில் அவ்வாறான ஒரு நிலைமை இல்லை. கடந்த 3 தசாப்த காலமாக நாட்டில் நிலவிய பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து, கடந்த 5 ஆண்டுகளாக நாட்டு மக்களின் பாதுகாப்புக்கும் ஒற்றுமைக்கும் முப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நாட்டிலிருந்து ஆயுத ரீதியலான பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும் வெளிநாடுகளில் வாழும்  சிலரால் பிரிவினைவாதம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நாட்டில் இன்னுமொரு நாட்டை உருவாக்கும் முயற்சியில் வெளிநாடுகளிலுள்ள சிலர் குழுக்கள் செயற்படுகின்றனர். எனினும் மீண்டும் இலங்கையில் பயங்கரவாதம் தலைதூக்குவதற்கோ, மக்களின் சுதந்திரத்தை பறிக்கும் நடவடிக்கைகளுக்கோ இராணுவம் ஒருபோதும் இடம்தராது என்றார் இராணுவபேச்சாளரும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் ஊடகமைய பணிப்பாளருமான பிரிகேடியர் ருவன் வணிகசூரிய

6 மாகாணங்களில் அதிக மழை வானிலை அறிக்கை
 அவதான திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில், வடக்கு, வடமத்தி, கிழக்கு, ஊவா, தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் சில பிரதேசங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகும் என்றும்;. தற்போது காணப்படும் மழையுடன் கூடிய காலநிலை நாட்டில் பெரும்பாலான பிரதேசங்களில் குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொடரும் என எதிர்பார்ப்பதாக் தெரிவித்துள்ளது நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை மற்றும் பொத்துவில் ஊடாக காலி வரை வரையான கடற்பிராந்தியத்தில் காற்றின் வேகம் அதிகரிப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன.அதன்போது இந்த கடற்பகுதிகளில் அலையின் வேகம் அதிகரிக்ககூடிய வாய்ப்புகள் இருப்பதாகவும் அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, நாட்டின் பெரும்பாலான கடற்பிராந்தியங்களில் மழை அல்லது மின்னலுடன் கூடிய மழை பெய்வதற்குரிய வாய்ப்புகள் உள்ளதாக அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது கொழும்பு தேசிய அரும்பொருட்காட்சியகத்துக்கு அருகில் மரமொன்று முறிந்து விழுந்ததை தொடர்ந்து, அந்த அரும்பொருட்காட்சியகம் மற்றும் தாமரைத்தடாகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மலையகத்திலும் காலநிலை அயாயம் தொடர்கின்றது.

வடமாகாண சபையில் 5 பிரேரணைகள் நிறைவேற்றம்
  வடமாகாண சபையின் 19 ஆவது மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை கட்டடத்தொகுதியில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. இதன்போது, எதிர்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா உள்ளிட்ட 5 உறுப்பினர்களினால் முன்வைக்கப்பட்ட 7  பிரேரணைகள் சபையில் முன்வைக்கப்பட்டன. இதில் வடமாகாண மீன்பிடி போக்குவரத்து கிராம அபிவிருத்தி வர்த்தக வாணிப அமைச்சர் பா.டெனீஸ்வரன் கொண்டு வந்த ‘நீர் உயிரின வளர்ப்பை அபிவிருத்தி செய்வதற்கு தேவையான காணிகளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையில் மாந்தை உப்பு கூட்டுத்தாபன காணியை வழங்குமாறு மத்திய கைத்தொழில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை கோரும் பிரேரணை அடுத்த அமர்விற்கு அவைத்தலைவர் ஒத்திவைத்தார். அதனை தவிர, ஆளுங்கட்சி உறுப்பினர் துரைராசா ரவிகரனின் 2 பிரேரணைகளும் ஒரே மாதிரியான பிரேரணைகளாக இருந்தமையால் அது ஒரு பிரேணையாக மாற்றப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இன்றைய அமர்வில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட 5 பிரேரணைகளும் பின்வருமாறு,
1. வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் – விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற்கைதிகளை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி, நீதி அமைச்சர் மற்றும் சட்டமா அதிபரை கோருதல்.
2. வடமாகாண ஆளுங்கட்சி உறுப்பினர் துரைராசா ரவிகரன் – முல்லதை;தீவு மாவட்டத்தில் அழிந்துபோயுள்ள 115 குளங்களை புனரமைத்து விவசாய, கமநல, கால்நடை வளர்ப்பிற்கு உதவ முன்வருதல்.
3. ஆளுங்கட்சி உறுப்பினர் வே.சிவயோகன் – வடமாகாணங்களிலுள்ள திணைக்களங்கள் அலுவலகங்களில் 2009 ஆம் ஆண்டு முதலான கணக்காய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு ஊழல்களை கண்டுபிடித்து அதனுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளல்.
4.சிவயோகனின் இரண்டாவது பிரேரணையாக மாகாண ஒவ்வொரு அமைச்சுக்களிலும் கணக்காய்வு பிரிவுகளை தனித்தனியாக உருவாக்குதல்.
5.எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா – யாழ்.நல்லூர் சட்டநாதர் கோவிலில் அமைந்துள்ள மந்திரிமனை அமைந்துள்ள (9 பரப்பு) காணியை தனியார் வர்த்தக நோக்கத்திற்கான பாவனையிலிருந்து தடுப்பதற்கான நடவடிக்கையை வடக்கு மாகாண சபை மேற்கொள்ள வேண்டும்.