வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் பொன்னாவரசன்குளம் மக்கள் சந்திப்பு-
வடக்கு மாகாணசபை உறுப்பினர் திரு.ஜி.ரி.லிங்கநாதன் அவர்கள் வவுனியா பொன்னாவரசன்குளம் பகுதிக்கு இன்றையதினம் விஜயம் செய்து அங்குள்ள மக்களைச் சந்தித்து அவர்களின் நிலைமைகளை அவதானித்துடன், அவர்களின் நிலைமைகளைக் கேட்டறிந்தும் கொண்டுள்ளார். அவர்களின் வீடுகள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதைப் கண்ணுற்ற வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் அவர்கள் இது விடயத்திலும், இம்மக்களின் நிலைமைகள் தொடர்பிலும் தாம் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.