Header image alt text

பிரித்தானியா பிரதமர் டேவிட் கேமரன் அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு விஜயம்

131115144625_jaffna_protest_512x288_bbc_nocredit BZG6KDqCIAAdhfN callum_0 camaroon112_jpeg 124_jpeg  11121526_jpeg

பிரித்தானியா பிரதமர் டேவிட் கேமரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உட்பட பல தரப்பினரையும் சந்தித்துப் பேசியுள்ளார். ஆனாலும், உள்ளூர் பத்திரிகையாளர்களால் அவரைச் சந்திக்க முடியவில்லை.

யாழ் நூலகத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை அவர் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது நூலகத்துக்கு அருகே ஒரு இடத்தில் கூடியிருந்த காணாமல் போனவர்களின் உறவினர்கள் அவரைச் சந்திக்க அனுமதி கோரி கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஆனாலும், நூலக நுழைவாயிலுக்கு செல்ல அவர்கள் அனுமதிக்கப்பட்டவில்லை. இதற்கிடையே, திடீரென அரச ஆதரவான ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் பதாதைகளுடன் நூலக நுழைவாயிலுக்கு முன்னாக கூடி கோஷமெழுப்பினார்கள்.

காணாமல்போனவர்களின் உறவினர்கள் அங்கு போராட்டம் நடத்தினார்கள் பிரித்தானியா பிரதமர் டேவிட் கேமரன் இருந்த இடத்துக்கு காணாமல் போனவர்களின் உறவினர்களும் செல்ல முயற்சித்த போது அவர்களை பொலிஸார் தடுத்துவிட்டனர். அதனால் அந்தப் பகுதியில் ஒரு இழுபறி நிலை ஏற்பட்டது.

அந்தச் சந்தர்ப்பத்தில் பிரித்தானிய பிரதமருடன் வந்திருந்த செய்தியாளர்கள் உட்பட சிலர் வெளியே வந்து, நிலைமைகளை அவதானித்தனர். அப்படியாக வந்தவர்களிடம் காணாமல் போனவர்களின் உறவினர்களால் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

இதற்கிடையே பிரதமரின் வாகனத்தொடரணி அங்கிருந்து புறப்பட்டுச் செல்லவே அதனை மறித்து, அவரிடம் புகார் செய்ய காணாமல் போனவர்களின் உறவினர்கள் முயற்சித்தார்கள். ஆனால், அதுவும் முடியாமல் போய்விட்டது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான ஸ்ரீ கொத்தாவுக்குள் புகுந்த பொதுபல சேனா

srikotha001ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான ஸ்ரீ கொத்தாவுக்குள் புகுந்த பொதுபல சேனா அமைப்பினர் அங்கு ஆர்ப்பாட்டம் நடத்துவதாகவும் இதனால் ஐக்கிய தேசிய கட்சியினருக்கும் பொதுபலசேனாவினருக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியுள்ளதுடன் கல்வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. பதற்ற நிலை தோன்றியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன

பிரிட்டன் பிரதமர் கெமருன் , இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தார்.

imagesCAZ5I27Gபிரிட்டன் பிரதமர் கெமருன் , பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார். மோடியை சந்திப்பீர்களா என்று கேட்டதற்கு ஏன் கூடாது அரசியல் தலைவர்கள் அனைவரையும் சந்திக்க தயார், ஏற்கனவே குஜராத் முதல்வருடன் சந்திப்புக்கான ஏற்பாடுகளை நாங்கள் நடத்த ஆரம்பித்திருக்கின்றோம் இன்னும் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய மாநாட்டிற்கு விஜயம் செய்யவுள்ள பிரித்தானிய பிரதமர் இந்தியாவிற்கு சென்றுள்ளார். இவர் பிரதமர் இல்லத்திற்கு சென்று பிரதமர் மன்மோகன் சிங்குடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டின் இந்தியா தொடர்பான நிலைப்பாடு மற்றும் நிலமைகள் தொடர்பாகவும் கலந்துரைடப்பட்டது.
இருநாடுகள் இடையிலான விசா நடைமுறைகள் , வர்த்தகம், பொருளாதாரம், மற்றும் இரு நாட்டு நல்லுறவு விடயங்கள் குறித்து இதன்போது பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.
மேலுமம் சச்சின் ஒரு வியக்கத்தக்க அளவிட முடியாத சக்தி படைத்தவர் எனவும் கெமரூன் வர்ணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

வலி-வடக்கு மக்களின் மீளக்குடியமர்த்த கோரி போராட்டம் மூன்றாம் நாளாக தொடர்கிறது.

DSCF4160 DSCF4178 DSCF4180தம்மை மீளக்குடியமர்த்தக் கோரி வலி-வடக்கு மக்கள்  ஆரம்பித்துள்ள தொடர் உண்ணாவிரதப் போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் ஆரம்பமாகியுள்ளது.
இராணுவத்தினரால் உயர்பாதுகாப்பு வலையம் என்  ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது நிலங்களை விடுவிக்க கோரி மக்கள்  மாவட்டபுரம் கந்தசுவாமி  ஆலய முன்றலில் போராட்டத்தினை மூன்றாவது நாளாகவும் முன்னெடுத்துள்ளார்கள். இன்றைய மூன்றாம் நாள்  போராட்டத்திலும் பல்வேறு அச்சுறுத்தல்களையும் தாண்டி நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தமது உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இன்றைய நாளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் , வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கஜதீபன் , சித்தார்த்தன் , ஆகியோரும் , பிரதேச சபை தவிசாளர்கள்  உறுப்பினர்கள்  , கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , கஜேந்திரன்  மற்றும் பொதுமக்கள்  எனப்பலர் கலந்து கொண்டுள்ளனர்

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச் சுவர் நேற்று புதன் அதிகாலை இடிக்கப்பட்டது.

131113084737_mullivaikkalmullivaikalmullivaykkal-memorial-parksஇலங்கையில் அரசு – புலிகளுடனான மோதல்களின் இறுதிக்கட்டத்தில் கொல்லப்பட்டவர்களின் நினைவாக இந்தியாவின் தஞ்சாவூரில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் முன்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா அரசு நிலத்தை ஆக்கிரமித்திருப்பதாகக் கூறி சுற்றுச் சுவர் நேற்று புதன் அதிகாலை மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுக்கு அமைய மாநில வருவாய்த் துறை அதிகாரிகள் பெரும் இயந்திரங்களை கொண்டு சுவர்களை ததகர்த்தனர். Read more

வலி-வடக்கு மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி இரண்டாம் நாளும் தொடர்கிறது போராட்டம்.

20131112_092732சொந்த நிலங்களில் தம்மை மீள்குடியமர்த்த கோரி வலி.வடக்கு மக்களால் நேற்றைய தினம் மாவட்டபுரம் கந்தசாமி ஆலயத்திற்கு முன்பான ஆரம்பமாகிய உணவு விடுப்புப் போராட்டம் இரண்டாவது நாளாகவும் இன்று காலை 8மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. இப் போராட்டம் எதிர்வரும் 15ஆம் திகதி வரை தொடர்ந்தும் நடைபெறவுள்ளது.
கடந்த 23 வருடங்களாக  6832 ஏக்கர் நிலப்பகுதி உயர்பாதுகாப்பு வலையம் ஆக்கப்பட்டுள்ளது.,
இன்று இரண்டாம் நாள் இந்த போராட்டத்தில் வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் நாளாளுமன்ற உறுப்பினர்களான சரவணபவன், மாவைசேனாதிராசா சிறிதரன் ,வடக்கு மாகாண சபையின் அமைச்சர்களான குருகுலராசா, சத்தியசீலன், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள்  கஜதீபன், சித்தார்த்தன், சுகிர்தன்  ஆகியோரும் பிரதேச சபைகளின்  தவிசாளர், உப தவிசாளர் , உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண

வடக்கு நோக்கி பயணம் மேற்கொண்ட சனல்4 ஊடகவியலாளர்கள் அனுராதபுரத்தில் இருந்து கொழும்புக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்

2398_content_yarldeviபொதுநலவாய மாநாட்டு செய்தி சேகரிப்பதற்காக இலங்கை வந்துள்ள கெலும் மக்ரே உட்பட சனல்4 ஊடகவியலாளர்கள் இன்று புதன்கிழமை வடக்கிற்கு விஜயத்தை மேற்கொண்டு பயணித்தனர்;. அவர்களை வடக்கிற்கு செல்லவிடாது ஆர்ப்பாட்டகாரர்கள் அனுராதபுரத்தில் அவர்கள் பயணம் செய்த ரயிலை மறித்து  எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் கிளிநொச்சி நோக்கி யாழ். தேவி ரயிலில் பயணம் செய்த லண்டன் சனல் 4 குழுவினருக்கு எதிராக அனுராதபுரத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தையடுத்து, பதற்ற நிலை ஏற்பட்டது.  இறுதியாக சனல் 4 குழுவினர் கொழும்பு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

வலி. வடக்கு மக்களின் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம்-

20131112_092016 20131112_092038 20131112_092657 20131112_092732 DSCF1134 sdfddd

யாழ்ப்பாணம் வலி வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கின்ற 6500 ஏக்கர் பொதுமக்களின் காணிகளை மீளவும் அம்மக்களிடம் கையளிக்க வேண்டுமென வலியுறுத்தியும், அம்மக்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியமர அனுமதிக்கப்பட வேண்டுமெனக் கோரியும் யாழ். மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இன்றுகாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வீடுகளையும், காணிகளையும் இழந்து அகதி முகாம்களில் அவல வாழ்வினை வாழ்ந்து கொண்டிருக்கின்ற மயிலிட்டி, பலாலி, காங்கேசன்துறை உள்ளிட்ட வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்களால் தமது அவலவாழ்வு முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும், தம்மை தமது சொந்த இடங்களில் மீள்குடியமர அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. Read more

மாநாடு குறித்த தகவல்களை பதிவுசெய்யவே வந்துள்ளேன்-கெலம் மக்றே-

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு தொடர்பான தகவல்களை பதிவுசெய்வதற்காகவே இலங்கை வந்துள்ளதாக செனல் 4 ஊடகவியலாளர் கெலம் மக்றே தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பில் பிரித்தானியாவின் செனல் 04 தொலைக்காட்சியில் கானொளிகளை வெளியிட்ட ஊடகவியலாளர் கெலம் மக்றேயின், இலங்கை வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நேற்று விமான நிலைய வளாகத்தில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினர், கெலம் மக்றே இலங்கை வருவதற்கு வீசா வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக, கெலம் மக்றேயுடன் வருகைதந்த குழுவினர் சுமார் 30 நிமிடங்கள் விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தனர். இங்கு ஊடகத்தினரிடம் கருத்து தெரிவித்த கெலம் மக்றே, பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு தொடர்பான தகவல்களை பதிவுசெய்வதற்காகவே நான் இங்கு வந்துள்ளேன். இங்கு என்ன நடக்கின்றது என்பதை ஆராய்ந்து, அது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளேன். அத்துடன் இங்கு என்ன நடக்கின்றது என்பது தொடர்பிலும் எழுதவுள்ளேன் என்று கூறியுள்ளார்.

பொதுநலவாய நாடுகளின் பிரதிநிதிகள் ஊவாவிற்கு விஜயம்-

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டிற்காக இலங்கை வரவுள்ள 14 நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் ஊவா மாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளனர். இவர்கள் நாளை மறுதினம் ஊவா செல்லவுள்ளதாக மாகாண பிரதான செயலாளர் பி.பீ அமரசேகர தெரிவித்துள்ளார். மாகாணத்தின் இனங்களுக்கிடையேயான ஒற்றுமை, சகவாழ்வு, சுற்றுலா சிறப்பிடங்கள், கல்வி, தொழில்துறை, கலாசாரம் மற்றும் விவசாயம் ஆகிய துறைகள் தொடர்பான தெளிவுகளை பெற்றுக்கொள்வதே இந்த விஜயத்தின் நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதுதவிர, பசறை, பெல்கஹதென்ன பயிற்சி நிலையம், பசரறை தமிழ் வித்தியாலயம், பண்டாரவளை மாநகர சபை, பண்டாரவளை கிரேக் பாடசாலை, ஹப்புத்தளை எடிசன் தங்கு இல்லம், வெல்லவாய ஹந்தபானகல வாவி, மாலிகாவில உள்ளிட்ட பல இடங்களை குறித்த குழு பார்வையிடவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

யாழ் – கொழும்பு விமான சேவை நிறுத்தம்-

யாழ்ப்பாணத்திற்கும் கொழும்புக்கும் இடையிலான விமானசேவை நேற்றுமுதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. விமானசேவை நிறுத்தப்பட்டதிற்கான காரணம் எங்களுக்கு தெரியாது, உள்நாட்டு விமானப் போக்குவரத்து சபையினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று மேற்படி விமான சேவையில் ஈடுபட்டுள்ள நிறுவனம் தெரிவித்துள்ளது, அத்துடன் விமான சேவைகள் எதிர்வரும் 18ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் எனவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், யாழ்ப்பாணத்திற்கு  இன்று விஜயம் மேற்கொண்டிருந்த கனேடியப் பிரதிநிதிகள் ஏ9 வீதியின் வழியாகவே சென்றிருந்தமை இங்கு  குறிப்பிடத்தக்கது.

ஏறாவூர் பகுதியில் கைக்குண்டு மீட்பு-

மட்டக்களப்பு, ஏறாவூர், மதுரன்காடு பிரதேசத்திலிருந்து கைக்குண்டு ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. ஏறாவூர் பொலிஸாருக்கு நேற்று கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து இந்த கைக்குண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. கல்லடி இராணுவ முகாமைச் சேர்ந்த அதிகாரிகளினால் இந்த கைக்குண்டு செயலிழக்கப்பட்டுள்ளது. கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளில் ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகுpன்றனர்.

பொதுநலவாய மாநாட்டின்போது 150 தீயணைப்பு வீரர்கள்-

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் தமது செயற்பாடுகளை விஸ்தரிப்பதற்கு கொழும்பு, தீயணைப்பு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கென, 150 தீயணைப்பு வீரர்கள் 08 இடங்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக திணைக்கள அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இதற்கமைய, எதிர்வரும் 20ஆம் திகதிவரை பேலியகொடை, தெமட்டகொடை, தும்முல்ல ஆகிய பகுதியில் இந்தக் குழுக்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், ஏனைய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

 

வடக்கு ஆளுநரின் உரையை எதிர்த்து அமர்வில் இருந்து மூவர் வெளிநடப்பு

வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறியின் உரைக்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மூன்று மாகாண சபை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். மாகாண சபை இரண்டாவது அமர்வின்போது, கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன், எம்.கே சிவாஜிலிங்கம், சுகிர்தன் ஆகியோர் வெளிநடப்பு செய்துள்ளனர். இதேவேளை, வட மாகாண சபையை ஆரம்பித்து வைக்கும் முகமாக ஆளுநர் ஜீ ஏ சந்திரசிறி உரையாற்றியுள்ளார்.

மன்மோகன் சிங்கின் தீர்மானம் தவறானது- ஜோன் கீன்-

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ளாமை தவறான தீர்மானம் என நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ தெரிவித்துள்ளார். டெக்கன் கொனிக்கல் என்ற ஊடகத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அந்த நாட்டின் அரசியல் கட்சிகளின் அழுத்தங்கள் காரணமாகவே மன்மோகன் சிங் இத்தீர்மானத்தை மேற்கொண்டதாகவும், இதுதவிர, கனேடிய பிரதமர் பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளாமை தவறானது எனவும் ஜோன் கீன் தெரிவித்துள்ளார். இதனிடையே, தாமும் வெளிவிவகார அமைச்சர் மரே மெக்கலியும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதாக நியூசிலாந்து பிரதமர் கூறியுள்ளார்.

டேவிட் கெமரூன் வடக்கிற்கு விஜயம்-

பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் உள்ளிட்ட குழுவினர் எதிர்வரும் 15ஆம் திகதி வட மாகாணத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர். இதன்போது, தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகளை அவர்கள் சந்தித்துப் பேசவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கின் தற்போதைய நிலவரம், மக்கள் வாழ்வாதார பிரச்சினை, வலி வடக்கு மீள்குடியேற்றம் உள்ளிட்ட பல்வேறுப்பட்ட விடயங்கள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.. இதேவேளை, யாழ் பொதுநூலகத்தில் இடம்பெறவுள்ள நிகழ்வொன்றிலும் பிரித்தானிய பிரதமர் கலந்து கொள்ளவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

தொண்டராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்-

யாழ் மாவட்ட 231 தொண்டராசியர்கள் இன்று வட மாகாண சபைக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். தங்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன் எடுக்கப்பட்டதாக தொண்டராசிரியர் சங்க செயலாளர் வீ சுபதீஸ் தெரிவித்துள்ளார்;. எட்டு வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் இதுவரை தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மாநாட்டை பகிஷ்கரிப்பது மனித உரிமை மீறல்களுக்கு எதிரான நடவடிக்கையல்ல – ஜோன் கீ-

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டை பகிஷ்கரிப்பது, இலங்கையில் இடம்பெற்றதாகக கூறப்படும் மனித உரிமை மீறல்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு ஏற்ற நடவடிக்கை அல்லவென என நியூசிலாந்து தெரிவித்துள்ளது. பொதுநலவாய மாநாட்டின் உறுப்பு நாடு என்ற வகையில் மாநாட்டில் பங்குபற்றுவது மிகவும் அவசியம் என நியூஸிலாந்து பிரதமர் ஜோன் கீ தெரிவித்துள்ளார். இந்த மாநாடு இலங்கையுடனான இருதரப்பு கலந்துரையாடல் அல்லவெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கமைய தாமும் வெளிவிவகார அமைச்சர் மரீ மெக்கலீயும் பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கைக்கு வருகை தரவுள்ளதாகவும்,  இதன்போது, வடக்கு மாகாண சபை, மக்கள் வழங்கிய ஆணையை அரசியலமைப்புக்கு உட்பட்ட வகையில் மேற்கொள்ளும் என நம்பிக்கை இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.