Header image alt text

பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் காலம் நீடிப்பு-

parliamentதேசிய பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் புதிய அரசியல் அமைப்பை தயாரிக்கும் நோக்கில் நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் காலத்தை இன்னும் ஆறு மாதங்களுக்கு நீடிப்பதற்கு நாடாளுமன்றம் இன்று தீர்மானித்துள்ளது. இதன் பிரகாரம் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் காலம் ஜூன் 21ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. சபை முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறி பாலடி சில்வா சமர்ப்பித்த யோசனைக்கே நாடாளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த தெரிவுக்குழுவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியன புறக்கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

காணாமற் போனோர் மற்றும் சொத்து சேத மதிப்பீட்டுப் பணிகள் பூர்த்தி-

unnamed6வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இடம்பெற்ற மோதல்நிலை காரணமாக 1982 ஆம் ஆண்டு தொடக்கம், காணாமல் போனவர்கள் மற்றும் சொத்துக்களுக்கான சேதம் தொடர்பில் புள்ளிவிபரங்களை சேகரிக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இதனைத் தவிர ஏனைய பகுதிகளில் இந்த தகவல்களை திரட்டும் பணிகள் நாளை நிறைவடையவுள்ளதாக, தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டீ.ஏ.சீ குணவர்தன தெரிவித்துள்ளார். குறிப்பாக கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்தறை ஆகிய மாவட்டங்களில் கணக்கெடுப்பாளர்கள் சென்று சேகரிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாகவே, பூரணமாக புள்ளிவிபரங்கள் திரட்டும் பணிகள் நிறைவயடையவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறாது-

unnamed12016ஆம் ஆண்டிலிருந்து ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறமாட்டாது என கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் இந்திய கரையோர காவல்படைக் கப்பல்கள்-

unnamed2இந்தியாவின் இரண்டு கரையோரப் காவல்படைக் கப்பல்கள் திருகோணமலை துறைமுகத்தை நேற்று வந்தடைந்துள்ளன. ‘விஷ்வாஸ்ட்’ மற்றும் ராஜ்கமல் ஆகிய கப்பல்களே திருமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. இந்தியா, மாலைதீவு மற்றும் இலங்கைக்கு இடையேயான முத்தரப்பு பயற்சி ஒன்றில் கலந்துகொள்ளும் முகமாகவே இக் கப்பல்கள் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துமிந்த சில்வா வெளிநாடு செல்வதற்கு அனுமதி-

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அனுமதி கொழும்பு மேல் நீதிமன்றத்தினாலேயே வழங்கப்பட்டுள்ளது. வைத்திய சிகிச்சைகளுக்காக ஜனவரி மாதம் 6ஆம் திகதிமுதல் ஒருமாத காலத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா வெளிநாடு செல்ல முடியும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

28இல் மேல், தென் மாகாணசபைகள் கலைக்கப்படுமென தகவல்-

imagesCAAFRW6Nமேல் மற்றும் தென் மாகாணசபைகள் எதிர்வரும் 28ஆம் திகதி கலைக்கப்படும் என அரச தகவல்கள் கூறுகின்றன. இந்த மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் அடுத்த வருடம் மார்ச்சில் நடைபெறும் எனவும் அந்தத் தகவல்கள் கூறுகின்றன. இந்த மாகாணசபைகள் இம்மாத இறுதியில் கலைக்கப்படும். எனவே, தேர்தல்களை நடத்த தயாராக வேண்டும் என நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நிறைவேற்றுக்குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியிருந்தார். இதேவேளை, விரைவில் தேர்தல்களை நடத்துவதற்காக அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் இந்த மாகாணசபைகள் கலைக்கப்படும்; என அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த சுட்டிக்காட்டியிருந்தார்.

மடு, கோவில் புளியங்குளத்தில் சடலம் மீட்பு-

மன்னார் – மடு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோவில் புளியங்குளம் பிரதேசத்தில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. இன்றுகாலை ஆணொருவரின் சடலத்தினை மடு பொலிஸார் மீட்டுள்ளனர். வவுனியா கல்மடு கிராமத்தை சேர்ந்த 54வயதான சண்முகம் தியாகராசா என்ற குடும்பஸ்தரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பான விசாரணைகளை மடு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்-

unnamed4இந்தியாவில் கைதுசெய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து புத்தளம் மாவட்டம் வென்னப்புவ, தோப்புவ பாலத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் கொழும்பு – சிலாபம் வீதியில் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டிருந்தது. சம்பவ இடத்திற்குச் சென்ற சிரேஸ்ட அமைச்சர் மில்ரோய் பெனாண்டோவுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் முரண்பட்ட நிலையில் மீன்பிடி பிரதி அமைச்சர் சரத்குமார குணரத்ன மற்றும் மாகாண மீன்பிடி அமைச்சர் சனத் நிசாந்த ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி ஆர்ப்பாட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச புலம் பெயர்ந்தோர் தினம்-

unnamed4சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. புலம்பெயர்ந்தவர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான விசேட திட்டங்களை உறுவாக்குதல் என்பதே இவ் வருடத்திற்கான தொனிப் பொருளாக அமைந்துள்ளது. சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினத்தை முன்னிட்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பல வேலைத்திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பணியகத்தின் பிரதி பொதுமுகாமையாளர் மங்கள ரன்தெனிய கூறியுள்ளார். ஐ.நா சபையின் 2000ஆம் ஆண்டு சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டு அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

50 ஏக்கர் காணியை மாத்திரமே தனி நபர் வைத்திருக்கும் சட்டம்-

காணி உரிமை தொடர்பில் புதிய சட்டமொன்றை அறிமுகம் செய்ய அரசாங்கம் உத்தேசித்துள்ளது. முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிக் காலத்தில் காணப்பட்டதைப் போல சட்டமொன்றை அறிமுகம் செய்யவுள்ளதாகவும் அதன்படி தனி நபர் ஒருவர் வைத்திருக்கக் கூடிய அதி கூடிய காணியின் அளவு 50 ஏக்கர் எனவும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார். இச்சட்டம் காரணமாக சட்டவிரோதமான முறையில் காணி உரிமையை பேணி வருவதனால் அரசாங்கத்திற்கு பாரியளவில் வரி வருமான இழப்பு ஏற்படுவதை குறைக்கலாம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். வைத்தியசாலையில் பணிப்புறக்கணிப்பு-

unnamed1 unnamed2யாழ். போதனா வைத்தியசாலை தொண்டர்களுக்கு ஆதரவாக வைத்தியசாலை அனைத்து துறையினரும் இன்று ஒரு மணிநேர பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். யாழ். போதனா வைத்தியசாலையில் தொண்டர்களாக பணிபுரிந்தோர் தமக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் என கோரி கடந்த வெள்ளிக்கிழமை முதல் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆறாவது நாளாக இன்றைய தினமும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொண்டர்களுக்கு ஆதரவாக வைத்தியசாலை மருத்துவர்கள், தாதியர்கள், நிறைவு காண் மருத்துவவியல் தொழில் வல்லுனர்கள், சிற்றூழியர்கள், சாரதிகள், மற்றும் நிர்வாக உத்தியோகஸ்தர்கள் ஒரு மணி நேர பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர். ஆறாவது நாளாக இன்றும் எம் போராட்டத்தை முன்னெடுக்கிறோம் இதுவரை எமக்கு எந்த தீர்வும் வழங்கப்படவில்லை. நாளையும் தீர்வு கிடைக்காவிடின் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுப்போம் என அவர்கள் கூறியுள்ளனர்.

நானாட்டான் விவகாரம்; 18பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு-

மன்னார், நானாட்டான் பிரதேச செயலகம்மீது தாக்குதல் மேற்கொண்டதாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 18பேருக்கான விளக்கமறியலை எதிர்வரும் 23ஆம் திகதிவரை நீடிக்குமாறு மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்னம் இன்று உத்தரவிட்டுள்ளார். நானாட்டான் பிரதேசச் செயலகம்மீது கடந்த 9ஆம் திகதி தாக்குதல்களை மேற்கொண்டதாக கூறி பொன்தீவுகண்டல் கிராமத்தைச் சேர்ந்த 65பேரை முருங்கன் பொலிஸார் கைதுசெய்து கடந்த 15ஆம் திகதி மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மன்னார் மாவட்ட பதில் நீதவான் இவர்களில் 18பேரை இன்று 18ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதோடு ஏனைய 47 பேரையும் தலா 25 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் செல்ல அனுமதித்தார். அத்துடன் அந்த 47 பேரையும் இன்று நீதிமன்றில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டிருந்தார். விளக்கமறியலில் இருந்த 18பேரும் இன்று மன்னார் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்னம் குறித்த அவர்களை எதிர்வரும் 23ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். அத்துடன் பிணையில் விடுதலை செய்யப்பட்ட 47 பேரும் மன்றில் ஆஜராகிருந்த நிலையில் அவர்களை எதிர்வரும் ஜனவரி 10ஆம் திகதி மீண்டும் மன்றில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

ஐ.நா. பிரதிநிதி பாதுகாப்புச் செயலர் சந்திப்பு-

போர்க் குற்றங்கள் தொடர்பில் இலங்கை உள்ளக விசாரணை நடத்தவில்லையென்றால், ஐ.நா சபையினூடாகச் சர்வதேச விசாரனை மேற்கொள்ள நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என பிரிட்டன் எச்சரித்துள்ள நிலையில், ஐ.நா பிரதிச் செயலாளர் எலியாசனுடன் சந்திப்பொன்றைப் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச மேற்கொண்டுள்ளார். அமெரிக்கா சென்றுள்ள பாதுகாப்புச் செயலர், நியூயோர்கிலுள்ள ஐ.நா பொதுச்சபைக் கட்டடத்தில் பிரதிச் செயலருடன் திங்கட்கிழமை சந்திப்பை நடத்தியுள்ளார். இச் சந்திப்பு தொடர்பில் தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படாத நிலையில், இன்ன சிற்றி பிரஸ் பிரதிச் செயலரிடம் மின்னஞ்சல் மூலமாக கலந்துரையாடப்பட்ட விடயங்களைக் கேட்டிருந்தது. அதற்குப் பதிலளித்துள்ள பிரதிச் செயலர், இந்தச் சந்திப்பு விசேடமான சந்திப்பு ஒன்றும் இல்லை. உறுப்பு நாடுகளுக்கிடையேயான வழக்கமான சந்திப்புக்களின் ஒரு பகுதியாகவே இது அமைந்திருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை விடயத்தில் உறுதியாகவே இருப்பதாக காங்கிரஸ் தெரிவிப்பு-

unnamed0இலங்கை விடயத்தில், காங்கிரஸ் கட்சி அதன் நிலைப்பாட்டில் உறுதியாகவே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் பி எஸ் ஞானதேசிகன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும், இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வு வியடத்தில் தாமதம் ஏற்படுவதையும் காங்கிரஸ் அனுமதிக்காது எனவும் ஞானதேசின் குறிப்பிட்டுள்ளார்.

கனகராயன்குளம் பகுதி கிணற்றில் விழுந்து சிறுவன் மரணம்-

கிளிநொச்சி – கனகராயன்குளம் பகுதியில் பொதுக்கிணறு ஒன்றினுள் விழுந்து சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். இச்சம்பவம் நேற்றிரவு 8 மணியளவில் நடைபெற்றுள்ளதாக கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிணற்றில் விழுந்த 7வயதான விஜயன் ஆதித்தியன் என்ற சிறுவன் பிரதேச மக்களால் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளார். சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மொழிப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தால் நல்லிணக்கம் ஏற்படும்-வாசுதேவ-

vaasudevaதனித் தமிழ்ப் பிரதேசங்களில் தமிழ் மொழியிலும், தனிச்சிங்கள பிரதேசங்களில் சிங்கள மொழியிலும் கடமையாற்றக் கூடியவாறு அரச ஊழியர்களுக்கு மொழி அறிவு வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். மொழி அமுலாக்கல் மற்றும் அரச மொழிகள் அமைச்சு உட்பட தெரிவுக்குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்ட 10 சிரேஷ்ட அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். தமிழர் ஒருவருக்கு அவர் தமிழ் என்று தெரிந்தும் தனிச் சிங்களத்தில் கடிதம் அனுப்புவது அவரை கத்தியால் குத்துவதற்கு சமனாகும். தனித்தமிழ்ப் பிரதேசங்களில் தமிழ் மொழியிலும், தனிச்சிங்கள பிரதேசங்களில் சிங்கள மொழியிலும் கடமையாற்றக் கூடியவாறு அரச ஊழியர்களுக்கு மொழி அறிவு வழங்கப்பட வேண்டும். மேலும் அரச அலுவலகங்களில் தமிழ், சிங்கள மொழி பெயர்ப்பாளர்கள் இருக்க வேண்டும். அத்துடன் அரச அலுவலகங்களில் வெளியிடப்படும் சுற்று நிருபங்கள் விண்ணப்பப்படிவங்கள் அனைத்தும் மும்மொழிகளிலும் இருக்க வேண்டும். Read more

யுத்தகால மண் அணைகளை அகற்றுமாறு கோரிக்கை-

unnamedமுல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பயிர்ச்செய்கை நிலங்களிலும் குடியிருப்பு பகுதிகளிலும் காணப்படும் மண் அணைகளையும் கைவிடப்பட்ட காவலரண்களையும் அகற்றித் தருமாறு மீள்குடியேறியுள்ள மக்கள் பிரதேச செயலகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். குறித்த பகுதியில் பொதுமக்கள் குடியிருப்புக்கள் மற்றும் பயிர்ச்செய்கை நிலங்களில் யுத்த காலத்தில் போடப்பட்டிருந்த மண் அணைகள், கைவிடப்பட்ட காவலரண்கள் ஆகியன இன்றுவரையும் பல பகுதிகளில் காணப்படுகின்றன. இவை அகற்றப்படாமையால் விவசாய நிலங்களில் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. கைவிடப்பட்ட காவலரண்களில் வெடிபொருட்களின் அச்சம் காணப்படுவதால் அவற்றினை அப்பகுதி மக்கள் அகற்ற முடியாத நிலையில் உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்திய மீனவர்களின் விடுதலை கோரி ஆர்ப்பாட்டம்-

sri india mapஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மற்றும் பதுவை மீனவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி இந்திய தலைநகர் புதுடில்லியில் போராட்டம் ஒன்று நடாத்தப்பட்டுள்ளது. தலைநகர் புதுடில்லியில் மீனவர்கள் ஐக்கிய முன்னணியின் ஏற்பாட்டில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்திற்கு உள்ளுர் மீனவர்களும் ஆதரவு வழங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் பங்குகொண்ட மீனவர்கள், இலங்கைச் சிறையிலுள்ள மீனவர்களையும் அவர்களது உடைமைகளையும் உடனடியாக மீட்க வலியுறுத்தி எட்டு அம்ச கோரிக்கையை இந்திய மத்திய அரசிடம் விடுத்துள்ளனர். தமிழகத்தின் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை மத்திய அரசாங்கம் உதாசீனப்படுத்தி வருவதாகவும் புதுடில்லியில் கூடிய மீனவர்கள் இதன்போது குற்றம் சுமத்தியுள்ளனர்.

அதிக பஸ் கட்டணம் அறவிட்டால் அறிவிக்க தொலைபேசி இலக்கம் அறிமுகம்-

unnamed 4பண்டிகைக் காலத்தில் பயணிகளின் நலன்கருதி கால அட்டவணைக்கு புறம்பாகவும் தூரப் பிரதேசங்களுக்கான பஸ் சேவைகளை முன்னெடுப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் இந்த பஸ் சேவைகள் நடத்தப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ரொஷான் குணவர்தன தெரிவித்துள்ளார். பண்டிகை காலத்தில் பயணிகளை சிரமத்திற்குள்ளாக்கும் வகையில் கூடுதல் கட்டணம் அறவிடும் பஸ் ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. உரிய பஸ் கட்டணங்களை விட அதிகமாக பணத்தை அறவிடும் நடத்துநர்கள் தொடர்பில் 1955 என்ற இலக்கத்திற்கு முறைப்பாடு செய்யுமாறு ஆணைக்குழுவின் தலைவர் பயணிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தூரப் பிரதேச பஸ் சேவைகளை கண்காணிப்பதற்காக அதிகாரிகள் குழுவொன்றை கடமையில் ஈடுபடுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வாக்காளர் இடாப்பு இறுதிப் பட்டியல் தயாரிப்பு-

unnamed32013ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்புக்கான இறுதிப் பட்டியலை தயாரிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. தற்போது மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் நிறைவு பெற்றுள்ளதாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் கூறியுள்ளார். இதேவேளை, உதவி தேர்தல் ஆணையாளர்கள் மற்றும் பிரதி தேர்தல் ஆணையாளர்களுக்கு இடையில் விசேட கலந்துரையாடலொன்று எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ளதாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் கூறியுள்ளார். 2013ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பை அத்தாட்சிப்படுத்துதல் மற்றும் எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதே இதன் நோக்கம் என பிரதி தேர்தல்கள் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை யுத்தத்தின்போது ஏராளமான பாடம் கற்றோம்-பான் கீ மூன்-

unnamed6இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின்போது, ஏராளமான பாடங்களை கற்றுக் கொண்டதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. நிவ்யோர்கில் உள்ள ஐ.நா தலைமையத்தில் நேற்று இடம்பெற்ற நாளாந்த செய்தியாளர் சந்திப்பின்போது, அதன் பொதுச் செயலாளர் பான் கீ மூன் இதனை தெரிவித்துள்ளார். ஏனைய நாடுகளில் விடப்படும் தவறுகளை இதன்மூலம் திருத்திக் கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கான, முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் பான் கீ மூன் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின்போது, ஐ.நா சபை உரிய வகையில் செயற்பட்டதா? இல்லையா? என்பது தொடர்பாக ஆரய்வதற்காக தம்மால் நிபுணத்துவ குழுவொன்று நியமிக்கப்பட்டதாகவும், அவர்களினால் வழங்கப்பட்ட பரிந்துரைகளுக்கு அமையவே, முன்னேற்பாடுகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தாய்லாந்துக்கு இலங்கை ஆலோசனை-

imagesCAQV6EVTதாய்லாந்தில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஆலோசனை வழங்கியுள்ளது. நாட்டின் ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பில் சகல கட்சிகளும் இணைந்து பேச்சுவார்த்தைகளை நடத்துவதன் மூலம் சுமூக நிலையை ஏற்படுத்த முடியும் என இலங்கை ஆலோனை தெரிவித்துள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் தாய்லாந்தில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அவதானித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கையால் வழங்கக்கூடிய பூரண ஒத்துழைப்புகளையும் தமது நாடு வழங்கும் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சிறுவர் துஸ்பிரயோக வழக்கை விசாரிக்க நீதவான், மேல்நீதிமன்றம்-

unnamed5சிறுவர்கள் மீதான துஸ்பிரயோகம் மற்றும் வல்லுறவு குறித்து விசாரிக்க விரைவில் விசேட நீதிமன்றம் அமைக்கப்படும் என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அதற்காக நீதவான் மற்றும் மேல் நீதிமன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். சிறுவர் துஸ்பிரயோக வழக்குகளை விரைவில் நிறைவுக்கு கொண்டுவர இதன்மூலம் எதிர்பார்ப்பதாக அமைச்சர் பாராளுமன்றில் இன்று கூறியுள்ளார். ஐ.தே.கட்சியின் கொழும்பு மாவட்ட எம்.பி ரோசி சேனாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே நீதி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த நான்கு வருடங்களில் 2420 சிறுவர் துஸ்பிரயோக மற்றும் வல்லுறவு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அதில் 517 வழக்குகளுடன் தொடர்புபட்டவர்களுக்கு மாத்திரமே தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோசி சேனாநாயக்க இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இலட்சியம் தான் முக்கியம் என்று யாதார்த்தத்தை கோட்டை விடுவதில் எந்த பயனுமில்லை – வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.

CV01“இலட்சியம் தான் முக்கியம் என்று யாதார்த்தத்தை கோட்டை விடுவதில் எந்த பயனுமில்லை. மாறாக யாதார்த்தத்தை உணர்ந்து இலட்சியத்தை அடையும் வழியை மறுசீரமைத்துச் செல்வதே புத்திசாலித்தனம்”

சாவகச்சேரி சிவன் கோயில் வீதியிலுள்ள தென்மராட்சி கலைமன்ற கலாசார மண்டபத்தில் இன்று (16.12.13) தென்மராட்சி கல்வி வலயத்தின் மார்கழித் திங்கள் முழுநிலா நாள் கலை விழா நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். Read more

போகம்பரை சிறை ஜனவரி 1இல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் கையளிப்பு   சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்திரரட்ன பல்லேகம தெரிவித்தார்.

Bogambara-140கண்டி, போகம்பரை சிறைச்சாலை வளாகம் பல்லேகல திறந்தவெளி சிறைச்சாலை வளாகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் போகம்பரை சிறைச்சாலை வளாகம் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது. மேற்படி சிறைச்சாலை வளாகத்தை ஜனாதிபதியிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். Read more

புளொட் தோழர். த. சிவநேசராசா(பைரவன், சேனன்) துயர் பகிர்தல்’

12-1024x512 Read more

கறுப்பின மக்களின் தந்தை நெல்சன் மண்டேலாவின் உடல் கண்ணீர் மழையுடன்  நல்லடக்கம்.

_71750545_020349087-1மறைந்த தென்னாபிரிக்க தந்தையும், முன்னாள் ஜனாதிபதியும், போராட்ட வீரரும் சமாதானத்தின் பரிசை பெற்றவருமான அமரர் நெல்சன் மண்டேலா உடல் இன்று அவரது சொந்த கிராமத்தில் அவரது வீட்டின் அருகே அரச மரியாதையோடு நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது இறுதி சடங்கில் இங்கிலாந்து இளவரசர் சார்ல்ஸ் உள்பட 100 நாடுகளின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். பொதுமக்கள் கண்ணீருடன் மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்தினர். Read more

Cabinet-meetingநெருக்கடிகளின் காரணமாக போயா தினத்தில் இலங்கை அரசின் அமைச்சரவை கூட்டம்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் நாளை காலை 7 மணியளவில் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் அரசாங்கத்துக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள பல முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. Read more

சிவிலியனையே ஆளுநராக நியமிக்க கோரப்படுகின்றதே தவிர சிங்களவரை நியமிக்க வேண்டாமென கூறவில்லை இதில் எந்தப் பிழையையும் நான் காணவில்லை: வாசுதேவ நாணயக்கார

vaasudevaநாடாளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற உள்ளூராட்சி மாகாண சபைகள் மற்றும் காணி, காணி அபிவிருத்தி அமைச்சுக்களின் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஏகாதிபத்தியவாதிகளின் அச்சுறுத்தலுக்கு மஹிந்த ராஜபக்ஷ அடிபணியவில்லை. அனைத்தையும் அவர் தோல்வியடையச் செய்தார். உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு தமது சேவைகளை மக்களுக்காக மேற்கொள்வதற்கு அனைத்து உதவிகளும் வழங்கப்பட வேண்டும். Read more

கூட்டமைப்பு-ஆளுநருக்கு இடையிலான பிரச்சினையை பேசி தீர்க்கவேண்டும்: விக்னேஷ்வரன் 

.
imagesதமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அதிகாரத்தின் கீழிருக்கின்ற வடமாகாண சபையில் முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரனுக்கும் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிரிக்கும் இடையே உண்டாகியுள்ள மோதலை பேச்சுவார்த்தையினால் தீர்த்துக்கொள்ளவேண்டும் என்று கலாநிதி கே.விக்னேஷ்வரன் கூறியுள்ளார். Read more