மட்டக்களப்பில் கையெழுத்துப் பெறும் போராட்டம்-
 அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரியும் குமார் குணரெட்னத்தின் அரசியல் உரிமையினை வலியுறுத்தியும் மட்டக்களப்பு நகரில் கையெழுத்துப்பெறும் போராட்டம் ஒன்றினை முன்னிலை சோசலிசக்கட்சி முன்னெடுத்துவருகின்றது. இன்று காலை 11.00 மணி முதல் மட்டக்களப்பு நகரின் பிரதான பஸ் நிலையத்துக்கு முன்பாக இந்த போராட்டம் இடம்பெற்றது. இதன்போது, அரசியல் கைதிகளை விடுதலை செய், குமார் குணரத்தினத்தின் அரசியல் உரிமையை பறிக்காதே, காணாமல் போனவர்களையும் கடத்தப்பட்டவர்களையும் மீட்டுத்தர வேண்டும் ஆகிய கோரிக்கைகள் அடங்கிய பதாகையில் கையொப்பங்கள் பெறப்பட்டன. இந்த நிகழ்வில் முன்னிலை சோசலிசக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் ஆர்.கே.இந்திராநந்த, சமவுரிமை இயக்கத்தின் தலைவர் தர்மலிங்கம் கிருபாகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதன்போது குமார் குணரெத்தினம் உட்பட நாடு கடத்தப்பட்ட அனைவரினதும் அரசியலில் ஈடுபடும் உரிமையினை பறிக்காதே என்ற தலைப்பில் துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டன.
அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரியும் குமார் குணரெட்னத்தின் அரசியல் உரிமையினை வலியுறுத்தியும் மட்டக்களப்பு நகரில் கையெழுத்துப்பெறும் போராட்டம் ஒன்றினை முன்னிலை சோசலிசக்கட்சி முன்னெடுத்துவருகின்றது. இன்று காலை 11.00 மணி முதல் மட்டக்களப்பு நகரின் பிரதான பஸ் நிலையத்துக்கு முன்பாக இந்த போராட்டம் இடம்பெற்றது. இதன்போது, அரசியல் கைதிகளை விடுதலை செய், குமார் குணரத்தினத்தின் அரசியல் உரிமையை பறிக்காதே, காணாமல் போனவர்களையும் கடத்தப்பட்டவர்களையும் மீட்டுத்தர வேண்டும் ஆகிய கோரிக்கைகள் அடங்கிய பதாகையில் கையொப்பங்கள் பெறப்பட்டன. இந்த நிகழ்வில் முன்னிலை சோசலிசக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் ஆர்.கே.இந்திராநந்த, சமவுரிமை இயக்கத்தின் தலைவர் தர்மலிங்கம் கிருபாகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதன்போது குமார் குணரெத்தினம் உட்பட நாடு கடத்தப்பட்ட அனைவரினதும் அரசியலில் ஈடுபடும் உரிமையினை பறிக்காதே என்ற தலைப்பில் துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டன.
வெளிநாடுகளிலிருந்து அனுப்படும் பொருட்களை வீடுகளில் கையளிக்க ஏற்பாடு-
சாதாரண மக்களின் நலனை கருத்திற்கொண்டு, வெளிநாடுகளில் இருந்து அனுப்பிவைக்கப்படும் பரிசுப்பொருட்களை வீடுகளுக்கே கொண்டு சென்று கையளிக்கும் புதிய முறையை சுங்கத்திணைக்களம் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக சுங்கத்திணைக்களத்தின் பணிப்பாளர் ஜகத் டி வீரவர்த்தன நேற்று ஊடகத்தினரிடம் தெரிவித்துள்ளார். இம்முறையை மார்ச்மாத இறுதியிலிருந்து செயற்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் லக் ஸ்ரீ சோவா என்ற தனியார் நிறுவனத்தின ஊடாக இத்திட்டத்தை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இலங்கையிலுள்ள 6 நிறுவனங்களில் தற்போது லக் ஸ்ரீ சோவா நிறுவனத்திடம் மாத்திரமே ஸ்கேனிங் இயந்திரம் இருப்பதனால் இந்நிறுவனத்தின் ஊடாக இத்திட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம். பொதிகளை உடைக்காது ஸ்கேனிங் இயந்திரத்தின் உதவியுடன் சோதனைக்குட்படுத்தி அவற்றை உரிமையாளர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இச்சேவைக்காக உரிமையாளர்கள் எவ்வித் கட்டணங்களையும் செலுத்த வேண்டிய அவசியமில்லை. பொதிகளை அனுப்புபவர் கண்டணத்தை செலுத்துவதால் பெற்றுக்கொள்பவர் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நான்கு இலங்கையர்களை திருப்பி அனுப்பிய அவுஸ்திரேலியா-
படகு மூலம் அவுஸ்திரேலியா சென்ற நான்கு இலங்கை பிரஜைகள் அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலிய கோகஸ் தீவு கடற்பரப்பில் வைத்து குறித்த இலங்கையர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த 9ம்திகதி தடுத்து நிறுத்தப்பட்ட இவர்கள் மறுநாள் இலங்கைக்கு திருப்பு அனுப்பட்டதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் பீட்டர் டுடோன் தெரிவித்துள்ளார். இலங்கை கடற்பாதுகாப்பு அதிகாரிகளுடன் இணைந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்கடத்தல் காரர்களின் செயற்பாடுகளை தடுத்து நிறுத்த அவுஸ்திரேலிய அரசாங்கம் உறுதியுடன் இருப்பதாக குடிவரவு அமைச்சர் கூறியுள்ளார்.
குமார் குணரத்னத்திற்கு குடிவரவு திணைக்களம் அழைப்பு-
முன்னிலை சோஷலிச கட்சியின் மத்திய குழு உறுப்பினர் குமார் குணரத்னத்தை நாடுகடத்தும் உத்தரவு ஆவணத்தை அவரிடமே கையளிக்க குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது. குமார் குணரத்னம் தன்னை நாடு கடத்த வேண்டாம் என கோரி தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு உயர் நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டுள்ளது. அதனால் இலங்கையில் தொடர்ந்தும் தங்கியிருக்க குமார் குணரத்னத்திற்கு அனுமதி இல்லை. இந்நிலையில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு வருமாறு குமார் குணரத்னத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பை நிராகரிப்பாராயின் குமார் குணரத்னம் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படுவார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
உள்நாட்டு பொறிமுறை ஆபத்தானது – குணதாஸ அமரசேகர-
உள்நாட்டு பொறிமுறை நாட்டுக்கு மேலும் ஆபத்தானது என்று, தேசிய அமைப்புக்களின் ஒன்றிய இணைப்பாளர் குணதாஸ அமரசேகர கூறியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், உள்நாட்டு விசாரணைகள் குறித்து கேள்விகளை எழுப்ப முடியாது என்று கூறியுள்ளார். வெளிநாட்டில் இருந்து மேற்கொள்ளப்படும் விசாரணை ஒன்று தொடர்பில் எதிர்ப்புகளை வெளிப்படுத்த முடியும். உள்நாட்டு விசாரணைகளுக்கு அவ்வாறு செய்யமுடியாது. அத்துடன் இது உள்நாட்டு விசாரணை என கூறப்படுகிறபோதும், அவர்களுக்கு தேவையான வகையிலேயே இந்த விசாரணை இடம்பெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆஸியில் இலங்கை அகதிகள் துன்புறுத்தல்-
அவுஸ்திரேலியாவின் தடுப்பு முகாமான பப்புவா நியுகினியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழ அகதிகள் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு தொண்டு பணியாளராக பணியாற்றிய ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளதாக பி.பி.சீ ஊடகம் தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளாக செல்கின்றவர்கள் இந்த முகாமில் தடுத்து வைக்கப்படுகின்றனர். இந்த முகாமில் இலங்கை, ஈரான், மியன்மார் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் தடுத்து வைக்கபட்டுள்ள நிலையில் அவர்களை அங்குள்ள அதிகாரிகளால் நாளாந்தம் நிந்தனை செய்வதாக அவர் கூறியுள்ளார். இனரீதியாக தூசித்தல், துன்புறுத்தப்படுதல், முறையாக பேணப்படாமை போன்ற பல்வேறு கொடுமைகளுக்கு அகதிகளை ஆளாகின்றனர். அத்துடன் சரியான சுகாதார வசதிகள் இல்லாமையால், பல நோய்களுக்கும் அவர்கள் ஆளாக்கப்படுகின்றனர் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமரன் பத்மநாதன் குறித்த மனுமீதான விசாரணை ஒத்திவைப்பு-
புலிகள் இயக்க முக்கியஸ்தர்களில் ஒருவரான கே.பி. என்கிற குமரன் பத்மநாதன்மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல்செய்த ரிட்மனு இன்று பரிசீலணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் விஜித் மலல்கொட மற்றும் எச்.சீ.ஜே. மடவல ஆகிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு பரிசீலிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்வதற்காக கால அவகாசம் தேவைப்படுவதாக சட்ட மாஅதிபர் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான சொலிஸ்டர் ஜெனரல் சுஹத கம்லத் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார். பொலிஸ் மாஅதிபர், பாதுகாப்பு செயலாளர் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோரை சந்தித்து தாம் இந்த விடயம் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ள வேண்டியுள்ளதாகவும் அவர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆயினும், குமரன் பத்மநாதன் என்பவர் கைதுசெய்யப்பட்ட பின்னர் சுதந்திரமாக நடமாட இடமளிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் சார்பாக நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருந்த சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கை இராணுவத்திற்கு எதிராக யுத்தம் புரிவதற்காக புலிகள் இயக்கத்திற்கு தமது கப்பல்கள்மூலம் குமரன் பத்மநாதன் ஆயுதங்களையும், குண்டுகளையும் விநியோகித்துள்ளதாகவும் சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார். கே.பீ. மலேஷியாவில் கைதுசெய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்துவரப்பட்டதாக அறியக்கிடைக்கின்ற போதிலும், அவ்வாறான குற்றவாளி ஒருவர் தொடர்பில் எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளதாகவும் சட்டத்தரணி கூறியுள்ளார். இருதரப்பு வாதங்களையும் கவனத்திற்கொண்ட பின் இந்த மனுமீதான விசாரணை பெப்ரவரி 26ஆம் திகதிக்கு நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டது. கே.பி வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு எதிர்வரும் 26ஆம் திகதிவரை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
 
		     
  யாழ்ப்பாணம் வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களது தலைமையில் மூளாய் பாணாவட்டிப் பகுதியில் மிக அண்மைக்காலத்தில் திறக்கப்;பட்ட வைத்தியசாலைக்கு ஜேர்மன் நாட்டிலிருந்து வருகை தந்திருந்த திரு.சபாரட்ணம் ஜெயகுமார்(சாமியார்) மற்றும் திருமதி. ஜெயகுமார் வசந்தி, புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வடமாகாண உருப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தர்த்தன் ஆகியோர் அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்தனர். இவ் நிகழ்வின்போது வைத்தியசாலைப் பொறுப்பதிகாரி மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் இவர்களை வரவேற்றதோடு வைத்திய சாலையின் தேவைகள் தொடர்பிலும் எதிர்கால திட்டங்கள் குறித்தும் கருத்துக்களை முன்வைத்தனர். இதன்போது வைத்தியசாலையை அழகுபடுத்தும் பொருட்டு வைத்திய சாலையின் முன் பகுதியில் சிறு பூங்கா அமைக்கும் திட்டம் தொடர்பிலான கருத்துக்களையும் அவர்கள் முன்வைத்தனர் இவ் விடயம் தொடர்பில் குறித்த குழுவினர் இவ் ஆண்டுக்கு முன்னதாக மேற்படி திட்டம் நிறைவுக்கு வருவதற்கு நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டனர் இதனைத் தொடர்ந்து ஜேர்மன் நாட்டிலிருந்து வருகை தந்த திரு.சபாரட்ணம் ஜெயகுமார்(சாமியார்) அவர்கள் அவ் நாட்டிலுள்ள புலம்பெயர் தமிழ் மக்கள் சார்பில் மேற்படி வைத்தியசாலைக்கு நோயாளிகளை காவிச் செல்லும் இருசக்கரவண்டி ஒன்றினையும் அன்பளிப்பு செய்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களது தலைமையில் மூளாய் பாணாவட்டிப் பகுதியில் மிக அண்மைக்காலத்தில் திறக்கப்;பட்ட வைத்தியசாலைக்கு ஜேர்மன் நாட்டிலிருந்து வருகை தந்திருந்த திரு.சபாரட்ணம் ஜெயகுமார்(சாமியார்) மற்றும் திருமதி. ஜெயகுமார் வசந்தி, புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வடமாகாண உருப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தர்த்தன் ஆகியோர் அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்தனர். இவ் நிகழ்வின்போது வைத்தியசாலைப் பொறுப்பதிகாரி மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் இவர்களை வரவேற்றதோடு வைத்திய சாலையின் தேவைகள் தொடர்பிலும் எதிர்கால திட்டங்கள் குறித்தும் கருத்துக்களை முன்வைத்தனர். இதன்போது வைத்தியசாலையை அழகுபடுத்தும் பொருட்டு வைத்திய சாலையின் முன் பகுதியில் சிறு பூங்கா அமைக்கும் திட்டம் தொடர்பிலான கருத்துக்களையும் அவர்கள் முன்வைத்தனர் இவ் விடயம் தொடர்பில் குறித்த குழுவினர் இவ் ஆண்டுக்கு முன்னதாக மேற்படி திட்டம் நிறைவுக்கு வருவதற்கு நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டனர் இதனைத் தொடர்ந்து ஜேர்மன் நாட்டிலிருந்து வருகை தந்த திரு.சபாரட்ணம் ஜெயகுமார்(சாமியார்) அவர்கள் அவ் நாட்டிலுள்ள புலம்பெயர் தமிழ் மக்கள் சார்பில் மேற்படி வைத்தியசாலைக்கு நோயாளிகளை காவிச் செல்லும் இருசக்கரவண்டி ஒன்றினையும் அன்பளிப்பு செய்தமை குறிப்பிடத்தக்கது. மாத்தறை மற்றும் வெலிகமவிலிருந்து வெளிநாட்டுக்கு செல்வதற்கு முயன்ற தமிழர்கள் 35 பேரை இவ்விரு பொலிஸ் பிரிவுகளின் கடற்கரை பொலிஸ் பிரிவு இன்றுகாலை கைதுசெய்துள்ளது. சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மாங்குளம் மற்றும் ஒட்டுசுட்டான் ஆகிய பிரதேசங்கள் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள் மிரிஸ்ஸ துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து உலருணவு பொதிகள் மற்றும் மருந்துகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்களை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
மாத்தறை மற்றும் வெலிகமவிலிருந்து வெளிநாட்டுக்கு செல்வதற்கு முயன்ற தமிழர்கள் 35 பேரை இவ்விரு பொலிஸ் பிரிவுகளின் கடற்கரை பொலிஸ் பிரிவு இன்றுகாலை கைதுசெய்துள்ளது. சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மாங்குளம் மற்றும் ஒட்டுசுட்டான் ஆகிய பிரதேசங்கள் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள் மிரிஸ்ஸ துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து உலருணவு பொதிகள் மற்றும் மருந்துகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்களை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். யாழில் சிவராத்திரிக்கு ஆலயத்திற்கு சென்ற குடும்பஸ்தரை காணவில்லை என, அவரது மனைவி பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். யாழ். வடமராட்சி கொற்றாவத்தையை சேர்ந்த இராசன் தயாளன் (வயது 41) என்பவரே காணாமல் போயுள்ளார். சிவராத்திரியை முன்னிட்டு நேற்று பொலிகண்டியில் உள்ள ஆலயத்திற்கு சென்று வருவதாக கூறிச் சென்றவர், வீடு திரும்பவில்லை என அவருடைய மனைவி முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை பொலிசார் பொலிகண்டி பகுதியில் உள்ள பாழடைந்த வீடொன்றிலிருந்து காணாமல் போனவரின் துவிச்சக்கர வண்டி, அவருடைய பேர்ஸ் என்பவற்றை இன்றுகாலை மீட்டுள்ளனர். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர
யாழில் சிவராத்திரிக்கு ஆலயத்திற்கு சென்ற குடும்பஸ்தரை காணவில்லை என, அவரது மனைவி பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். யாழ். வடமராட்சி கொற்றாவத்தையை சேர்ந்த இராசன் தயாளன் (வயது 41) என்பவரே காணாமல் போயுள்ளார். சிவராத்திரியை முன்னிட்டு நேற்று பொலிகண்டியில் உள்ள ஆலயத்திற்கு சென்று வருவதாக கூறிச் சென்றவர், வீடு திரும்பவில்லை என அவருடைய மனைவி முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை பொலிசார் பொலிகண்டி பகுதியில் உள்ள பாழடைந்த வீடொன்றிலிருந்து காணாமல் போனவரின் துவிச்சக்கர வண்டி, அவருடைய பேர்ஸ் என்பவற்றை இன்றுகாலை மீட்டுள்ளனர். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையில் செய்துகொள்ளப்பட்ட அணு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை ஐக்கிய அமெரிக்கா வரவேற்றுள்ளது. சர்வதேச அணுசக்தி முகமை விதிகளுக்கு அமைய பாதுகாப்பாகவும் ஏனைய சர்வதேச வரம்புகளுக்கு உட்பட்டும் இந்த உடன்டிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது என அமெரிக்கா இராஜாங்க திணைக்களப் பேச்சாளர் ஜென் ப்சக்கி தெரிவித்துள்ளார். இலங்கை – இந்திய அணு ஒப்பந்த விழிப்பு குறித்து தான் விழிப்புடன் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவிற்கு விஜயம் செய்த இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குழுவினர் இந்தியாவுடன் அணுசக்தி உள்ளிட்ட நான்கு அம்ச உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையில் செய்துகொள்ளப்பட்ட அணு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை ஐக்கிய அமெரிக்கா வரவேற்றுள்ளது. சர்வதேச அணுசக்தி முகமை விதிகளுக்கு அமைய பாதுகாப்பாகவும் ஏனைய சர்வதேச வரம்புகளுக்கு உட்பட்டும் இந்த உடன்டிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது என அமெரிக்கா இராஜாங்க திணைக்களப் பேச்சாளர் ஜென் ப்சக்கி தெரிவித்துள்ளார். இலங்கை – இந்திய அணு ஒப்பந்த விழிப்பு குறித்து தான் விழிப்புடன் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவிற்கு விஜயம் செய்த இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குழுவினர் இந்தியாவுடன் அணுசக்தி உள்ளிட்ட நான்கு அம்ச உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டமை குறிப்பிடத்தக்கது. இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான புதிய உறவு மகிழ்ச்சி தருவதாக சீனாஅறிவித்துள்ளது. இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்திய விஜயம் தமக்கு மகிழ்ச்சி தருவதாக சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சின் பேச்சாளர் {ஹவா சுன்யிங் தெரிவித்துள்ளார். இந்தியா – இலங்கை – சீனா இடையே நட்பு, நல்லுறவு காணப்படுவதாகவும் சீனாவை பொறுத்தமட்டில் இலங்கையும் இந்தியாவும் முக்கிய அயல் நாடுகள் என்றும் அவர் கூறியுள்ளார். இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுடன் ஒத்துழைப்புக்களை மேம்படுத்திக் கொள்ள சீனா விரும்புவதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான புதிய உறவு மகிழ்ச்சி தருவதாக சீனாஅறிவித்துள்ளது. இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்திய விஜயம் தமக்கு மகிழ்ச்சி தருவதாக சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சின் பேச்சாளர் {ஹவா சுன்யிங் தெரிவித்துள்ளார். இந்தியா – இலங்கை – சீனா இடையே நட்பு, நல்லுறவு காணப்படுவதாகவும் சீனாவை பொறுத்தமட்டில் இலங்கையும் இந்தியாவும் முக்கிய அயல் நாடுகள் என்றும் அவர் கூறியுள்ளார். இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுடன் ஒத்துழைப்புக்களை மேம்படுத்திக் கொள்ள சீனா விரும்புவதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட வடமாகாண சபை உறுப்பினர் வீரவாகு கனகசுந்தர சுவாமி (வயது-67) இன்று மாலை காலமானார். புற்று நோயினால் நீண்டகாலமாக பாதிக்கப்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். வவுனியா தனியார் வைத்தியசாலையில் இருந்து யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார். இவர், முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் கிராம சேவையாளராக கடமையாற்றி ஓய்வுபெற்ற பின்னர் கடந்த 2013ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இடம்பெற்ற வடமாகாண சபைக்கான முதலாவது தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின்; சார்பில் போட்டியிட்டு வடமாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டார்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட வடமாகாண சபை உறுப்பினர் வீரவாகு கனகசுந்தர சுவாமி (வயது-67) இன்று மாலை காலமானார். புற்று நோயினால் நீண்டகாலமாக பாதிக்கப்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். வவுனியா தனியார் வைத்தியசாலையில் இருந்து யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார். இவர், முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் கிராம சேவையாளராக கடமையாற்றி ஓய்வுபெற்ற பின்னர் கடந்த 2013ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இடம்பெற்ற வடமாகாண சபைக்கான முதலாவது தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின்; சார்பில் போட்டியிட்டு வடமாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டார். காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வு அடுத்த மாதம் திருகோணமலையில் இடம்பெறவுள்ளது. மார்ச் 1 ஆம் திகதி குச்சவெளி பிரதேச செயலகத்திலும், 3ஆம் திகதி திருகோணமலை மாவட்ட செயலகத்திலும் அமர்வு இடம்பெறவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குச்சவெளி பிரதேச செயலக அமர்வில், கோபாலபுரம், இக்பால் நகர், குச்சவெளி, கும்புறுப்பிட்டி, நிலாவெளி, பெரிய குளம் கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் பங்குப்பற்ற முடியும். திருகோணமலை மாவட்ட செயலக அமர்வில் சாம்பல் தீவு, சீனக்குடா, செல்வநாயகபுரம், சிவபுரி, தில்லை நகர், உவர்மலை ஆகிய கிராம பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் முறைப்பாடுகளையும், சாட்சியங்களையும் பதிவுசெய்ய முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை முன்வைத்தவர்களிடம் அன்றைய தினம் வாய்மூல சாட்சியங்கள் பதிவுசெய்யப்படவுள்ளதுடன், புதிய முறைப்பாடுகளும் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.
காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வு அடுத்த மாதம் திருகோணமலையில் இடம்பெறவுள்ளது. மார்ச் 1 ஆம் திகதி குச்சவெளி பிரதேச செயலகத்திலும், 3ஆம் திகதி திருகோணமலை மாவட்ட செயலகத்திலும் அமர்வு இடம்பெறவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குச்சவெளி பிரதேச செயலக அமர்வில், கோபாலபுரம், இக்பால் நகர், குச்சவெளி, கும்புறுப்பிட்டி, நிலாவெளி, பெரிய குளம் கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் பங்குப்பற்ற முடியும். திருகோணமலை மாவட்ட செயலக அமர்வில் சாம்பல் தீவு, சீனக்குடா, செல்வநாயகபுரம், சிவபுரி, தில்லை நகர், உவர்மலை ஆகிய கிராம பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் முறைப்பாடுகளையும், சாட்சியங்களையும் பதிவுசெய்ய முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை முன்வைத்தவர்களிடம் அன்றைய தினம் வாய்மூல சாட்சியங்கள் பதிவுசெய்யப்படவுள்ளதுடன், புதிய முறைப்பாடுகளும் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன. ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் அறிக்கை பிற்போடப்பட்டுள்ளமை குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்புவதற்கு ஏதுவாக அமைந்துவிடக் கூடாதென சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஐ.நா மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தில் இலங்கையின் மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படவிருந்தது. எனினும் விசாரணை அறிக்கை தாக்கல் செய்வதை பிற்போடுமாறு இலங்கை தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில் அதனை ஏற்றுக்கொண்ட ஐநா மனித உரிமை ஆணையாளர் ஷெயித் அல் ஹ_சைன் அறிக்கை தாக்கலை 6 மாதங்களுக்கு பிற்போட்டுள்ளார். இந்நிலையில் ஐநா மனித உரிமை கவுன்ஸிலின் இம்முடிவு இலங்கையின் யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பிலான குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பிக்க இடமளிக்க ஏதுவதாக அமைந்துவிடக் கூடாதென சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசியவலய பணிப்பாளர் ரிச்சாட் பெனாட் கூறியுள்ளார். சாட்சியளித்தவர்களுக்கு நீதி வழங்க மனித உரிமை கவுன்ஸில் விழித்திருக்க வேண்டும் எனவும் சாட்சியாளர்கள் அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் அறிக்கை பிற்போடப்பட்டுள்ளமை குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்புவதற்கு ஏதுவாக அமைந்துவிடக் கூடாதென சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஐ.நா மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தில் இலங்கையின் மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படவிருந்தது. எனினும் விசாரணை அறிக்கை தாக்கல் செய்வதை பிற்போடுமாறு இலங்கை தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில் அதனை ஏற்றுக்கொண்ட ஐநா மனித உரிமை ஆணையாளர் ஷெயித் அல் ஹ_சைன் அறிக்கை தாக்கலை 6 மாதங்களுக்கு பிற்போட்டுள்ளார். இந்நிலையில் ஐநா மனித உரிமை கவுன்ஸிலின் இம்முடிவு இலங்கையின் யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பிலான குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பிக்க இடமளிக்க ஏதுவதாக அமைந்துவிடக் கூடாதென சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசியவலய பணிப்பாளர் ரிச்சாட் பெனாட் கூறியுள்ளார். சாட்சியளித்தவர்களுக்கு நீதி வழங்க மனித உரிமை கவுன்ஸில் விழித்திருக்க வேண்டும் எனவும் சாட்சியாளர்கள் அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட்டும் விரைவில் சந்திக்கவுள்ளனர். கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக பொறுப்பெற்றுள்ள ஹாபீஸ் நஸீர் அஹமட் தமிழ்ப் பத்திரிகையாளர்களுடனான நேற்றைய சந்திப்பில் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையில் நீண்டகால உறவு காணப்படுகின்றது. அதனை மேலும் வலுப்படுத்துவது அவசியமாகும். அத்துடன் வடக்கிலும் கிழக்கிலும் சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்களே முதலமைச்சர்களாக காணப்படுகின்றனர். இரு சமூகத்திற்கும் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன. இவை தொடர்பில் ஒற்றுமைப்பாட்டுடன் தீர்வைப் பெற்றுக்கொள்வதே அவசியமானது. ஆகவே அவை தொடர்பாகவும் நல்லெண்ணத்தின் அடிப்படையிலும் வடக்கு முதல்வரை விரைவில் சந்திக்கவுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட்டும் விரைவில் சந்திக்கவுள்ளனர். கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக பொறுப்பெற்றுள்ள ஹாபீஸ் நஸீர் அஹமட் தமிழ்ப் பத்திரிகையாளர்களுடனான நேற்றைய சந்திப்பில் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையில் நீண்டகால உறவு காணப்படுகின்றது. அதனை மேலும் வலுப்படுத்துவது அவசியமாகும். அத்துடன் வடக்கிலும் கிழக்கிலும் சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்களே முதலமைச்சர்களாக காணப்படுகின்றனர். இரு சமூகத்திற்கும் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன. இவை தொடர்பில் ஒற்றுமைப்பாட்டுடன் தீர்வைப் பெற்றுக்கொள்வதே அவசியமானது. ஆகவே அவை தொடர்பாகவும் நல்லெண்ணத்தின் அடிப்படையிலும் வடக்கு முதல்வரை விரைவில் சந்திக்கவுள்ளேன் என்று தெரிவித்துள்ளார். 
  
  அதி கஸ்ட மற்றும் கஸ்ட பிரதேசங்களில் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றிய ஆசிரியர்கள் தமக்கு இடமாற்றம் வழங்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். யாழ்.செம்மணி வீதியில் அமைந்துள்ள வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்திற்கு முன்பாக இன்று மேற்படி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். கடந்த 5 வருடங்களுக்கு மேலாக கஸ்ட, அதிகஸ்ட பிரதேசங்களில் கடமையாற்றிய சுமார் 200ற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இடமாற்றத்தினை கோரியிருக்கின்றனர். கடந்த 2015 ஜனவரி 01ஆம் திகதி தமக்கு இடமாற்றம் வழங்கப்படுமென கல்வி அமைச்சினால் வாக்குறுதி வழங்கப்பட்ட நிலையில், ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு இடமாற்றம் பிற்போட்டிருந்துள்ளது. ஆனால், இதுவரையில் தமக்கு இடமாற்றம் வழங்கப்படவில்லை என்றும் தமக்கான இடமாற்றத்தினை உடனடியாக வழங்குமாறும் ஆசிரியர்கள் கோரியிருந்தனர். கை குழந்தைகளை வைத்திருக்கும் ஆசிரியர்கள்கூட தமது குழந்தைகளுடன் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். தீவகம் மற்றும் வன்னி மாவட்டங்களில் கடமையாற்றிய தாம் 5 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றி வந்தும், இடமாற்றம் வழங்காது கல்வி திணைக்களம் புறக்கணித்து வருவதாக ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளர். இதுகுறித்து வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ச.சத்தியசீலனுடன், ஆசிரியர்கள் கலந்துரையாடியுள்ளனர். அந்த கலந்துரையாடலின் போது, கல்வி அமைச்சின் செயலாளர் ச.சத்தியசீலன் எதிர்வரும் மார்ச் 01ஆம் திகதிக்கு முன்னர் இடமாற்றத்திற்கான கடிதம் அனைத்து ஆசிரியர்களுக்கும் அனுப்பி வைப்பதாகவும், ஏப்ரல் 01ஆம் திகதிக்கு யாழ்.மாவட்டத்திற்கு இடமாற்றம் பெற்று வரமுடியுமென்றும் வாக்குறுதி அளித்துள்ளார். வாக்குறுதியின் பிரகாரம் தமது ஆர்ப்பாட்டத்தினை ஆசிரியர்கள் நிறுத்தியதுடன், குறிப்பிட்ட திகதிக்குள் தமக்கான கடிதமும் இடமாற்றமும் வழங்கப்படாவிட்டால் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக ஆசிரியர்கள் எச்சரித்துள்ளனர்.
அதி கஸ்ட மற்றும் கஸ்ட பிரதேசங்களில் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றிய ஆசிரியர்கள் தமக்கு இடமாற்றம் வழங்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். யாழ்.செம்மணி வீதியில் அமைந்துள்ள வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்திற்கு முன்பாக இன்று மேற்படி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். கடந்த 5 வருடங்களுக்கு மேலாக கஸ்ட, அதிகஸ்ட பிரதேசங்களில் கடமையாற்றிய சுமார் 200ற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இடமாற்றத்தினை கோரியிருக்கின்றனர். கடந்த 2015 ஜனவரி 01ஆம் திகதி தமக்கு இடமாற்றம் வழங்கப்படுமென கல்வி அமைச்சினால் வாக்குறுதி வழங்கப்பட்ட நிலையில், ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு இடமாற்றம் பிற்போட்டிருந்துள்ளது. ஆனால், இதுவரையில் தமக்கு இடமாற்றம் வழங்கப்படவில்லை என்றும் தமக்கான இடமாற்றத்தினை உடனடியாக வழங்குமாறும் ஆசிரியர்கள் கோரியிருந்தனர். கை குழந்தைகளை வைத்திருக்கும் ஆசிரியர்கள்கூட தமது குழந்தைகளுடன் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். தீவகம் மற்றும் வன்னி மாவட்டங்களில் கடமையாற்றிய தாம் 5 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றி வந்தும், இடமாற்றம் வழங்காது கல்வி திணைக்களம் புறக்கணித்து வருவதாக ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளர். இதுகுறித்து வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ச.சத்தியசீலனுடன், ஆசிரியர்கள் கலந்துரையாடியுள்ளனர். அந்த கலந்துரையாடலின் போது, கல்வி அமைச்சின் செயலாளர் ச.சத்தியசீலன் எதிர்வரும் மார்ச் 01ஆம் திகதிக்கு முன்னர் இடமாற்றத்திற்கான கடிதம் அனைத்து ஆசிரியர்களுக்கும் அனுப்பி வைப்பதாகவும், ஏப்ரல் 01ஆம் திகதிக்கு யாழ்.மாவட்டத்திற்கு இடமாற்றம் பெற்று வரமுடியுமென்றும் வாக்குறுதி அளித்துள்ளார். வாக்குறுதியின் பிரகாரம் தமது ஆர்ப்பாட்டத்தினை ஆசிரியர்கள் நிறுத்தியதுடன், குறிப்பிட்ட திகதிக்குள் தமக்கான கடிதமும் இடமாற்றமும் வழங்கப்படாவிட்டால் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக ஆசிரியர்கள் எச்சரித்துள்ளனர். இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கும் இடையிலான சந்திப்பு இன்று ராஜ்யபதிபவனில் இடம்பெறவுள்ளது. அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும் சந்திக்கவுள்ளார். இதன்போது இரு நாடுகளுக்கும் பொதுவாக முக்கிய பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படும் என செய்திகள் கூறுகின்றன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்திய விஜயத்தை ஒட்டியதாக தமிழக மீனவர்கள் குழுவொன்று இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்க உள்ளது. புதுடெல்கியில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் இலங்கை இந்திய மீனவ அமைப்பின் தலைவர் தேவதாஸ் உள்ளிட்ட தமிழக மீனவர்கள் பங்குகொள்வதாக அந்த அமைப்பின் ஆலோசகர் எஸ்.பி அந்தோனிமுத்து ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கும் இடையிலான சந்திப்பு இன்று ராஜ்யபதிபவனில் இடம்பெறவுள்ளது. அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும் சந்திக்கவுள்ளார். இதன்போது இரு நாடுகளுக்கும் பொதுவாக முக்கிய பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படும் என செய்திகள் கூறுகின்றன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்திய விஜயத்தை ஒட்டியதாக தமிழக மீனவர்கள் குழுவொன்று இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்க உள்ளது. புதுடெல்கியில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் இலங்கை இந்திய மீனவ அமைப்பின் தலைவர் தேவதாஸ் உள்ளிட்ட தமிழக மீனவர்கள் பங்குகொள்வதாக அந்த அமைப்பின் ஆலோசகர் எஸ்.பி அந்தோனிமுத்து ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். 
  திருகோணமலை மூதூர் பிரதேச செயலாளர் பிரிவின் சம்பூரில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். சம்பூரில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள முகாம்களில் ஒன்றான கிளிவெட்டி முகாமில் இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. பட்டித்திடல், மணல்சேனை, கட்டைப்பறிச்சான் ஆகிய முகாம்களில் தங்கியுள்ள சம்பூர் மக்களும் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். புதிய அரசாங்கத்தின் நூறுநாள் திட்டத்தின்கீழ் தமது மீள்குடியேற்றத்திற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எதிர்ப்பார்த்தபோதிலும் அது கைகூடவில்லை என கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள மக்கள் கூறினர். சம்பூரில் உள்ள சொந்த காணிகளில் தம்மை குடியேற்ற அரசாங்கம் நடவடிக்கை வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
திருகோணமலை மூதூர் பிரதேச செயலாளர் பிரிவின் சம்பூரில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். சம்பூரில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள முகாம்களில் ஒன்றான கிளிவெட்டி முகாமில் இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. பட்டித்திடல், மணல்சேனை, கட்டைப்பறிச்சான் ஆகிய முகாம்களில் தங்கியுள்ள சம்பூர் மக்களும் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். புதிய அரசாங்கத்தின் நூறுநாள் திட்டத்தின்கீழ் தமது மீள்குடியேற்றத்திற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எதிர்ப்பார்த்தபோதிலும் அது கைகூடவில்லை என கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள மக்கள் கூறினர். சம்பூரில் உள்ள சொந்த காணிகளில் தம்மை குடியேற்ற அரசாங்கம் நடவடிக்கை வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் வடக்கு மாகாண விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று காலை யாழ். பொதுநூலகத்தில் இடம்பெற்றது. அதற்கு அதிதியாக புத்தசாசன மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கரு ஜெயசூரிய கலந்து கொண்டிருந்தார். கூட்டத்தினை அடுத்து பிரதேச சபை தவிசாளர்களுக்கு வாகனங்கள் வழங்கப்பட்டன. குறித்த வாகனங்களை கரு ஜெயசூரிய அவர்கள் வழங்கி வைத்தார். இதற்கமைய வவுனியா தெற்கு, பூநகரி, காரைநகர், வலி.வடக்கு, பருத்தித்துறை, வெண்கல செட்டிகுளம், மாந்தைகிழக்கு, மாந்தை மேற்கு, நெடுந்தீவு, துணுக்காய் ஆகிய பிரதேச சபைகளுக்கு குறித்த வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
வடக்கு மாகாண விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று காலை யாழ். பொதுநூலகத்தில் இடம்பெற்றது. அதற்கு அதிதியாக புத்தசாசன மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கரு ஜெயசூரிய கலந்து கொண்டிருந்தார். கூட்டத்தினை அடுத்து பிரதேச சபை தவிசாளர்களுக்கு வாகனங்கள் வழங்கப்பட்டன. குறித்த வாகனங்களை கரு ஜெயசூரிய அவர்கள் வழங்கி வைத்தார். இதற்கமைய வவுனியா தெற்கு, பூநகரி, காரைநகர், வலி.வடக்கு, பருத்தித்துறை, வெண்கல செட்டிகுளம், மாந்தைகிழக்கு, மாந்தை மேற்கு, நெடுந்தீவு, துணுக்காய் ஆகிய பிரதேச சபைகளுக்கு குறித்த வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி பிரவேசிக்கும் இந்திய படகுககளை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு கோரி மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தமது கடல் எல்லைக்குள் இந்திய படகுகள் அத்துமீறி பிரவேசிப்பதற்கு எதிராக அந்நாட்டு அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டகாரர்கள் இதன்போது வலியுறுத்தியுள்ளனர். மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் ஜானாதிபதி மைத்திறிபால சிறிசேனவின் இந்திய விஜயத்தின் போது உறுதியான தீர்மானங்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டகாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி பிரவேசிக்கும் இந்திய படகுககளை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு கோரி மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தமது கடல் எல்லைக்குள் இந்திய படகுகள் அத்துமீறி பிரவேசிப்பதற்கு எதிராக அந்நாட்டு அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டகாரர்கள் இதன்போது வலியுறுத்தியுள்ளனர். மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் ஜானாதிபதி மைத்திறிபால சிறிசேனவின் இந்திய விஜயத்தின் போது உறுதியான தீர்மானங்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டகாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
 அண்மையில் வட்டுக்கோட்டை முதலிகோவிலடிப் பகுதியில் அமைந்துள்ள அம்பாள் சனசமூக நிலையத்திற்கு விஜயம் செய்த வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி, ஐங்கரன் அவர்கள் குறித்த சன சமூக நிலையததவரின் கோரிக்கைக்கு அமைய அக்கிராம பாடசாலை மாணவர்கட்கு ஜேர்மன் நாட்டின் செல்வதுரை. ஜெகன்நாதன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் வழங்கப்படு வரும் கல்விக்கு கை கொடுப்போம் நிகழ்வின் கீழ் கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார். இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதே சபை உறுப்பினர் கொளரவ.சசிதரன் அவர்களும் கலந்து சிறப்பித்துக் கொண்டமை குறிப்பிக்கூடிய ஒன்றாகும்.
அண்மையில் வட்டுக்கோட்டை முதலிகோவிலடிப் பகுதியில் அமைந்துள்ள அம்பாள் சனசமூக நிலையத்திற்கு விஜயம் செய்த வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி, ஐங்கரன் அவர்கள் குறித்த சன சமூக நிலையததவரின் கோரிக்கைக்கு அமைய அக்கிராம பாடசாலை மாணவர்கட்கு ஜேர்மன் நாட்டின் செல்வதுரை. ஜெகன்நாதன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் வழங்கப்படு வரும் கல்விக்கு கை கொடுப்போம் நிகழ்வின் கீழ் கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார். இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதே சபை உறுப்பினர் கொளரவ.சசிதரன் அவர்களும் கலந்து சிறப்பித்துக் கொண்டமை குறிப்பிக்கூடிய ஒன்றாகும்.