தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின்; மாபெரும் இரத்ததான முகாம்-

 வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஓமந்தை இணைப்பாளர் திரு.திவாகரன் அவர்களின் ஒழுங்கமைப்பில் மாபெரும் இரத்ததான முகாம் நேற்று (21.03.2015) சனிக்கிழமை காலை 09.00மணி தொடக்கம் 12.30மணிவரை நடைபெற்றது. ஓமந்தை வாழ் இளைஞர்களின் பூரண ஒத்துழைப்பிலும் பொதுமக்கள், பொலிஸ் உத்தியோகத்தர்களினதும் பங்களிப்பிலும் வெற்றிகரமாக இவ் இரத்ததான முகாம் நடைபெற்றது. இவ் இரத்ததான நிகழ்விற்குபுளொட் அமைப்பின் முக்கியஸ்தரும், தமிழ் தேசிய இளைஞர் கழக ஸ்தாபகரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உபநகர பிதாவுமான திரு க.சந்திரகுலசிகம் (மோகன்), ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, வவுனியா வைத்தியசாலை இரத்த வங்கி வைத்தியர், தாதியர்கள், ஊழியர்கள், ஓமந்தை கிராம சேவையாளர் செல்வி. அனுசியா, வவுனியா மாவட்ட தேசிய இளைஞர் மன்றத் தலைவர் திரு.அமுதவாணன், ஓமந்தை மத்திய கல்லூரி ஆரியர்களான திரு.சந்திரமோகன், திரு.தர்ஷன், திரு.கஞ்சுதன், தமிழ் தேசிய இளைஞர் கழக ஆலோசகர் திரு. முத்தையா கண்ணதாசன், தமிழ் தேசிய இளைஞர் கழகத் தலைவர் திரு சு.காண்டீபன், செயலாளர் திரு ஸ்ரீ.கேசவன், உப செயலாளர் திரு. கிருஷ்ணபிரபு பொருளாளர் திரு த.நிகேதன், ஊடக இணைப்பாளர் திரு வ.பிரதீபன், கழக உறுப்பினர்களான மனோஜன், கஜீபன், முகுந்தன், நிசோகரன், விஷ்ணுதாசன், சுஜீபன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.