Header image alt text

வடலியடைப்பு சைவப்பிரகாச வித்தியாசாலையின் விளையாட்டு விழா- 

vadaliyadaipu 01vadaliyadaipu 03.யாழ்ப்பாணம் வடலியடைப்பு சைவப்பிரகாச வித்தியாசாலையின் விளையாட்டு விழா நேற்று (03.03.2015) செவ்வாய்க்கிழமை பாடசாலையின் அதிபர் து.சசீகரன் அவர்களது தலைமையில் இடம்பெற்றது. இவ் நிகழ்வில் புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வடமாகாண சபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்திருந்தார். சிறப்பு விருந்தினராக சண்டிலிப்பாய் கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.ச.சிவானந்தராஜா அவர்களும் கௌரவ விருந்தினர்களாக வலி தென்மேற்கு பிரதேசசபை உறுப்பினர் த.குமணண் மற்றும் கிராம உத்தியோகஸ்தர் திரு.அருள்ஞானானந்தன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். இவ் நிகழ்வின்போது விருந்தினர்கள் மற்றும் பாடசாலைச் சமூகத்தினர் சிறுவர்களது பாண்ட் வாத்தியம் முழங்க வரவேற்று அழைத்து வரப்பட்டனர். பின்னர் சிறுவர்கள் சாவதேச விதிமுறைகளுக்கு அமைய ஒலிம்பிக் தீபம் ஏற்றி நிகழ்வை சத்தியப் பிரமாணத்துடன் ஆரம்பித்தனர் இதனைத் தொடர்ந்து பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்த புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வடமாகாண சபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தர்hத்தன் அவர்கள் சம்பிரதாயபூர்வமாக நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து பாடசாலையின் நீர் விநியோகத்திற்காக இப்பாடசாலையின் பழைய மாணவர்களாகிய ஜேர்மனியில் வசிக்கும் திரு. திருமதி இராஜகுலேந்திரன் அவர்களால் நாலரை இலட்சம் ரூபா செலவில் புதிதாக அமைக்கப்பெற்ற நீர்த்தாங்கியினையும் பிரதம விருந்தினர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் திரைநீக்கம் செய்து நீர்வழங்கலை ஆரம்பித்து வைத்தார்.. Photos⇓ Read more

மகளீர்தின எழுச்சி வாரத்தின் மூன்றாம் நாள் நிகழ்வுகள்-

makaleer thinam2வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களது வழிகாட்டலின் கீழ் சர்வதேச மகளீர் தினத்தினை முன்னிட்டு நடாத்தப்படும் மகளீர் எழுச்சி வாரத்தின் பொருட்டு 03.03.2015 அன்று எழுச்சி நாள் 3இன் நிகழ்வாக வலி மேற்கு பிரதேசத்தில் சுயதொழில் மற்றும் கைப்பணிப் பொருள் உற்பத்திக் கண்காட்சி வலி மேற்கு பிரதேச சபையின் கலாச்சார மண்டபத்தில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் காலை 10.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது இவ் நிகழ்வின்போது சங்கானைப் பிரதேச செயலக உத்தியோகஸ்தார்கள் மற்றும் பல் துறைசார் உத்தியோகஸ்தர்கள் பொதுமக்கள் பாசாலை மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர் இவ் நிகழ்வு மதியத்;தோடு நிறைவு செய்யப்பட இருந்தபோதும் பார்வையாளர் மற்றும் நுகர்வோரின் வேண்டுகோளின்படி தவிசாளரால் மாலை வரை நீடிக்கப்பட்டது.Photos⇓ Read more

 

வவுனியா துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு-

vavuniyaவவுனியாவில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மகாறம்பைக்குளம் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கொலைசெய்யப்பட்டவர் 45வயதான வடிவேலழகன் (சண்ரிவி வடிவேலு) என்பவராவார். வவுனியா வைரவப்புளியங்குளம் பகுதியில் உணவகம் ஒன்றினை நடாத்திவரும் இவர் நேற்றிரவு உணவகத்தைப் பூட்டிவிட்டு சென்ற நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உடல்முழுவதும் சூட்டுக்காயங்கள் காணப்படுவதுடன், இவரது கொலை தொடர்பில் விசாரணைகளை நடாத்திவருவதாக வவுனியா பொலிஸார் கூறியுள்ளனர். இவர் பல தமிழ்க் கட்சிகளுடனும் தொடர்புகளைப் பேணிவருபவர் என்பதுடன், சில தமிழ்க் கட்சிகள் சார்பில் தேர்தலில் போட்டியிட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் உணவகம் நடாத்துவதற்கு முன்னர் சன் ரீ.வி மீள்ஒளிபரப்பு நிலையத்தை நடத்திவந்தார்.

முன்னாள் அமைச்சரிடம் விசாரணை-

கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய முன்னாள் அமைச்சர் றோஹித்த அபேகுணவர்தனவிடம் ஊழல் மற்றும் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். ஜனாதிபதி தேர்தலின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக ஜே.வி.பியினர். ஊழல் தவிர்ப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை முன்வைத்திருந்தனர். இதில் முன்னாள் அமைச்சர் றோஹன அபேகுணவர்தனவுக்கு எதிராகவும் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 2008 ஆம் ஆண்டும் அவரிடம் ஊழல் தவிர்ப்பு ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிராண்ட்பாஸ் யுவதி மரணம் தொடர்பில் சந்தேகம்-

கொழும்பு – கிராண்ட்பாஸ் பகுதியில் உள்ள தொடர்மாடி குடியிருப்பின் 6வது மாடியில் இருந்து வீழ்ந்து 17 வயதான யுவதியொருவர் உயிரிழந்துள்ளார். நேற்றிரவு 11.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த யுவதியின் மரண விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை இன்று புதுக்கடை 4 ஆம் இலக்க நீதிமன்ற நீதிவானினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கிராண்ட்பாஸ் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த யுவதி தவறுதலாக மாடி வீட்டிலிருந்து வீழ்ந்துள்ளாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற ரீதியில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இருந்தபோது, யுவதி வீட்டில் இருந்து தப்பிச் செல்ல முற்பட்ட போதே மாடிவீட்டில் இருந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கொழும்பு துறைமுக நகரம் தொடர்பில் விசாரணை-

கொழும்பு துறைமுக நகரம் தொடர்பில் கிடைக்க பெற்றுள்ள முறைப்பாடுகளை விசாரணை செய்ய நடவடிக்கை எடுப்பதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சட்ட செயலாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா இதனை குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் 9ஆம் திகதி முறைப்பாடு குறித்த விசாரணையை மேற்கொள்வதற்காக சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, சுற்றாடல் அமைப்பு மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து கொழும்பு துறைமுக நகரத்திற்கு எதிராக கோட்டை இலங்கை வங்கி மாவத்தைக்கு முன்பாக நேற்றைய தினம் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

சிறைச்சாலை மோதல் தொடர்பில் வாக்குமூலம்-

கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையினுள், 2012ஆம் ஆண்டு இடம்பெற்ற மோதலை நேரில் கண்ட, அப்போதைய கைதியான சுதேஷ் நந்திமால் டி சில்வா என்ற நபர் நேற்று குற்றபுலனாய்வு திணைக்களத்திடம் வாக்கு மூலம் ஒன்றை வழங்கியுள்ளார். அது தொடர்பாக முன் எடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமையவே இந்த வாக்கு மூலம் பதியப்பட்டுள்ளது. சுமார் 2 மணித்தியாலங்கள் அவரிடம் வாக்கு மூலம் பெற்று கொள்ளப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டு நொவம்பர் மாதம் 9 ஆம் திகதி தேடுதல் நடவடிக்கையின்போது, ஏற்பட்ட மோதலில் 27 கைதிகள் பலியானர். சம்பவத்தில் பாதுகாப்பு தரப்பினர் உள்ளிட்ட 40க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். சம்பவம் தொடர்பில் சட்ட மற்றும் தொழிலுறவுகள் துறை அமைச்சரினால் நியமிக்கப்பட்ட விஷேட குழுவினால் விசாரணைகள் இடம் பெறுகின்றமை இங்கு குறிப்பிடக்கூடியது.

தலைகவசம் மீதான தடைக்கு எதிர்ப்பு-

முகத்தை முற்றாக மறைக்கும் தலைகவசம் அணிய விதிக்கப்பட்ட தடைக்கு எதிர்ப்பை வெளியிடுவதாக நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. அந்த இயக்கத் தலைவர் ரஞ்சித் விதானகே இதனை தெரிவித்துள்ளார். இதற்காக, உந்துருளியை பயன்படுத்துபவர்களுக்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார். இதேவேளை, முன்னதாக எதிர்வரும் 21ஆம் திகதியின் பின்னர், முகத்தை முற்றாக மறைக்கும் தலைகவசம் அணியக்கூடாது என தடை விதிக்கப்பட்டிருந்தது. இதேவேளை முழு­மை­யாக முகத்தை மறைக்கும் தலைக் கவ­சங்­க­ளுக்கு தடை விதிக்­கப்­ப­டு­மாயின் அதற்குமுன்னர் முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தா, நிகாப் உடை­க­ளுக்கு தடை விதிக்­கப்­ப­ட­வேண்டும். என தெரி­விக்கும் பொதுபல சேனாவின் கலகொட அத்தே ஞான­சார தேரர் முகம்மூடிய முஸ்லிம் உடை­க­ளுக்கு தடை விதிக்­கா­த­வரை யாரும் தலைக்­க­வச சட்­டத்­தினை பின்­பற்ற வேண்டாம் எனவும் நேற்றைய ஊடக சந்திப்பின்போது கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியின் புதல்வரிடம் வாக்குமூலம், ரோஹித்த,, லக்ஷ்மன் ஆகியோரிடம் விசாரணை-

கொழும்பு நாரஹென்பிட்டியிலுள்ள பொருளாதார நிலையத்திலிருந்து மீட்கப்பட்ட சிறிய ரக விமானம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இதேவேளை துறைமுக அபிவிருத்தி திட்டமிடல் அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தனவிடம் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு இன்று விசாரணை நடத்தியுள்ளது. இது இவ்விதமிருக்க முன்னாள் பிரதியமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் வசந்த பெரேராவிடம் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

விமல் வீரவன்சவுக்கு எதிராக முறைப்பாடு-

நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவங்சவுக்கு எதிராக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். நிர்மாண, பொறியியல் சேவைகள், வீடமைப்பு மற்றும் பொதுவசதிகள் அமைச்சராக இருந்த காலத்தில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கண்காணிப்பின் கீழிருந்த செலிங்கே வீடமைப்பு சங்கத்தில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பிலேயே அவர் முறைப்பாடு செய்துள்ளார்.

தமிழ் தேசிய இளைஞர் கழகத்தால் சேமமடு பாடசாலை மைதானம் புனரமைப்பு-

ilaignar kalaham  (1)தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் இணைப்பாடவிதான செயற்பாடுகளின் ஊக்குவிப்பு நிகழ்ச்சித் திட்டத்தின்கீழ் வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்கு உட்பட்ட சேமமடு சண்முகானந்தா வித்தியாலயத்தின் மைதானம் நேற்று (02.03.2015) திங்கட்கிழமை புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. வித்தியாலய அதிபர் திரு.எஸ்.சசிகுமார் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் அமெரிக்க கிளையின் நிதியுதவியுடன் இப் பாடசாலையின் மைதானம் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான நிகழ்வில் தமிழ் தேசிய இளைஞர் கழகம் சார்பாக புளொட் முக்கியஸ்தரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதாவும், இளைஞர் கழக ஸ்தாபகருமான திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களும், வித்தியாலய அதிபர் திரு. எஸ்.சசிகுமார், பாடசாலை ஆசிரியர் திரு. டி.உமாசுதன், தமிழ் தேசிய இளைஞர் கழக ஆலோசகர் திரு. முத்தையா கண்ணதாசன், செயலாளர் திரு ஸ்ரீ. கேசவன், பொருளாளர் திரு. த.நிகேதன், ஊடக இணைப்பாளர் திரு. சஞ்சீவன் மற்றும் சேமமடு கிராம முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். இவ் பாடசாலை மாணவர்களினதும், பாடசாலை பௌதீக வளங்களின் அபிவிருத்திக்கும் கிராமத்தின் வளர்ச்சிக்கும் புலம்பெயர்ந்து வாழும் உறவுகள் தங்களாலான உதவிகளை நேரடியாகவோ அல்லது கழகம் ஊடாகவோ உதவ முன்வரவேண்டும் என தமிழ் தேசிய இளைஞர் கழகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ilaignar kalaham  (2) ilaignar kalaham  (3) ilaignar kalaham  (4) ilaignar kalaham  (6)

சர்வதேச மகளீர் தின எழுச்சி இரண்டாம் நாள் நிகழ்வுகள்-

makalir thinam..வலி மேற்கு பிரதேசசபைத் தவிசளார் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களின் வழிப்படுத்தலின் கீழ் சர்வதேச மகளீர் தினத்தினை முன்னிட்டு நடாத்தப்பட்டு வருகின்ற மகளீர் எழுச்சி வாரத்தின் எழுச்சி நாள் இரண்டின் இன்றைய தினத்தில் வலி மேற்கு பிரதேசத்தில் நீர் தொடர்பிலான பற்றாக்குறை மற்றும் பிரச்சனைகளை எதிர்நோக்கும் பகுதிகளின் பிரச்சனைகளை இழிவளவாக்கும் நிகழ்வின் கீழ் வலி மேற்கு பிரதேச பெண்களை மையமாக கொண்டு சுத்தமான குடிநீரின் ஊடாக வளமான வாழ்வை உருவாக்கும் நிகழ்வு இன்று வலி மேற்கு பிரதேச சபையின் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது. இவ் நிகழ்வானது வலி மேற்கு பிரதே சபைத் தவிசளார் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. Read more

தேர்தலில் பின் ஜனாதிபதி முதல் முறையாக யாழ்ப்பாணத்துக்கு விஜயம்-

jaffna 1 jaffna 2 jaffna3ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர், யாழ்ப்பாணத்திற்கான முதலாவது விஜயத்தினை இன்று மேற்கொண்டுள்ளார். வட மாகாண ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று முற்பகல் 10.30 அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. வட மாகாண ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மத்திய மற்றும் மாகாண சபை அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் என பலரும் பங்கேற்றுள்ளனர்.

மனித உரிமைகள் சட்டம் ஏமாற்றப்படுவதை அனுமதிக்க முடியாது-ஆணையாளர்-

சர்வதேச மனித உரிமைகள் சட்டம் ஏமாற்றப்படவோ அல்லது உதாசீனப்படுத்தப்படவோ அனுமதிக்க முடியாது. இது முழுமையாக கண்காணிக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்யத் அல் ஹ_சைன் தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் நேற்று ஆரம்பமான 28வது ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் கலந்துரையாடப்பட்டு பரிந்துரைக்கப்படும் விடயங்களை உலக நாடுகளின் பிரதிநிதிகள் கவனத்தில் எடுத்து அவற்றை நடைமுறைப்படுத்தச் செய்வதன் மூலமே உண்மையான பலன் கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மனித உரிமைகள் சில நாடுகளால் அலட்சியம் செய்யப்படுவதுடன், தொடர்ச்சியாக மீறப்பட்டு வருகின்றன. உரிமைகளைப் பாதுகாப்பதற்காக சில தவிர்க்கமுடியாத சூழ்நிலை ஏற்படுவதாக சிலர் கூறிக்கொள்கின்றனர். விமர்சனங்களை மாத்திரம் முன்வைத்துக் கொண்டிருக்காமல் ஐ.நா உறுப்பு நாடுகள் குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்கு பேரவையால் நியமிக்கப்பட்ட சுயாதீன நிபுணர்கள் குழு குறித்து சில நாடுகள் காண்பித்த அலட்சியம் மற்றும் அவமதிப்புத் தொடர்பில் கவலையடைகின்றேன். மனித உரிமை மீறல்கள் தன்னிச்சையாக உருவாக்கப்படுபவையல்ல. நாடுகள் தெரிவுசெய்யும் கொள்கைகளின் காரணமாகவே மனித உரிமை மீறல்கள் இடம்பெறுகின்றன. சில நாடுகளின் கொள்கைகள் சுதந்திரம் மற்றும் பங்கெடுத்தலைக் கட்டுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன என அவர் மேலும் கூறியுள்ளார்.

பொது உடன்படிக்கைகளின் அடிப்படையிலேயே கடன் வழங்கப்பட்டது-சீனா-

பொது உடன்படிக்கையின் அடிப்படையிலேயே இலங்கைக்கு பெருமளவிளான கடன் வழங்கப்பட்டதாக சீன வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் முன்வைத்த கோரிக்கைகளுக்கு அமைய இடம்பெற்ற கலந்துரையாடல்கள் மூலம் இந்த உடன்படிக்கைகள் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கருத்து தெரிவிக்கையில், கடந்த காலங்களில் இலங்கை சீனாவிடம் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக பெற்றுள்ளதாக தெரிவித்திருந்தார். இது தொடர்பில் சீன அரசாங்கத்துடன், மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதன்பொருட்டு நீதியமைச்சரை பீஜீங் அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டும் எனவும் வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார். இந்த நிலையில், இலங்கையின் அபிவிருத்தி பணிகளுக்காகவே கடனுதவி அளிக்கப்பட்டதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹ_வா ச்சுன்இன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இருநாடுகளுக்கும் இடையில் நன்மை கிடைக்கும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டிருந்தாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றது-

கிழக்கு மாகாண சபையில் புதிய அமைச்சுப் பொறுப்புக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளது. இன்று நண்பகல் கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்தில் இடம்பெற்ற பதவிப் பிரமாண நிகழ்வில் நால்வர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டுள்ளனர். இந்த வகையில் கிழக்கு மாகாண கல்வியமைச்சராக கிழக்கு மாகாணசபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சித் தலைவர் தண்டாயுதபாணி அவர்களும், சுகாதார அமைச்சராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.ஐ.எம் மன்சூர் அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர் அத்துடன் விவசாய மற்றும் நீர்ப்பாசன அமைச்சராக துரைராஜசிங்கம் அவர்களும் வீதி அபிவிருத்தி அமைச்சராக ஆரியவத்தமி கலப்பதி அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

கட்டார் விபத்தில் இலங்கையர் இருவர் மரணம்-

கட்டாரில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விபத்தில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைசட சேர்ந்த இளைஞர்கள் இருவர் மரணமடைந்துள்ளனர். கோவில் போரதீவை சேர்ந்த ச.துவாரகன், பெரியநீலாவணையை சேர்ந்த ச.சுகந்தன் ஆகியோரே மரணமடைந்துள்ளனர். இவர்கள் இருவரும் பயணித்துக் கொண்டிருந்த காரும் லொறியொன்றும் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மங்கள சமரவீர -அல் ஹ_சைன் சந்திப்பு-

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் இளவரசர் ஷெயிட் அல் ஹ_சைனை, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சந்தித்து பேச்சுவாரத்தை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பின் போது இலங்கை விவகாரம் தொடர்பிலான ஐ.நாவின் நிபுணர்குழு அறிக்கை மற்றும் இலங்கையில் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஐ.நா மனிதவுரிமை கூட்டத் தொரில் அமைச்சர் மங்கள சமரவீர உரை-

mangala samaraweeraகடந்த ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை மக்கள் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை பெருவாரியான வாக்கு வீதத்தில் தோற்கடித்து மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக தெரிவு செய்தனர். மோதல்கள் இடம்பெற்ற வடக்கு, கிழக்கு உட்பட முழு நாட்டு மக்களும் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்துள்ளனர். நாட்டின் புதிய அரசாங்கம், நாட்டு மக்களின் பேச்சுரிமை, ஜனநாயகம், ஊடக சுதந்திரம், உள்ளிட்ட மனித உரிமைகளை பாதுகாக்கும் இனப் பாகுபாடு இன்றி அனைவருக்கும் சம உரிமை அளிப்பதில் இந்த அரசு உறுதியாக உள்ளது. இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை புதிய அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. கடந்த அரசாங்கம் பாரிய அளவில் மனித உரிமைகளை மீறி வந்தது. Read more

சுதுமலை மத்திய சனசமூக நிலைய ஆரம்ப விழா-

Sudumalai07மீள் புனரமைக்கப்பட்ட சுதுமலை மத்திய சனசமூக நிலையத்தின் ஆரம்ப விழா நேற்று 01.03.2015 ஞாயிற்றுக்கிழமை மாலை வாசிகசாலையின் திறந்த வெளியரங்கில் நடைபெற்றது. வாசிகசாலையின் தலைவர் இ.பேசின்பநாயகம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வட மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். இந்நிகழ்வின் விசேட விருந்தினராக சண்டிலிப்பாய் பிரதேச செயலர் திரு. முரளிதரன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக சின்மயா பாரதி வித்தியாலய அதிபர் ஆ.பேரின்பநாயகம் மற்றும் மானிப்பாய் பிரதேச சபை தவிசாளர் சி.மகேந்திரன் ஆகியோரும், கௌரவ விருந்தினர்களாக வைத்தியக்கலாநிதி கோ.ரக்கீ, கிராம உத்தியோகத்தர் ரி.தனபால, கிராம உத்தியோகத்தர் திருமதி ந.பிரபாகரன், மற்றும் முன்னைநாள் மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர் திரு. கௌரிகாந்தன் அவர்களும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வின்போது சுதுமலைக் கிராமத்திலுள்ள முன்பள்ளிகளில் கல்விபயிலும் சிறுவர்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. இங்கு உரையாற்றிய புளொட் தலைவர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், Read more

வலி மேற்கு பிரதேசசபைப் பகுதிகளில் மகளீர் எழுச்சிவாரம்-

makaleer thinam2நேற்று 01.03.2015 ஞாயிற்றுக்கிழமை சர்வதேச மகளீர் தினத்தினை முன்னிட்டு வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் பிரதேச ரீதியாக அமுல்படுத்தப்பட்டு வரும் மகளீர் எழுச்சி வாரத்தின் பொருட்டு எழுச்சி நாள் ஒன்றாகிய இன்றையதினம் வலி மேற்கு பகுதியில் உள்ள மாற்று வலு உள்ள பெண்களுக்கான குடிநீர் மற்றும் சுகாதாரம் தொடர்பிலான கருத்தமைவு நடைபெற்றது. இவ் நிகழ்வில் 50ற்கும் மேற்பட்ட மாற்று வலு உள்ள பெண்கள் கலந்து கொண்டனர் இவ் நிகழ்வில் கலந்து கொண்ட ஒவ்வொரு மாற்று வலு உள்ளவர்கட்கும் அன்பளிப்பாக சுகாதாரப் பொதிகள் வழங்கப்பட்டது. நேற்றுக்காலை 10 மணியளவில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களது தலைமையில் நிகழ்வு ஆரம்பமானது. இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபை உறுப்பினர் ந.பி.ராஜ்குமார், நல்லூர் பிரதேச சபை உபதவிசாளர் திருமதி.கோமதி உலக தரிசன நிறுவனப் செயல்திட்ட பணிப்பாளர் அலெக்ஸ் மற்றும் கருவி நிறுவனத்தின் பணிப்பாளரும் கலந்து சிறப்பித்துக் கொண்டனர். இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் உரையாற்றுகையில், Read more

ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 28ஆவது அமர்வு-

human raightsஐக்கிய நாடுகளின் மனிதவுரிமைகள் ஆணையகத்தின் 28ஆவது பேரவை அமர்வு இன்று ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது. இதன் பொருட்டு ஜெனீவா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இன்று பேரவை அமர்வில் உரையாற்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்மட்ட அமர்வில் 65 நாடுகளைச் சேர்ந்த வெளிவிவகார அமைச்சர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் அமைச்சர் மங்கள சமரவீர, ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் உசைனையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணையை செப்டெம்பர் மாதம் வரை பிற்போடுவதற்கும் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் ஆணையகம் இணங்கியுள்ள நிலையில் இன்றைய அமர்வு நடைபெறவுள்ளது. ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலிலிருந்து இலங்கை தொடர்பிலான அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக ஒதுக்கப்பட்ட நிகழ்ச்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்-

LTAKஇலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்தியக்குழு கூட்டம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தலைமையில் வவுனியா வைரவபுளியங்குளம் லக்சுமி திருமண மண்டபத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது. இனப்பிரச்சினைக்கு காலதாமதமின்றி அரசாங்கம் தீர்வு காணவேண்டும் என்பது உள்ளிட்ட ஆறு தீர்மானங்கள் கட்சியின் மத்தியக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. மத்தியக்குழு கூட்டத்தின் போது, இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னரான அரசியல் சூழ்நிலையின் நிலைமையை தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது. அதன்பின்னர் இடம்பெற்ற ஊடகவியலளார் சந்திப்பின்போது மத்தியக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மாகாணசபை உறுப்பினர் திரு. துரைரட்ணசிங்கம் வாசித்தார்.

1. தமிழர்களின் காணிகளை மீள் கையளித்தல்
2. அரசியல் கைதிகளை விடுவித்தல்
3. காணாமல் போனோர் சம்பந்தமான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு தேர்தலின் போது, கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளின் படி உடனடியாக இவை தொடர்பாக நடவடிக்கை எடுக்கமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றது.
4. போர் சூழலில் இடம்பெயர்ந்த ஒவ்வொருவரையும் அவரவர் சொந்த இடங்களில் மீள் குடியேற்றும் வகையில் செயற்பட வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்தல்.
5. இனப்பிரச்சினை தீர்வு சம்பந்தமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வு தொடர்பில், புதிய அரசு தாமதமின்றி உரிய நடவடிக்கையை ஆரம்பிக்க வேண்டும.
6. இலங்கையில் ஏற்பட்டுள்ள புதிய ஆட்சி மாற்றத்தின் பின் தமிழ் தேசியக்கூட்டமைப்பு மேற்கொள்கின்ற நடவடிக்கைகளை தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு அங்கிகரித்து ஏற்றுக்கொள்கின்றது எனவும் மத்திய குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இந்திய வெளியுறவமைச்சர் இலங்கைக்கு விஜயம்-

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த மாதம் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்கைக்கான விஜயத்தை எதிர்வரும் 6ஆம் திகதி மேற்கொள்ளவுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இரு நாள் பயணத்தை மேற்கொண்டு இலங்கை வரவுள்ள சுஷ்மா சு;வராஜ், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரை சந்தித்து பிரதமர் நரேந்திர மோடியின் பயணம் தொடர்பில் ஆலோசனை நடத்துவார் என்று தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் 13ஆம் திகதி பிரதமர் நரேந்திர மோடி முதன்முறையாக இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இதற்கு முன்னர், 1987ஆம் ஆண்டு இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கைக்கு வருகை தந்திருந்தார். அதன் பின்னர், கடந்த 28 வருடங்களில் இந்திய பிரதமர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வது இதுவே முதன்முறையாகும் எனவும் இந்தியச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

எரிபொருள் நிலையத்தை மேம்படுத்த அமெரிக்கா நிறுவனங்களுக்கு அனுமதி கோரல்-

சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை மேம்படுத்துவதற்காக அமெரிக்க நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என அமெரிக்க தூதரகம் இலங்கை அரசாங்கத்தை கோரியுள்ளது. ஏற்கனவே கலந்துரையாடப்பட்டதற்கு அமைவாக, புதிய வசதிகள் மற்றும் தொழினுட்பங்களுடன் கொழும்பு சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாக தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலக தரத்திற்கு சுத்திகரிப்பு நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு அமெரிக்க நிறுவனங்கள் தமது தொழினுட்ப உதவிகளை வழங்கும் என கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக விவகார ஆணையாளர் தெரிவித்துள்ளார். இது தவிர, புத்தாக்க சக்திவலு உற்பத்தி மற்றும் சூரிய சக்தியுடனான மின்சார உற்பத்தி தொடர்பாகவும் இலங்கை அரசாங்கத்தின் அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியுள்ளதாகவும் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கிழக்கு மாகாண சபையில் மீண்டும் குழப்பம்-

கிழக்கு மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பைச் சேர்ந்த 6 உறுப்பினர்கள் ஆளும் கட்சிக்கான ஆதரவை விலக்கிக் கொண்டுள்ளதாக மாகாண சபை உறுப்பினர் மஹ{மூட் லெப்பை அப்துல் ஹமீட் தெரிவித்துள்ளார். நிபந்தனைகள் மீறப்பட்டு தன்னிச்சையாக பதவிகள் கைமாற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஏ.எல்;.எம்.அமீர், எஸ்.உதுமா லெப்பை, விமலவீர திசாநாயக்க, டப்ளியு.ஈ வீரசிங்க, ரி.எம்.ஜயசேன, ஜயந்த விஜேசேகர ஆகிய கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களே எதிர்கட்சிக்கு ஆதரவை வெளியிட்டுள்ளமை இங்கு குறிப்பிட்டத்தக்கது.

சஷீந்திர ராஜபக்ஸவின் மனு நிராகரிப்பு-

தம்மை முதலமைச்சர் பதவிலிருந்து நீக்கியமை சட்டவிரோதமானது என தெரிவித்து ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ தாக்கல் செய்த வழக்கு நிராகரிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அவர் தமக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பாக வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இன்று வழக்கை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான விஜித் மலல்கொட மற்றும் எச்.பி.ஜே. மடவல ஆகியோர், ஷசிந்திர ராஜபக்ஷ சமர்ப்பித்த மனுவில் குறைபாடுகள் இருப்பதாக தெரிவித்து, அதனை நிராகரித்தனர்.

சீன விஜயத்தின்போது வெளிவிவகார அமைச்சர் மங்கள கடன்கள் பற்றி ஆராய்வு-

சீனாவுக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து கொண்ட வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சீனாவின் உயர்மட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளார். சீன பிரதமர் லீ கீயாங்க் மற்றும் வெளிவிவகார அமைச்சர் யங்க் யீ ஆகியோரை சந்தித்த அமைச்சர் மங்கள சமரவீர இருதரப்பு விவகாரங்கள் குறித்து ஆராய்ந்துள்ளார். இதுதவிர, கடந்த அரசாங்கத்தில் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட செயற்றிட்டங்களுக்காக சீனாவிடமிருந்து பெறப்பட்ட கடன் தொகைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், புதிய அரசாங்கம் முன்னெடுத்துவரும் அபிவிருத்தி பணிகள் மற்றும் 100 நாள் செயற்றிட்டம் தொடர்பாகவும் சீன அதிகாரிகளுக்கு இந்த விஜயத்தின்போது விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

யாத்ரீகர்களிடமிருந்து சக்திவாய்ந்த செய்மதி அலைவாங்கிகள் மீட்பு-

இந்தியா, தம்ப திவவுக்கு யாத்திரை சென்று அங்கிருந்து நாட்டுக்கு திரும்பிய யாத்ரீகர்களின் பயணப்பைகளில் இருந்து சக்திவாய்ந்த செய்மதி அலைவாங்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று இலங்கை சுங்க திணைக்களம் அறிவித்துள்ளது. அதன் பெறுமதி 1.3மில்லியன் ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக சுங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. சென்னையிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாடுதிரும்பிய யாத்ரீகர்களிடமிருந்தே மேற்படி செய்மதி மீட்கப்பட்டுள்ளது. இதேவேளை, அந்த யாத்ரீகர்களின் 11 பயணப்பைகளில் இருந்து 335 செய்மதி அலைவாங்கிகள், தூர இருந்து இயக்கும் கருவிகள் 81உம் மீட்கப்பட்டுள்ளன என சுங்கத்தினர் கூறுகின்றனர்.

திருமலையில் காணாமற்போனோர் தொடர்பான ஆணைக்குழுவின் அமர்வு-

காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் திருகோணமலை மாவட்டத்திற்கான அமர்வுகள் இன்றும் நாளையும் திருகோணமலை பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளன நேற்றையதினம் குச்சவெளியில் இடம்பெற்ற மேற்படி அமர்வில் 53 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 100 பேரின் சாட்சியங்கள் அங்கு பதிவு செய்யப்பட்டுள்ளன குச்சவெளி அமர்வில் புதிதாக 73 பேரின் சாட்சியங்கள் பதிவானதாக ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ. குணதாச தெரிவித்துள்ளார். இதேவேளை குச்சவெளியில் இடம்பெற்ற அமர்வுகளின் போது சிலர் ஆணைக்குழுவின் அமர்வை புறக்கணித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது

ஜனாதிபதி தேர்தல் ஆணையாளர் விசேட சந்திப்புக்கு ஏற்பாடு-

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு ஒன்று விரைவில் இடம்பெறவுள்ளது. என்று அமைச்சரவையின் பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். உத்தேச தேர்தல் முறைமையில் மேற்கொள்ளவேண்டிய மாற்றம் தொடர்பிலான பரிந்துரைகளை அமுலாக்கம் செய்வது குறித்து இந்த சந்திப்பின்போது விரிவாக கலந்துரையாடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். ஜனாதிபதி தேர்தலின்போது அளிக்கப்பட்ட 100 நாட்கள் வேலைத்திட்டத்தில் தேர்தல் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவது என்பது ஒரு வாக்குறுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசத்துக்கு தடை-

மோட்டார் சைக்கிள்களில் முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசங்களை அணிந்து கொண்டு பயணிப்பது, மார்ச் மாதம் 21ஆம் திகதி முதல் தடை செய்யப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசங்களை அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்து பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருவதன் காரணத்தினாலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.