Header image alt text

இந்தியா அரசாங்கத்தின் உதவியில் நவீன வசதிகளுடன் டிக்கோயா-கிளங்கன் வைத்தியசாலை

malayagam1malayagamஇந்தியா அரசாங்கத்தின் 500 கோடி ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் டிக்கோயா-கிளங்கன் வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டடத்தை பார்வையிடுவதற்கு இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு சனிக்கிழமை விஜயம் செய்தார். டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் அன்வர் ஹம்தானியின் அழைப்பிலேயே அவர் விஜயம் செய்தார். Read more

த.தே.கூட்டமைப்புக்கான எதிர்க்கட்சி தலைவர் பதவியை தடுத்துநிறுத்த திட்டம் – ஜனா

janaஇலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைக்கவிருக்கும் வாய்ப்புகள் காணப்படும் நிலையில், அதை வழங்காமல்  தடுத்துநிறுத்துவதற்கு சிலர் திட்டமிட்டு வருகின்றார்கள் என்று கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்  கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.இந்த நாட்டில் போராட்டம் முடிவுக்கு வந்தாலும்,  தமிழ் மக்களுக்குரிய தீர்வு இன்னும் கிடைக்கவில்லை.  தற்போது புதிய அரசு உருவாக்கப்பட்டு நாடாளுமன்றத்திலும் தேசிய அரசு நிறுவப்பட்டுள்ளது. Read more

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கோர சம்பந்தனுக்கு உரிமையில்லை – ஆனந்தசங்கரி

sangaree_sampanthanதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கோருவதற்கு தார்மீக உரிமையோ சட்டரீதியான உரிமையோ கிடையாது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற சம்பிரதாயம் நடைமுறைகள், வழமைகள் போன்றவற்றுடன் சம்மந்தப்படுகின்ற ஒரு விடயத்தில் நான் சாதாரணமாக தலையிட்டிருக்கமாட்டேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவர் பதவியை கோருவதற்கு தார்மீக உரிமையோ சட்டரீதியான உரிமையோ கிடையாது. Read more

எதிர்க்கட்சி தலைவராக நியமிக்க கோரி சபாநாயகருக்கு கடிதம்

sampanthanஎதிர்க்கட்சித் தலைவர் பதவி இலங்கை தமிழரசுக் கட்சிக்கு வழங்கப்பட வேண்டுமெனத் தெரிவித்து, சபாநாயகரிடம் கடிதமொன்று இன்று கையளிக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கே.துரைராஜசிங்கம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத்தலைவர் இரா. சம்பந்தன் ஆகியோரது கையொப்பத்துடன் இந்தக் கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அடுத்தபடியாக, பாராளுமன்றத்தில் அதிக ஆசனங்களைக் கொண்ட இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டுமென இந்தக் கடிதத்தின் ஊடாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

தேசிய நல்லிணக்க பிரிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம்-

parliamentதேசிய நல்லிணக்கத்துக்கான பிரிவு ஒன்றை உருவாக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. நாட்டின் தனித்துவத்தை பாதுகாப்பதுடன், அனைத்து பிரஜைகளினதும் பொருளாதார, சமூக, கலாசார மற்றும் அரசியல் ரீதியான சம அந்தஸ்தை வழங்குவதே இதன் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் 2015ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக ஐந்தாயிரம் ரூபாய் மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு அதிகரிப்பை அடுத்த மாதம் முதல் அமுலாக்கவும் அமைச்சரவை அனுமதித்துள்ளது. இதேவேளை, இன்டர்போல் எனப்படும் சர்வதேச காவற்தறையினர் மற்றும் சட்ட அதிகாரிகளின் விசேட பயண அனுமதி சீட்டு, இலங்கையிலும் செல்லுபடியாக்கப்பட்டுள்ளது. இதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதற்கான உடன்படிக்கை விரைவில் கைச்சத்தாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அகதிகளை நாடு கடத்த வேண்டாமென கோரிக்கை-

Australia-asylum-newநாளாந்தம் முகம் கொடுக்கின்ற அச்சுறுத்தல்கள், காரணமாகவே இலங்கையில் அவுஸ்திரேலியா நோக்கி அகதிகளின் வருகை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் ஊடகமொன்று இதனைத் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இவ்வாறான அகதிகளை நிராகரித்து நாடுகடத்த வேண்டாமென கோரப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்து கோருகின்றவர்கள் நிராகரிக்கப்படும் நிலைமை முன்பில்லாத அளவு அதிகரித்துள்ளது. அகதி அந்த்ஸ்து பெறுவதற்காக தற்போதுள்ள கூறப்படுகின்ற காரணங்களையே, 5வருடங்களுக்கு முன்னர் கூறியவர்களுக்கு அகதி அந்தஸ்து கிடைத்துள்ளன. ஆனால் தற்போது இந்த கோரிக்கைகள் நிராகரிக்கப்படுகின்றன. இதற்கு அவுஸ்திரேலிய அரசின் அரசியல் நோக்கத்துக்கான சட்ட மாற்றங்களே காரணம். இதன்மூலம் அவுஸ்திரேலிய அரசாங்கம் பாரிய மனித உரிமை மீறிலில் ஈடுபட்டுள்ளது என அந்த ஊடகம் குற்றம் சுமத்தியுள்ளது.

பொதுத் தேர்தலின் பின்னர் புதிய அரசியலமைப்பு-

wijayadasa rajapakseபொதுத் தேர்தலின் பின்னர் நாடாளுமன்ற அரசியலமைப்பு சபை ஒன்று உருவாக்கப்பட்டு புதிய அரசியல் அமைப்பு ஒன்று உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். இதற்காக எதிர்வரும் பொதுத் தேர்தலில் மக்களின் ஆணையை பெற்றுக் கொள்ள ஐக்கிய தேசிய கட்சி எதிர்பார்ப்பதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றம் கலைக்கப்படும் திகதியை உறுதியாக கூற முடியாது-ஜனாதிபதி-

maiththiriநாடாளுமன்றம் கலைக்கப்படும் திகதி, காலம் தொடர்பில் உறுதியாகக் கூற முடியாது. எவ்வாறாயினும், அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 19ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம், சபாநாயகரால் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டதன் பின்னர், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் கூட்டம், நேற்று நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்றது. இதன்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

துப்பாக்கி வெடித்ததில் எஸ்ரிஎப் உத்தியோகத்தர் உயிரிழப்பு-

stfமாத்தளை மாவட்டம் தம்புள்ளை பக்கமுன ரியெல்ல வனத்தில் துப்பாக்கியொன்று தானியங்கியதில் பொலிஸ் விசேட அதிரடிப்படை கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளார். சட்டவிரோத மரக்கடத்தல் தொடர்பில் தேடுதல் நடத்திக் கொண்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தம்புலுஓயா பிரதேச பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கான்ஸ்டபிள் ஒருவரே உயிரிழந்துள்ளதாக மேலும் கூறப்படுகின்றது.

கவிஞர் செல்வகுமாரனின் ஊசல் கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு-

ainkaranயாழ். வலி மேற்கு பிரதேச சபையின் கலாச்சார மண்டபத்தில் கவிஞர் செல்வகுமாரன் எழுதிய ஊசல் கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் தலைமையில் இடம்பெற்றது. இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக வித்தியாசாகரம், சர்வதேச இந்துகுருமார் ஒன்றியத்தின் தலைவர் சபா. வாசுதேவக் குருக்கள் அவர்களும் சிறப்பு விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினர் திரு ச.ஆனோலட், சங்கானை பிரதேச செயலக உதவி பிரதேச செயலர் திருமதி. அ.முகுந்தன் மற்றும் கவிஞர் வீரா உட்பட பல கவிஞர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டனர் இவ் நிகழ்வில் கவிஞர் செல்வகுமாரனின் சிறந்த கவி ஆற்றலினை பாராட்டி வலி மேற்கு பிரதேசசபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் கவிஞருக்கு கவிக்கோ எனும் கௌரவத்தினை வழங்கி கௌரவித்தார்.

Read more

உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த 590 ஏக்கர் விடுப்பு-

vethanayaganயாழ்.மாவட்டத்தில் உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த காணிகளில் 590 ஏக்கர் காணிகள் அடுத்த கட்டமாக விடுவிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன், இன்று தெரிவித்துள்ளார். 1000 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படுவதாக புதிய அரசாங்கம் அறிவித்த அறிவிப்புக்கமைய முதற்கட்டமாக வளலாய் பகுதியில் 233 ஏக்கரும், வசாவிளான் பகுதியில் 197 ஏக்கரும் ஆக மொத்தம் 430 ஏக்கர் காணிகள் கடந்த மார்ச் 24ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் கையளிக்கப்பட்டது. ஏப்ரல் மாத இறுதிப் பகுதிக்குள் மிகுதிக் காணிகளும் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். அதற்கமைய 2ஆம் கட்டமாக 590 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. தெல்லிப்பழை பிரதேச செயலகத்துக்குட்பட்ட காங்கேசன்துறை தெற்கு (ஜே – 235 கிராம அலுவலர்), பளை வீமன் காமம் வடக்கு (ஜே – 236 கிராம அலுவலர்), பளை வீமன்காமம் தெற்கு (ஜே – 237 கிராம அலுவலர்), கட்டுவன் (ஜே – 238 கிராம அலுவலர்), தென்மயிலை (ஜே – 240 கிராம அலுவலர்), வறுத்தலைவிளான் (ஜே – 241 கிராம அலுவலர்), தையிட்டி தெற்கு (ஜெ – 250 கிராம அலுவலர்), பலாலி தெற்கு (ஜே – 252 கிராம அலுவலர்) ஆகியவற்றின் காணிகளும் கோப்பாய் பிரதேச செயலகத்துக்குட்பட்ட வளலாய் (ஜே – 284 கிராம அலுவலர்) காணிகளும் விடுவிக்கப்பட்டுள்ளன. மேற்குறிப்பிட்ட பிரிவுகளைச் சேர்ந்த காணிகளின் உரிமையாளர்கள் நாளைகாலை 9மணிக்கு தங்களுடைய காணிகளை பார்வையிடுவதற்கு அழைத்துச் செல்லப்படுவதுடன், பதிவுகளை கிராம அலுவலர் ஊடாக மேற்கொள்ள முடியும் எனவும் மாவட்டச் செயலர் கூறியுள்ளார்.

புத்தாண்டு வாழ்த்துச் செய்தி-

Vali west10மலரும் மன்மத வருடம் பல சலனங்களுடனும் வாழ்ந்த தமிழ் மக்கள் மத்தியில் மறுமலர்ச்சியினை ஏற்படுத்த இறைவனைப் பிரார்த்திப்பதோடு, கடந்த கலங்களில் எமது இனத்தின் விடுதலைப் பயணம் நோக்கிய பாதையின் போது இழந்த கொடிய இழப்புக்கள் மற்றும் மாறாத வடுக்கள் தழும்புகளுடன் வாழும் எம்மவர்களின் மனங்களில் ஒளிக்கீற்றை ஏற்படுத்தவும் வேண்டுகின்றேன். மாற்றங்களுக்காக மாற்றத்தினை வேண்டி புதிய அரசுக்கு வழங்கிய மாற்றத்திற்கான வாக்கின் பொருட்டு மாற்றங்கள் எம்மவர்கள் மத்தியில் மாற்றத்தினை ஏற்படுத்தத்தக்கதாக அமையவும் நியாயத்தின் பால் இனத்திற்கான நீதி கிடைக்கவும் அனைவரும் ஒன்றிணைந்து இவ் புனித நன்நாளில் சபதம் செய்து வரலற்றினை எமது வழிகாட்டியாக கொண்டு எம் இனம் இனிவரும் காலங்களில் ஒற்றுமையுடன் ஒர் அணியில் ஒர் தலைமையில் ஒர் கொள்கையில் புறப்பட பேதங்கள், கடந்த கால குரோதங்கட்கு அப்பால் அனைவரும் கரங்களை இறுக்கிக்கொண்டு நாம் தமிழர்காக வாழ ஒன்றிணைவோம். இன்றைய நிகழ்வுகளை நாளைய எமது இனத்தின் வரலாற்றுக்கான விடிவுக்கான திறவுகோலாக்க அனைவரும் தேசியம் என்ற உணர்வால் ஒன்றுபட உழைப்போம் இப் புனித நாளில்
என்றும் தேசியத்தின் வழியில் தமிழ் அன்னையின் புதல்வியாய்.
திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன், தவிசாளர், வலி மேற்கு பிரதேச சபை.

ஐ,நா உதவிச் செயலர் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு

UNஇலங்கை;கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகளில் உதவிச் செயலாளர் நாயகமும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்ட பிராந்திய பணிப்பாளருமான ஹொலியங் ஸ_, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இலங்கையில் ஐ.நாவின முன்னெடுப்புக்களுக்கு தொடர்ச்சியாக உதவி வழங்கிவரும் இலங்கை அரசாங்கத்திற்கு ஹொலியங் ஸ{, இதன்போது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். அரசாங்கத்தின் வேண்டுகோளின் நிமித்தம் 100 நாள் வேலைத் திட்டத்துக்கு ஐநா மற்றும் யுஎன்டிபி தொடர்ச்சியாக உதவி வருவதை அமைச்சரிடம் ஐ.நா பிராந்திய பணிப்ப்hளர் ஹொலியங் ஸ_ எடுத்துக் கூறினார். அதேபோல இலங்கை ஐ.நாவில் அங்கத்துவம் பெற்ற 60 வருடத்தையும் ஐ,நா அமைப்பு ஸ்தாபிக்கப்பட்ட 70வது வருடத்தையும் நினைவுகூறும் 70, 60 எனும் பிரசாரத் திட்டத்தை அமைச்சு ஐ.நாவுடன் இணைந்து முன்னெடுத்தமைக்கு அவர் நன்றியினையும் தெரிவித்துக் கொண்டார்.

யாழ். சங்கானை பொதுநூலக திறப்பு விழா-

saraswathiயாழ். சங்கானை பொதுநூலக திறப்புவிழா அண்மையில் நடைபெற்றது இதன்போது வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் தனது மாதாந்த கொடுப்பனவு வாயிலாக நூலகத்தின் முகப்பில் சரஸ்வதி சிலை ஒன்று வைக்கப்பட்டு நிகழ்வில் கலந்துகொண்ட பிரதம விருந்தினரான பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தழிழரசுக் கட்சியின் தலைவருமாகிய கௌரவ. மாவை சோ. சேனாதிராஜா அவர்களால் திரைநீக்கம் செய்யப்பட்டு, யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ. அப்பாத்துரை விநாயகமூர்த்தி அவர்களால் மலர்மாலை அணிவிக்கப்பட்டது. வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் 2011ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது முதலாக தனது மாதாந்த கொடுப்பனவுகளை போரால் பாதிப்புக்குள்ளானவர்கள் மற்றும் சமூகநலத் திட்டங்களுக்கும் வழங்கி வருகின்றமையை இங்கு குறிப்பிடக்கூடிய ஒன்றாகும்.

19வது திருத்தச் சட்டம்: சில பிரிவுகளுக்கு வாக்கெடுப்பு-

parliament19வது திருத்தச் சட்டம் அரசியலமைப்புக்கு முரணானது அல்ல என சபாநாயகர் சமல் ராஜபக்ஷ பாராளுமன்றத்துக்கு தெரிவித்துள்ளார். எனினும் அதிலுள்ள சில பிரிவுகளில் சிக்கல் இருப்பதால் அது மக்கள் வாக்கெடுப்புக்கு விடப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, குறித்த சிக்கலான பிரிவுகளை நீக்குவதாக கூறியுள்ளார். 19ம் திருத்தச் சட்டம் குறித்த உயர் நீதிமன்றத்தின் கருத்தை அண்மையில் அரசாங்கம் வினவியிருந்தது. நீதிமன்றம் இது பற்றிய தன் பரிந்துரையை சபாநாயகரிடம் கூறியிருந்தது. இதனை சபாநாயகர் இன்று பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார். மேலும் இன்றுமாலை 03.00 மணியளவில் இது பற்றி கலந்துரையாட கட்சித் தலைவர்கள் சந்திப்பு பாராளுமன்றில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் ரயில் கடவை காப்பாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்-

arpattamவவுனியா ரயில் நிலையத்திற்கு முன்பாக, ரயில் கடவை காப்பாளர்கள் இன்று முற்பகல் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். சம்பள உயர்வு மற்றும் நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரியே இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. மதவாச்சி – மன்னார், வவுனியா – புளியங்குளம் ரயில் மார்க்கங்களில் கடந்த 20 மாதங்களாக ரயில் கடவை காப்பாளர்களாக பணிபுரியும் தமக்கு 7500ரூபா சம்பளமே வழங்கப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்துடன் தமக்கு இதுவரை நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை எனவும் ரயில் சுட்டிக்காட்டியுள்ளனர். வவுனியா ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்றுகாலை 10 மணியளவில் ஒன்றுதிரண்ட ரயில்கடவை காப்பாளர்கள், சுமார் ஒரு மணிநேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் பின்னர், அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

பிரபல தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார்-

eluthalarபிரபல தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தன், தனது 81 வயதில் சென்னையில் நேற்றிரவு காலமானார். எழுத்தாளர் ஜெயகாந்தன், சென்னை கே.கே.நகர் நாகாத்தம்மன் கோயில்தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், சில நாட்களுக்கு முன் சிறுநீரக பாதிப்பால் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியிருந்த நிலையில், நேற்றிரவு மீண்டும் சுகயீனமுற்று மரணமடைந்துள்ளார். இந்திய அரசின் இலக்கியத்திற்கான உயர்ந்த விருதான ஞானபீட விருதை பெற்ற 2ஆவது தமிழ் எழுத்தாளர் என்ற சிறப்பை பெற்றவர் இவர். சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள், திரைப்படங்கள் என பலவற்றில் கால்பதித்தவர். 1934ல் கடலூரில் பிறந்த இவர், பள்ளிப்படிப்பில் நாட்டம் இல்லாமல் 5ம் வகுப்புடன் தனது படிப்பை முடித்தார். பின் விழுப்புரத்தில் மாமா வீட்டில் வளர்ந்த அவர், சென்னைக்கு குடிபெயர்ந்தார். சமூக நலனில் அக்கறையும், இலக்கியத்தில் மிக ஈடுபாடும் கொண்ட அவர் பல நாவல்களையும், ஏராளமான சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார். பத்ம பூஷண் விருது, சாகித்ய அகடமி விருதை என்பவற்றையும் பெற்றுள்ளார். மரணமடைந்த ஜெயகாந்தனுக்கு காதம்பரி, தீபலட்சுமி என்ற இரு மகள்களும், ஜெயசிம்மன் என்ற மகனும் உள்ளனர்.

பிரபல பாடகர் நாகூர் ஹனிபா காலமானார்-

hanifaபிரபல பாடகர் நாகூர் ஹனிபா உடல்நலக்குறைவால் தனது 90ஆவது வயதில் சென்னையில் நேற்று காலமானார். இறை அருள் பாடகர் என்றும் இசை முரசு என்றும் அவரது ரசிகர்களால் புகழப்பட்ட நாகூர் ஹனிபா, இஸ்லாமிய பாடல்களையும், திராவிட இயக்கப் பாடல்களையும் பாடியதன் மூலம் புகழ் பெற்றவர். சென்னை கோட்டூர்புரத்தில் வைக்கப்பட்டிருந்த நாகூர் ஹனிபாவின் பூதவுடலுக்கு தி.மு.க தலைவர் கருணாநிதி உட்பட பலரும் அஞ்சலி செலுத்தியிருந்தனர். அதன் பிறகு ஹனிபா அவர்களின் உடல் அவரது சொந்த ஊரான நாகூருக்கு எடுத்துச் செல்லப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

மண்டைதீவில் படகு கவிழ்ந்து ஒருவர் பலி-

drawnயாழ். ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காக்கைத்தீவு, மண்டைதீவு கடலில் மீன்பிடிக்கச் சென்றவர்களின் படகு கவிழந்து விபத்துக்குள்ளானதில் குருநகர், 2ஆவது ஒழுங்கையைச் சேர்ந்த சத்தியசீலன் ராஜீவன் (வயது 29) என்பவர் மரணமடைந்துள்ளார். நேற்று இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில், அந்த படகில் நால்வர் பயணித்துள்ளதாகவும் ஏனைய மூவரும் எவ்விதமான ஆபத்தும் இன்றி கரைதிரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

பூட்டான் பிரதமர் இலங்கைக்கு விஜயம்-

bhutan primeபூட்டான் பிரதமர் சேரிங் ரொப்கேய் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். இன்று காலை 10.45அளவில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். அவர் மூன்று நாட்கள் இலங்கையில் தங்கியிருப்பார். இந்த காலப்பகுதியில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை சந்திக்கவுள்ளார். அவர் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டே இலங்கை வந்துள்ளார். இவருடன் 12 பேர் அடங்கிய குழுவினர் வருகை தந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

‘அகதி வாழ்விற்கு ஏது தீர்வு’ வவுனியா சிதம்பரபுர மக்கள் விசனம் ..!!(படங்கள் இணைப்பு)

sithamparapuram04வவுனியா, சிதம்பரபுரம் நலன்புரிநிலைய மக்கள் தமக்கு குடியிருப்பதற்கு காணி வழங்கக் கோரி வவுனியா மாவட்ட செயலகம் முன்னால் இன்று (08ஃ04) ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதியம் மாவட்ட செயலகத்துக்கு விஜயம் செய்த தமீழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்(புளொட்) வவுனியா மாவட்ட இணைப்பாளரும் வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களிடம் மக்கள் தமது இன்னல்களை கூறியதையடுத்து, தான் இதற்கு உடனடியாக நடவடிக்கை  மேற்கொள்வதாக தெரிவித்தமையை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. Read more

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களின் கூட்டம்-

tna (4)தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்;கின்ற நான்கு கட்சிகளின் தலைவர்களின் கூட்டம் இன்று முற்பகல் கொழும்பு மாதிவெலயில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிறேமச்சந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள். இந்தக் கூட்டத்தின்போது முதலில் சுன்னாகம் மின் உற்பத்தி நிலையத்தினால் ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற நிலத்தடி நீர் பிரச்சினை சம்பந்தமாக விரிவாக ஆராயப்பட்டது. இது சம்பந்தமான நிபுணர்குழு இது குடிப்பதற்கு பாதுகாப்பான தண்ணீர் என்று இறுதி அறிக்கையிடும் வரைக்கும் தொடர்ந்தும் குடிநீர் விநியோகத்தை மேற்கொள்ள வேண்டும், தண்ணீர் இன்னும் தேவைப்படுமிடத்து மேலதிக நீர் விநியோகத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், இதற்காக மாகாண சபை மற்றும் பிரதேச சபைகளின் ஊடாக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென கூட்டமைப்புத் தலைவர்கள் தீர்மானித்தார்கள். தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் புரிந்துணர்வு உடன்படிக்கை சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது. இதில் இருக்கின்ற விடயங்கள் சம்பந்தமாக தமிழரசுக் கட்சி கூடி ஒரு முடிவை எடுத்த பின்புதான் தாங்கள் இறுதி முடிவினை எடுக்க முடியும் என்று மாவை சேனாதிராஜா அவர்கள் தெரிவித்தார். ஆகவே அதற்காக அவகாசம் கொடுக்கப்பட்டு, வருகின்ற 17, 18ம் திகதிகளில் யாழ்ப்பாணத்தி;ல் கூடி இறுதி முடிவினை எடுப்பதென தீர்மானிக்கப்பட்டது.

வலி மேற்கு பிரதேச வேலைத்திட்டங்களை புளொட் தலைவர் பார்வையிட்டார்-

ST meetயாழ்ப்பாணம் வலி மேற்கு பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான கௌரவ. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் வலி மேற்கு பிரதேசத்தில் தன்னால் ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்ட மாகாண சபை நிதி ஒதுக்கீடுகள் வாயிலான திட்டங்களை நேரில் பார்வையிட்டதுடன் சமூக மட்ட அமைப்பின் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

பாணந்துறை நகர சபையில் கைகலப்பு-

panaduraபாணந்துறை நகர சபையில் நகரசபை உறுப்பினர்களுக்கும் உழியர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கைகலப்பின்போது மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது காயமடைந்த உறுப்பினர் மகேஷ் பெர்ணான்டோ, நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர்மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் திட்ட நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் திணைக்களம் அறிவித்துள்ளது. பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இத்தாலி செல்ல முயன்ற மூவர் கைது-

arrest (30)மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து திருப்பியனுப்பப்பட்ட இலங்கை பிரஜைகள் மூவரை கைதுசெய்துள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போலியான ஆவணங்களை பயன்படுத்தி மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்று அங்கிருந்து இத்தாலிக்கு தப்பியோட முயன்ற மூவரே நாட்டுக்கு திருப்பியனுப்பப்பட்டனர். அந்த மூவரும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாடு திரும்பியபோதே கைதுசெய்யப்பட்டனர் என்றும் அத்திணைக்களம் அறிவித்துள்ளது. சந்தேகநபர்கள், யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவருகின்றது. அந்த மூவரும் தங்களுடைய உண்மையான கடவுச்சீட்டை பயன்படுத்தி டுபாய் மற்றும் ஓமானுக்கு சென்று அந்நாடுகளிலிருந்து போலியான விசா மற்றும் ஆவணங்களை பயன்படுத்தி இத்தாலி செல்வதற்கு முயன்றபோதே அம்மூவரும் அந்நாடுகளிலிருந்து திருப்பியனுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மண்மேடு சரிந்து விழுந்து இருவர் பலி, இருவரை காணவில்லை-

land slideஇரத்தினபுரியில் இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்டிந்தவர்கள் மேல் மண்மேடு சரிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காணாமல்போன இருவரை தேடும் பனிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

ரயிலில் மோதுண்டு இளைஞர் மரணம்-

trainமட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கடுகதி ரயிலில் மோதுண்டு 22வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏறாவூர் மாவடிவேம்பு பிரதேசத்தில் நேற்றிரவு 9மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாவடிவேம்பு பகுதியைச் சேர்ந்த பத்மநாதன் சதீஸ்வரன் என்ற இளைஞனே பலியானவராவார். இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

தொல்புரம் சக்தி முன்பள்ளியின் கால்கோள் விழா

kaal kol vilaயாழ். தொல்புரம் சக்தி முன்பள்ளியின் கால்கோள் விழா தொல்புரம் சக்தி முன்பள்ளியில் அண்மையில் இடம்பெற்றது. இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். முன்னதாக மழலைகளின் மேலத்தேய கருவிகள் முழங்க மரியாதை அணிவகுப்புடன் பிரதம விருந்தினர் அழைத்து வரப்பட்டார். தொடர்ந்து நிலையத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்ட சிறுவர் நிகழ்வினைத் தொடர்ந்து பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வலிமேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் உரையாற்றுகையில், Read more

அமரர் தோழர் எட்வேட் வில்சன் அவர்களின் இறுதிக்கிரிகைகள் 09.04.2015 வியாழக்கிழமை

img141யாழ். புலோலி, பருத்தித்துறையை பிறப்பிடமாகவும், வவுனியாவை வாழ்விடமாகவும்,  பிரான்ஸை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திரு.திருமதி சூசைதாசன், ரஜினா ரட்னமணி அவர்களின் அன்பு மகன் எட்வேட் வில்சன் அவர்கள் 25.03.2015 புதன்கிழமை பிரான்ஸில் மரணமெய்தினார் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் தவச்செல்வியின் அன்புக் கணவரும், கார்மேகவர்ணன், சுவேதனா, துவாரகன் ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார். முன்னர் ஈழ விடுதலைப் போராட்டத்துடன் தொடர்புகளை பேணிவந்த இவர் அண்மைக்காலங்களாக பிரான்ஸ் நாட்டில் எமது அமைப்பின் செயற்பாட்டாளராக இயங்கி வந்தார். Read more