புன்னாலைக்கட்டுவன் வடக்கு, முன்பள்ளியின் விளையாட்டுப் போட்டி-(படங்கள் இணைப்பு)
 யாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கு ஸ்ரீதுர்க்கா சனசமூக நிலைய முன்பள்ளியின் விளையாட்டுப் போட்டி நேற்று (04.07.2015) சனிக்கிழமை மாலை 3.15அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. இடம்பெயர்ந்த இப்பகுதி மக்கள் தற்போது மீள்குடியேறியுள்ள நிலையில்; சுமார் முப்பது வருடங்களுக்குப் பிறகு இந்த சனசமூக நிலைய முன்பள்ளியில் விளையாட்டுப் போட்டி நடைபெற்றுள்ளது.

சமூக ஆர்வலர் திரு. கெங்காதரன் அவர்களது ஏற்பாட்டில் ஸ்ரீதுர்க்கா சனசமூக நிலையத் தலைவர் திரு. இ.விஸ்வரஞ்சன் அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், வட மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. அவர்கள் தர்மலிங்கம் சித்தார்த்தன் கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டியினை ஆரம்பித்து வைத்தார். நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக பே.மயூரதன், (முன்னாள் கிராமசேவையாளர், புன்னாலைக்கட்டுவன் வடக்கு), அ.ரஜீபன் (கிராம சேவையாளர், புன்னாலைக்கட்டுவன் வடக்கு) ஆகியோரும், கௌரவ விருந்தினர்களாக பிரபாலினி புவனனேந்திரன் (உப அதிபர், யாழ். ஏழாலை மேற்கு சைவசன்மார்க்க வித்தியாலயம்), குமாரசிவம் சுரேந்திரன் (அரசாங்க நில அளவையாளர், கிளிநொச்சி) ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது முன்பள்ளி சிறார்களுக்கான விளையாட்டுப் போட்டிகளுடன், பெற்றோர்,மற்றும் இக் கிராமச் சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் என பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்று, அதனைத் தொடர்ந்து பரிசில்கள் வழங்கிவைக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.