சுழிபுரம் நாவலர் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா-

676யாழ். சுழிபுரம் நாவலர் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இவ் நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதய வட மாகாண சபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் கௌரவ. விருந்தினராக கலந்து சிறப்பித்துக் கொண்டனர்.

இவ் நிகழ்வில் கௌரவ. விருந்தினராக கலந்து சிறப்பித்த வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் கௌரவ. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் உரையாற்றுகையில் இனறு இவ் நிகழ்வில் கலந்துகொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன். இன்று இவ் மலைகள் இவ் நிகழ்சசிகளில் பங்கு பற்றுகின்ற ஆர்வம் அவர்கள் கொண்டுள்ள விருப்பம் அவர்களின் மனதில் கொண்டுள்ள மகிழ்ச்சியினை வெளிப்படுத்தி நிற்கிறது. இவ்வறான மகிழ்வான நிலைகள் கற்றல் கற்பித்தல் சூழல்களில் ஏற்படும் சந்தர்ப்பத்தில் மாணவர்களின் கற்றல் திறன் பன் மடங்கு அதிகரிப்பதற்கன சந்தர்ப்பத்தினை உருவாக்கும்.

எவ்வறாயினும் மாணவர்களின் கற்றல் நிலைகளில் மகிழ்ச்சியான நிலை உருவாக்கம் என்பது மிக மிக முக்கியமான ஒன்றாகவே உள்ளது. மாணவர்கள் விரும்பிக் கற்கும் நிலை மிக முக்கியமன ஒன்றாக அமைகின்றது. இதேவேளை மாணவர்களின் கல்வி நிலையினைப் பொறுத்த வரை விளையாட்டும் அதனோடு சார்ந்த விடயங்களும் மேலும் முக்கியமானதாகவே உள்ளது. பெற்றோர்கள் வெறுமனே புத்தக கல்விக்கு அப்பால் விளையாட்டுத்துறை சார்ந்தும் மாணவர்களை ஊக்கு விக்க 676 unnamed (6) unnamed (5) unnamed (4)கூடியவர்களாக மற்றம் அடைய வேண்டும். இந்த வகையில் மாணவர் மத்தியில் புதிய சிந்தனைகளும் ஆற்றல்களும் உருவாகக்கூடிய நிலை உருவாகும். மிக நீண்ட காலமாக நடை பெற்ற அழிவாயுத யுத்தம் மௌனிக்கப்பட்ட நிலையில் தற்போது அறிவாயுத யுத்தம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இவ் நிலையில் இவ் அறிவாயுத யுத்தத்திற்கு தயாராணவர்களாக நாம் மாற்றம் அடைய வேண்டும். இவ் நிலையில் இன்றைய எமது மாணவர்களைத் தயார்ப்படுத்த நாம் அனைவரும் ஒன்றினைவது மிக முக்கியமான ஒன்றாகவே உள்ளது. இந்த வகையில் தயார் படுத்தலின் ஊடாகவே எதிர்கலத்தில் எமது இனத்தின் இலட்சியத்தினை எட்டமுடியும் என்று குறிப்பிட்டார்.