வவுனியாவில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்சபைக் கூட்டம்-

DPLFஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) பொதுச்சபைக் கூட்டம் வவுனியா கோவில்குளம் அறிவொளி இல்லத்தில் நேற்று (07.07.2015) செவ்வாய்க்கிழமை காலை 10மணியளவில் கட்சியின் தலைவர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சமகால அரசியல் நிலைமைகள், கட்சியினுடைய செயற்பாடுகள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் மற்றும் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் என்பவை தொடர்பாக ஆழமாக கலந்துரையாடப்பட்டது.

இறுதியாக யாழ் மாவட்டத்திற்கு திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களையும், மட்டக்களப்பு மாவட்டத்திற்கு திரு. சதாசிவம் வியாளேந்திரன் (அமல் மாஸ்டர்) அவர்களையும் வேட்பாளராக நியமிப்பது என்று தீர்மானிக்கப்பட்டதுடன், மற்றைய மூன்று மாவட்டங்களுக்குமான வேட்பாளர்களை நியமிப்பதற்கு தலைவருக்கும் செயலாளருக்கும் அதிகாரம் வழங்கப்பட்டது.

குறிப்பு: இன்று (08.07.2015) புதன்கிழமை திரு. கந்தையா சிவநேசன் (பவன்) அவர்களை வன்னி மாவட்ட வேட்பாளராக நியமிப்பது என்று முடிவெடுத்துள்ளதாக கட்சியின் தலைவர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் தெரிவித்தார்.

IMG_9896IMG_9899IMG_9878IMG_9879IMG_9880IMG_9892IMG_9903